2019 புத்தாண்டு பலன்கள் மிதுன ராசி – New year Rasi Palan 2019 Mithuna Rasi

Puthandu rasi palan 2019 Mithuna Rasi - New Year Rasi palan Mithuna Rasi 2019 in Tamil

15,536

2019 புத்தாண்டு பலன்கள் ராசி பலன்கள் மிதுன ராசி

(New Year Rasi Palan 2019 Mithuna Rasi – Puthandu Rasi Palan Mituna Rasi 2019 in Tamil)

ராகு,கேது பெயர்ச்சி பலன்கள் மிதுன ராசி (Rahu Ketu Payarchi Palangal 2019 – Rishaba Rasi)

மிதுன ராசிக்காரர்களுக்கு 2019 எப்படி இருக்க போகின்றது???

புக்தியை பயன்படுத்தி எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வருவதற்கு விடை தெரிந்து வைத்திருக்கும் மிதுன ராசி அன்பர்களே

உங்களுக்கு இந்த2019 ஆங்கில புத்தாண்டு எப்படிஇருக்க போகின்றது.??
இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் குருபகவானும்,ஏழாம் இடத்தில் சனி பகவானும் ,2, 8 ல் ராகு கேதுக்களும் சஞ்சாரம் செய்து கொண்டு உள்ளனர்.

குரு ஆறிலே வர உறவிலே,ஊரிலே பகை என்று வரும். குரு வந்தவுடன் உங்களை கடன் வாங்க வைத்தார். சிலருக்கு வந்தவுடன் நீண்ட காலம் நண்பர்களாக இருந்தவர்களை கூட பகையாக மாற்றினார். குரு ஆறிலே இருப்பது சிறப்பில்லை என்றாலும், மிதுன ராசிக்கு இரண்டு கேந்திரங்களுக்கு அதிபதியான குரு ஆறிலே மறைந்து பத்தாமிடத்தை பார்ப்பது சிறப்பு. தொழில் சிறக்கும்.

பத்தாமிடத்தை பத்தாம் அதிபதி பார்ப்பது சிறப்பு. எந்த ஒரு கிரகமுமே தன்வீட்டை தானே பார்ப்பது சிறப்பு. அந்த வகையில் குரு பத்தாம் இடத்தை பார்த்து சொந்த தொழில் செய்பவர்களுக்கு 2019 ஒரு பொற்காலமாக அமையவிருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.

சிலருக்கு பதவிஉயர்வு, சம்பள உயர்வு, மூத்தவர்களை,சீனியர்களை தாண்டி பதவி உயர்வு, வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைப்பது, தொழிலில் அசுர வளர்ச்சி போன்ற நற்பலன்களை பத்தாமிடத்தை பார்த்த குரு உங்களுக்கு தொழிலின் மூலமாக உங்களை உயர்த்துவார்.

மிதுன ராசிக்கு சனிபகவான் ஒன்பதாம் அதிபதி. ஒன்பதாம் அதிபதி ராசியை பார்த்து கொண்டு உள்ளார். பாக்கியாதிபதி ராசியை பார்ப்பது யோகம். பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பது யோகம். ஒன்பதாம் அதிபதி ஏழில் இருந்து ஒன்பதாம் வீட்டை பார்க்கிறார்.தகப்பனாரால் ஆதாயம்,லட்சுமி கடாட்சம், அனைத்து பாக்கியங்களையும் மிதுன ராசிக்காரர்கள் அடைய இருக்கிறீர்கள்.

ஒன்பதாம் அதிபதி ஒன்பதாம் இடத்தை பார்த்து, பத்தாம் அதிபதி பத்தாம் இடத்தை பார்த்து, மறைமுகமான தர்ம கர்மாதிபதியோகம் யோகம் செயல்படுவதால் இந்த 2019 ஆங்கில புத்தாண்டில் உங்கள் சமூக அந்தஸ்து, கௌரவம் ,பொருளாதாரம் உயரும்.உங்களுக்கு பேரும் ,புகழும் கண்டிப்பாக கிடைக்கும்.

ராகு உங்களுக்கு 2019 மார்ச் மாதத்திற்கு பிறகு ஜென்மத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். மிதுன ராசிக்கு ராகு யோகர். இந்த ராகு தன்னுடன் சேர்ந்த,பார்த்த ,தான் இருக்கும் இடத்தின் பலனை செய்வார் என்ற விதிப்படி பாக்கியாதிபதி சனி ராகுவை பார்ப்பதால் பாக்கியாதிபதி சனியின் பலனை பிடுங்கி ராகு தருவார் என்பதால் ராகு சனியாகவே மாறி, பாக்கியாதிபதி யாகவே மாறி நல்ல பலன்களை தருவார்.

கேதுபகவான் ஏழில் வருவது தோசம். ஏழாமிடதa்தோடு ராகு,கேது,சனி போன்ற இருள் கிரகங்கள் தொடர்பு பெறுவதால் மிதுன ராசிக்காரர்களின் மனைவிக்கு பீடைகள் உண்டாகும்.மனைவிக்கு உடல்நிலை தொந்தரவுகள் உண்டாகும். மனைவி வகையில் உங்களுக்கு விரையங்கள் இருக்கும்.

அதேபோல ஏழாமிடம் என்பது நாலுக்கு நாலு என்பதாலும் மிதுன ராசிக்காரர்களின் தாயாருக்கும் பீடைகள் உண்டாகும். உங்கள் வீடு,வாகனம், தாயார், நாலுகால் பொருள் போன்றவற்றில் லாபம் குறைவாக இருக்கும். வீடு கட்டும் மிதுன ராசிக்காரர்களுக்கு கட்டிடம் கட்டுவதில் சிரமங்கள் இருக்கும். சிலருக்கு வீடு,மனைகள் விற்பதிலும் தாமதம் இருக்கும்.வீடு,மனைகள் வாங்குவதை சிறிது காலத்திற்கு ஒத்தி வைக்கவும்.

நாலுக்கு நாலில் பாவக்கிரகங்கள் சம்பந்தப்பட்டு, சனியும் ஏழில் இருந்து நான்கை பார்ப்பதால் வீட்டில் களவு போக,திருட்டு போக வாய்ப்புகள் உள்ளது. வெளியூர் செல்லும் போது வீடு ,மற்றும் உங்கள் உடைமைகளை பாதுகாக்க முன்னேற்பாடுகளை செய்து விட்டு போங்கள். லொடுக்கு பாண்டிகளிடமிருந்து உங்கள் உடைமைகளை பாதுகாத்து கொள்ளுங்கள்.

ஏழாமிடத்தில் உள்ள பாவர்களால் மார்ச் மாதத்திற்கு பிறகு மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆண் ,பெண் இருபாலருக்கும் வேற்றினத்து ஆண்,பெண் சகவாசங்கள் ஏற்படும்.
இது சுயஜாதகத்தில் ஏழாமிடத்தில் ராகு+,சனி , ராகு+செவ் ,போன்ற கிரகங்கள் இருந்து அவர்களின் தசாபுக்தி நடக்குமாயின் இந்த 2019 ல் அவர்களுக்கு கலப்பு திருமணம்,காதல் திருமணம் நடைபெறும்..இது அவர் அவர்களின் வயது,நடக்கும் தசாபுக்திகளை பொறுத்தது.

நிறைய அலைக்கழிப்புகள் மார்ச் மாதத்திற்கு பிறகு இருக்கும். இங்கிருந்து அங்க,அங்கிருந்து இங்க என்று அலைச்சல்கள் இருக்கும். சிலசமயங்களில் மனக்குழப்பங்கள் ஏற்படும். அதிகமாக உழைக்க வேண்டி வரும். 2019 உழைப்பால் உயரும் ஆண்டாக இருக்கும்.

11.4.2019 யிலிருந்து 11.8.2019 இந்த காலகட்டத்தில் நிறைய பணவரவுகள்,எடுத்த காரியத்தில் வெற்றி, ஜெயம் உண்டாகும். பதவி உயர்வுகள், சம்பள உயர்வுகள், விரும்பிய இடத்திற்கு இடமாறுதல்கள் இருக்கும். குழந்தைகள் மூலம் நன்மைகள் கிடைக்கும். தீர்த்த யாத்திரைகள் ஏற்படும். ஏன்னா அந்த காலத்தில் குரு வக்ர கதியில் சஞ்சாரம் செய்வார்.

இந்த 2019 ல் மாணவர்களுக்கு கடினமான ஆண்டாக இருக்கும். படிப்பு தவிர இதர விஷயங்களில் கவனம் செலுத்தாமல் கடினமாக, கஷ்டப்பட்டு படித்தால் வெற்றி நிச்சயம்.

அரசியல்வாதிகளுக்கு பணியில் அதீதமான கவனம் தேவை.நேர்மையாக இருந்தால் உங்கள் மதிப்பு, மரியாதை ,அந்தஸ்து கூடும். சிலரின் மீது மேலிடத்து நடவடிக்கைகள் பாயும். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகளுக்கு லாபம் குறைவாக இருக்கும். பெண்கள் கணவரின் பேச்சை கேட்டு நடந்து வர ,அதிகமாக விட்டு கொடுத்து செல்ல குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

மொத்தத்தில் இந்த 2019 ம் ஆண்டு தர்ம கர்மாதிபதியோகம் இருப்பதால் பேரும், புகழும் கிடைத்து ,சுயமுன்னேற்றமும்,சமூக அந்தஸ்தும், சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் உயரக்கூடிய ஆண்டாக இருக்கும். உழைப்பால் உயரக்கூடிய ஆண்டாக,அலைக்கழிப்புகள் இருக்கும் ஆண்டாக, லேசான மனக்குழப்பங்கள் இருக்கும் ஆண்டாக, தொழில் சிறக்கும் ஆண்டாக, தாயார், நில விவகாரங்களில்
சாதகமற்ற ஆண்டாக ,நன்மைகளும் ,தீமைகளும் கலந்த நல்ல ஆண்டாக இருக்க போகின்றது என்பதில் சந்தேகமில்லை.

பரிகாரம்

திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் சென்று ராகு,கேதுக்களுக்கு பால் அபிஷேகம் செய்து கொள்ள ,அருகில் உள்ள சுயம்புவாக உருவான புற்றுக்கோவிலுக்கு சென்று வர ராகு ,கேதுவால் வரக்கூடிய தோசங்கள் விலகும்.

பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து, பச்சை பட்டு எடுத்து சாற்றி ,ஐந்து வகையான கனிவர்க்கங்களை அவருக்கு படைக்க வேண்டும்.ஆப்பிள், ஆரஞ்சு ,திராட்சை போன்றவற்றில் திராட்சை பச்சை திராட்சையாக இருக்க வேண்டும்.

பெருமாள்(விஷ்ணு) புளிப்பு பிரியர் என்பதால் அவருக்கு புளியோதரை, தயிர் சாதம் படைத்து ,ஒரு பத்து பேருக்கு உங்கள் கையால் கொடுத்துவர
உங்கள் ராசிக்கு பரிகாரமாக அமையும்.

வாழ்க வளமுடன்.
நன்றி வணக்கம்

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More