2019 புத்தாண்டு பலன்கள் ரிஷப ராசி – New year Rasi Palan 2019 Rishaba Rasi

Puthandu rasi palan 2019 Rishaba Rasi - New Year Rasi palan 2019 in Tamil

33,896

2019 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் ரிஷப ராசி

(New Year Rasi Palan 2019 Rishaba Rasi – Puthandu Rasi Palan Rishaba Rasi 2019 in Tamil)

ராகு_கேது பெயர்ச்சி பலன்கள்  ரிஷப ராசி (Rahu Ketu Payarchi Palangal 2019 – Rishaba Rasi)

ரிஷப ராசிக்காரர்களுக்கு 2019 எப்படி இருக்க போகின்றது???

பூமியை போன்ற பொறுமையை உடைய ரிஷப ராசி நேயர்களே, உங்களுக்கு தற்போது குரு ஏழிலும், சனி அஷ்டமம் என்னும் எட்டாமிடத்தில் அஷ்டமச்சனி யாகவும், ராகு கேதுக்கள் முறையே 3, 9 ம் இடங்களில் சஞ்சாரம் செய்து கொண்டு உள்ளார்கள்.

உங்கள் ராசியை ஏழில் குரு நின்று ராசியை பார்த்து கொண்டு உள்ளார். குரு லக்னத்தையோ,ராசியையோ பார்ப்பது யோகம்.
மலையளவு துன்பம் வந்தபோதிலும் ,சூரியனை கண்ட பனிபோல துன்பங்கள் குருவின் பார்வை பலத்தால் விலகும். குருபகவான் வரக்கூடிய எல்லா தொல்லைகளையும் விலக்கி கொண்டு உள்ளார்.

என்னதான் குரு ராசியை பார்த்து கொண்டு இருந்தாலும் சனி எட்டில் இருந்து குடும்ப, பஞ்சம,தொழில் ஸ்தானத்தை பார்த்து கொண்டு இருப்பதாலும், இதுவரை உங்கள் ராசிக்கு 3,9 ல் இருந்து நல்ல பலன்களை ,சுபபலன்களை வாரி வழங்கி வந்த ராகு கேதுக்களாகிய பாம்பு கிரகங்கள் 6.3.2019 அன்று உங்கள் ராசிக்கு 2, 8 ல் வந்து அமரப்போகின்றார்கள். பொதுவாக 2,4,7,8,12 ல் பாவக்கிரகங்கள் இருப்பது நல்லதல்ல.

அப்படி 2,8 வந்து அமரக்கூடிய ராகு கேதுக்கள் இன்னொரு பாவக்கிரகமான சனியுடன் சேர்க்கை,பார்வை போன்ற தொடர்புகளை ஏற்படுத்தி சகவாச தோசத்தை பெற்று ரிஷப ராசிக்காரர்களுக்கு , தனம், குடும்பம், வாக்கு போன்றவற்றில் பிரச்னைகளை ஏற்படுத்துவார்.என்ன மாதிரியான பிரச்னைகள் என்று பார்ப்போமா???

மொதல்ல ஒன்று நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.6.3.2019 வரை உங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. குரு பார்வை ஓரளவுக்கு எல்லா வற்றையும் சமாளித்து விடும். பிரச்னைகள் வெளியே தெரியாது. கௌரவம் காக்கப்படும். விபத்துகள் தவிர்க்கபடும். கடன்காரன் நெருக்க மாட்டான். கடன்காரனுக்கு வட்டியை கொடுத்து விடுவீர்கள். அதேபோல் கடன் வாங்கி கடனை அடைத்து விடுவீர்கள். ஆனால் கடன் வாங்கி கடனை அடைப்பதால் அடுத்து வரும் காலங்களில் கடன் வட்டி போட்டு, வட்டி குட்டிபோட்டு தீராக்கடனில் மாட்டி அவஸ்தை படுவீர்கள். என்னதான் குருபலன் இருந்தாலும் அஷ்டம சனி நடக்கிறது என்பதை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த காலங்களில் புதிய தொழில் முயற்சிகள் வேண்டாம். பேராசை படவேண்டாம்.அகலக்கால் வைக்க வேண்டாம். இந்த அஷ்டமச்சனி காலங்களில் புதியதாக அறிமுகம் ஆகும் நபர்களால் எதிர்காலத்தில் பிரச்னைகள் இருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.
உங்களுக்கு புதியதாக நண்பர், காதலன், காதலி கிடைக்கிறாரா?? அவரால் எதிர்காலத்தில் கண்டிப்பாக பிரச்னைகள் இருக்கும்.

உங்கள் குடும்ப விஷயத்தில் மூன்றாவது நபர் தலையிடுவதை அனுமதிக்காதீர்கள்.அவர் சகுனியாக,சனியாக ,அயோத்தி கூனியாக வந்து குடும்பம் பிரிய காரணமாக இருப்பார்.குடும்ப விஷயங்களை ,ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம். காரணம் எட்டில் சனி இருந்து, இரண்டை சனி பார்த்து, கேது,+ராகு போன்ற பாவக்கிரகங்கள் இரண்டில் சம்பந்தப்படும்போது அதாவது 6.3.2019 க்கு பிறகு வார்த்தைகளில் நிதானம் தேவை.ரிஷபராசிக்காரர்கள் யாகாவராயினும் நாகாக்க வேண்டும். காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்கு பட்டு”

ஜனன ஜாதகத்தில் இரண்டு, ஏழு,எட்டு போன்ற இடங்களில் பாவக்கிரகங்கள் இருந்து அவர்களுடைய தசா புக்திகளும் நடக்கும் போது,
சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாது.. குறிப்பிட்ட தேதியில் நீங்கள் கொடுத்த செக்கு பணமில்லாமல் திரும்பி வந்து உங்கள் நற்பெயரை கெடுக்கும். வெளிநாட்டு வேலை கிடைத்து குடும்பத்தை விட்டு பிரிந்து கஷ்டப்படுவீர்கள்.தனியாக சமைத்து, தனியாக தூங்கி கஷ்டப்பட வைக்கும் இந்த இரண்டாம் இடத்தோடு சம்பந்தப்பட்ட பாவகிரகங்கள், .குடும்பத்தோடு சேர முடியாமல் தனிமை படுத்துவார்கள்.

யானை வரும் பின்னே: மணியோசை வரும் முன்னே என்பதுபோல , வருமானம் வருவதற்கு முன்னரே செலவுகள் முன்னாடியே காத்து கொண்டு இருக்கும். 1000 ரூபாய் வருமானம் வந்தால் 1500 ரூபாய்க்கு செலவுகள் வந்து வருமானம் குறைந்து செலவுகள் அதிகரித்து பற்றாக்குறையை ஏற்படுத்தி கடனை உண்டு பண்ணும்.

அஷ்டமச்சனி, இரண்டில் ராகு,கேதுக்கள் என்பதால் மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். புஸ்தகத்தை எடுத்தால் தூக்கம் தான் வரும். மாணவர்கள் அரியர்ஸ் வைத்து பின் தேர்ச்சி பெறுவார்கள்.

அரசியல்வாதிகள் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். கெட்ட பெயர், பதவி பறிபோக வாய்ப்புகள் உள்ளதால் யாரையும் நம்பவேண்டாம்.பேராசை படவேண்டாம்.. அதிகாரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம். ரொம்ப நேர்மையாக இருந்தால் அஷ்டமச்சனி ஒன்னும் பண்ணாது.

வியாபாரிகளுக்கு தொழிலில் அலைச்சல்கள் அதிகமாகி, லாபம் குறைவாக கிடைக்கும்.வேலைக்காரர்கள் மேல் எப்போதும் ஒருகண் இருக்கட்டும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு தொல்லைகள் இருக்கும் ஆண்டாக இந்த 2019 அமையும்.

விவசாயிகளுக்கு இந்த ஆண்டு லாபம் குறைவாக கிடைக்கும் .இந்த ராசிக்காரர்கள்
பயிர்செய்யும் பயிர்களில் பூச்சி தாக்குதல்கள் அதிகம் இருக்கும். செலவுகள் இரு மடங்காகும். அலைச்சல்கள் அதிகம் ஏற்படும். அறுவடை காலத்தில் தேவையற்ற காலங்களில் ,மழை பெய்து பயிர் நீர்ச்சாவியாக போகும். தேவையான நேரத்தில் மழைப்பொலிவு இருக்காது.

பொதுவாக இந்த ஆண்டு 2019 .மார்ச் 6 ந்தேதிக்கு பிறகு அதிகமான எச்சரிக்கை தேவை. இருந்தாலும் குருபகவானின் பார்வை பலத்தால் அனைத்தையும் சமாளிக்க முடியும். சனி பகவானுக்கு உரிய முறையான பரிகாரங்களை செய்து கொள்ள வரக்கூடிய எல்லா தொல்லைகளையும் விலக்க முடியும்.

அஷ்டமச்சனியிலிருந்து பாதிப்பை குறைத்து கொள்ள காலபைரவரை சனிக்கிழமை சனிக்கிழமை சென்று வழிபட்டு வரலாம்.

காலபைரவருக்கு ,,ஜாதகனுக்கு எத்தனை வயதோ அத்தனை மிளகை எடுத்து அதை சிவப்பு துணியில் சிறுமூட்டையாக கட்டி ,மண் அகல்விளக்கில் நெறய நல்லெண்ணெய் விட்டு இந்த மிளகு விளக்கு போட்டு வர சனியால் வரக்கூடிய பாதிப்புகள் குறையும். காலபைரவருக்கு சிவப்பு கலரில் மாலை அதாவது செவ்வரளி மாலை அணிவிக்க வேண்டும்.

சிவப்பு கலரில் பட்டு எடுத்து காலபைரவருக்கு சாற்றவேண்டும். ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, மாதுளம் பழம், செவ்வாழை போன்ற ஐந்து வகையான கனிவர்க்கங்களை காலபைரவருக்கு படைக்க வேண்டும்.

சிவப்பு கலரில் உள்ள இனிப்புகளை காலபைரவருக்கு படைத்து வர சனியால் வரக்கூடிய அத்துணை தொல்லைகளையும் சனியின் குருநாதரான காலபைரவர் விளக்குவார்.
சனி காலபைரவர் சொன்னால் தான் கேட்பார்.சனியின் குருநாதர் இந்த காலபைரவர்.

மேலும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் சனிஓரையில் ஒரு மாற்றுதிறனாளிக்கு ஊன்றுகோல் அல்லது மூன்று சக்கர சைக்கிள் அல்லது மூன்று சக்கர ஸ்கூட்டர் என்று அவர் அவர்களின் வசதிக்கு தக்கவாறு தானம் செய்ய சனியால் வரக்கூடிய அத்துணை தொல்லைகளையும் விளக்க முடியும். மாற்று திறனாளி என்பவர் சனியாவார்.
சனிக்கு முடவன் மந்தன் என்ற பெயரும் உண்டு. இதை பொதுஇடத்தில் வைத்து தானம் செய்யவும்.

தடைகளை தகர்த்தெறியும் வாயுபுத்திரனான ஆஞ்சநேயருக்கும் சனிக்கிழமை சனிக்கிழமை நெய்விளக்கு போட்டு வர சனியால் வரக்கூடிய அத்துனை தொல்லைகளையும் விலக்க முடியும்.

நன்றி வணக்கம்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More