2019 புத்தாண்டு பலன்கள் துலாம் ராசி – New year Rasi Palan 2019 Thula Rasi

Puthandu rasi palan 2019 Thula Rasi - New Year Rasi palan Thulam Rasi 2019 in Tamil

13,516

2019 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் துலாம் ராசி

(New Year Rasi Palan 2019 Thula Rasi – Puthandu Rasi Palan Thula Rasi 2019 in Tamil)

ராகு_கேது பெயர்ச்சி பலன்கள் துலாம் ராசி (Rahu Ketu Payarchi Palangal 2019 – Thula Rasi)

துலாம் ராசிக்காரர்களுக்கு 2019 எப்படி இருக்க போகின்றது???

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

உங்களுக்கு வரப்போகும் ஆங்கில புத்தாண்டு எப்படி இருக்க போகின்றது???
கிரகங்கள் சாதகமாக இருக்கின்றதா??அல்லது பாதகமாக இருக்கின்றதா என்பதை பற்றி விரிவாக ,விளக்கமாக,தெளிவாக தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

2019 ம் ஆண்டில் முழுமுதல் சுபகிரகமான குருபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்திலும், சனி பகவான் ராசிக்கு மூன்றாம் இடத்திலும்,
ராகு கேதுக்கள் முறையே 2019 மார்ச் மாதத்திற்கு பிறகு 9 , மற்றும் 3 ம்மிடங்களில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார்கள்.

பொதுவாக இந்த 2019ல் அதிகமான நன்மைகளை அடையும் ராசிகளுல் துலாமும் ஒன்று. முதலில் அந்தண கிரகமான, முழுமுதற் சுபக்கிரமான,மன்னவன்,பொன்னவன்,பிரகஸ்பதி, தேவகுரு,பெரிய மனிதர் என்று எல்லோராலயும் சிறப்பாக அழைக்கப்படும், நல்லது மட்டுமே செய்ய கடமைப்பட்டுள்ள குருபகவான் இவ்வருடம் உங்களுக்கு இரண்டாம் இடத்தில் இருந்து உங்களுக்கு நல்ல சுபபலன்களை வாரி வழங்க காத்து கொண்டு இருக்கிறார்.

“குரு பதினொன்று ஏழு ஒன்பான ,
கூறும் ஐந்து, இரண்டில் நிற்க,
திருமகள் கடாட்சம் உண்டாகும்
தீர்த்த யாத்திரை உண்டாகும்
சுபகாரியங்கள் உண்டாகும்
தரும தானங்கள் உண்டாகும்
தாய் தந்தை உதவிகள் உண்டாம்
அருமையும், பெருமையும் உண்டாம்
அரசசேவையும் உண்டாமே”

இது ரொம்ப ரொம்ப ஈசியான செய்யுள்.
குருபகவான் இரண்டாம் இடத்திலே சஞ்சாரம் செய்யும் போது லட்சுமி கடாட்சம் உண்டாகும்… லட்சுமி கடாட்சத்தால் பணம் நிறைய வரும்.
பணப்புழக்கம் அதிகரிக்கும். பேங்ல லோன் எதிர்பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு கல்வி கடன்,தொழில் கடன்,வீட்டுக்கடன் கிடைத்து தொழில் நன்கு அபார வளர்ச்சி பெறும்.

திருமணம் ஆகாத இந்த ராசியை சேர்ந்த ஆண்,பெண் இருபாலருக்கும் திருமணம் இனிதாக ,எந்தவித இடையூறுகளும்,எந்த பிரச்சினைகளும் இல்லாமல் ரொம்ப ஈசியாக நடந்து முடியும். துலாராசிக்காரர்களின் பிள்ளைகளுக்கும்,சகோதர சகோதரிகளுக்கும் கூட திருமணம் நடந்து முடிந்து விடும். ஏன்னா???வீட்டில் லட்சுமி கடாட்சம் உள்ளது. வீட்டில் ஏதாவது ஒரு சுபகாரியம் நடக்கும். கல்யாணம் ஆகியிருந்தா வளைகாப்பு நடக்கும்..

வளைகாப்பு நடந்திருந்தால் குழந்தை பிறந்து அது ஆண்குழந்தையாக இருந்து உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும்.12,13 ,14வயது பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு அந்த குழந்தைகள் பெரிய பெண்ணாகி ,திரட்டி சீர் நடக்கும். அதுவரை பகையாகி போன தாய்மாமன் உறவுகள் இந்த சுபகாரியத்தில் ஒன்று சேர்ந்து, உறவுகள் கூடி ,சந்தோஷம் கூடும். வீட்டில் எப்போதும் கூட்டம் இருந்து ஜே ஜே என்று இருக்கும்.

குழந்தைக்கு குலதெய்வ கோவிலில் தாய்மாமன் மடியில் அமர்த்தி காது குத்தும் பங்சன் அமோகமாக நடக்கும். வயதானவர்கள் காசி,ராமேஸ்வரம், கேதார்நாத் போன்ற இடங்களுக்கு புனிதப்பயணம் ,ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வார்கள். அரசாங்க உதவி, மேலிடத்து அனுகூலம், பெரிய மனிதர்கள் சப்போர்ட் கிடைக்க பெறும்.
தாய், தந்தை ஆதரவுகள் கிடைக்கப்பெற்று, அருமையாக,பெருமையாக பிழைக்க கூடிய வாய்ப்பை குருபகவான் இந்த 2019 ஆங்கில புத்தாண்டில் உங்களுக்கு வழங்க காத்து கொண்டு இருக்கிறார்

சனி பகவான் சஞ்சாரம்
__________________________

பொதுவாக சனி 3,6 ,11 ம் இடங்களில் மட்டுமே நன்மைகளை செய்வார். முப்பது வருடங்கள் நல்லா வாழ்ந்தவனும் இல்லை. முப்பது வருடங்கள் கெட்டவனும் இல்லை என்ற பழமொழி சனியை அடிப்படையாக வைத்தே சொல்லப்பட்டுள்ளது. முப்பது வருடங்களில் சனி ஏழரை வருடங்கள் மட்டுமே நல்லது செய்ய கூடிய அமைப்பில் இருப்பார்.

அந்த நல்ல காலம் இப்பொழுது உங்களுக்கு நடந்து கொண்டு உள்ளது.
பொன்,பொருள் சேர்க்கையெல்லாம் துலாம் ராசிக்காரர்களுக்கு உண்டாகும். திருமணத்திற்கு நகை எடுப்பீர்கள். பேங்க்ல அடமானத்தில் இருக்கும் நகையை திருப்பி விடுவீர்கள். அந்தளவுக்கு பணவரவுகள் இருக்கும்.

சனியின் ஸ்தான பலத்தினால் உங்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும். வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்.
வீடு வாசல் கட்டி நன்றாக பிழைக்க கூடிய யோகம் உண்டாகும். சிலருக்கு புதிய கார் வாங்கக்கூடிய யோகம் உள்ளது. அஷ்ட லட்சுமியும் உங்கள் வீட்டில் வசிக்க கூடிய அற்புதமான ,மகிழ்ச்சியான 2019.

ராகு கேது பெயர்ச்சி 2019
______________________

ராகு கேதுக்கள் நிழல் கிரகங்கள். பாவக்கிரகங்கள். அழுக்குடை கிரகங்கள். இவர்களும் 3,6,11ல் மிகுந்த நன்மைகளை தருவார்கள்.3,11 ல் விஷேஷமான பலன்களை தரும் இவர்கள் 6, ம்இடத்தில் மட்டும் பாவகிரகங்கள் சேர்க்கையோடு ,பார்வையோடு இருக்க வேண்டும். அது ஏன் என்று சிந்தித்து பாருங்கள்.

சரி மார்ச் மாதம் ஆறாம்தேதிக்கு பிறகு,கேதுபகவான் மூன்றில் வந்து அவரும் அவர் பங்குக்கு நன்மைகளை தரக் காத்து கொண்டு உள்ளார். கேது சனியோடு சேர்ந்து அவரை சுபவலுப்படுத்தி சனி ஐந்தாமிடத்தை பார்த்து குழந்தைகளாலும்,அந்நியர்களாலும் மிகுந்த நன்மைகளை அடையக்கூடிய ஆண்டாக 2019 இருக்க போகின்றது..

வேற்று இனம்,வேற்று நாட்டினர்,வேற்று மதத்தை சேர்ந்தவர்களால் நன்மைகள் நடக்கும் காலகட்டமாகும். இரும்பு, பெட்ரோல், கருப்பு நிறம்சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு,தோல் சம்பந்தமான, ஆன்மீக சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு ,வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு,அரசியல் வாதிகளுக்கு என பலதரப்பட்ட மக்களுக்கும் நன்மைகள் மட்டுமே நடக்க கூடிய ஆண்டாக 2019 நிச்சயம் இருக்க போகின்றது.

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்.. தன்னை பார்த்து பின்னை பாரு என்பார்கள். அதாவது தனக்கு மிஞ்சினால் தான் தானமும் தர்மமும்… அடுத்தவர்களுக்கு உதவி செய்ய கூடிய அளவுக்கு உங்களுக்கு பணம் வரவுகள் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். தானமும், தர்மமும் செய்து அடுத்த ஜென்மத்திற்கான புண்ணிய பலன்களை சேர்த்து வைத்துக் கொள்வீர்கள் இந்த 2019 ல்….

உங்களுக்கு ஜாதகத்தில் மிக மோசமான தசாபுக்திகள் நடந்தால் மட்டுமே இந்த பலன்கள் நடைபெறாது. உங்களுக்கு 6,8,12 ம் அதிபதிகள் தசை புக்திகள் சாதகமற்ற அமைப்பில் இருந்தால் ஒழிய ,
இந்த பலன்களில் குறைவுவர இடமில்லை. பொதுவாக அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் இந்த 2019 மிக யோகமான ஆண்டாக இருக்க போகின்றது.

இந்த ராசியை சேர்ந்த அரசியல் வாதிகளுக்கு பதவி கிடைக்கும். மக்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும்.
பாவகிரகங்கள் உபஜெய ஸ்தானத்தில்
சஞ்சரிப்பதால் தேர்தலில் வெற்றி கிடைக்கும். சிலர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல்,தேர்தலை நேரடியாக சந்திக்காமல் எம்.எல்.ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, நோகாமல் அன்னப்போஸ்டாக ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்க படுவார்கள்.

மாணவர்கள் நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். பெண் பிள்ளைகள் அதிக தேர்ச்சி பெறுவார்கள்.
விவசாயிகளுக்கு அமோகமான விளைச்சல்களையும்,தேவைக்கு மழை,தண்ணீர் வசதிகள் கிடைத்து,விளை பொருட்களுக்கு சந்தையில் நல்ல விலைகிடைத்து மனமகிழ்ச்சியாக இருக்கக்கூடிய ஆண்டு
இந்த 2019.

நேரம் நல்லா இருக்கும் போது எந்த தொழில் செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். இப்போது அறிமுகம் ஆகும் நண்பர்களால் ஆதாயங்கள் இருக்கும். இந்த சமயத்தில் கிடைக்கும் வேலைக்காரர்கள் விசுவாசம் உள்ளவர்களாக இருப்பார்கள். இந்த சமயத்தில் வரப்போகும் மனைவியால்,அவருடைய சொத்தால் ஜாதகனுக்கு நன்மைகள் உண்டாகும். காதலியும் அவ்வாறே.உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஒருவர் குடியேறுகிறார் என்று வைத்துக்கொள்வோம் ..அவரால் கூட நன்மைகள் இருக்கும்.எந்த தொழில் வேண்டுமானாலும் இப்போது நீங்கள் ஆரம்பிக்கலாம்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சியான,சந்தோசமான,திருப்பு முனையை தரக்கூடிய ஆண்டாக ,முன்னேற்றத்தை தரக்கூடிய ஆண்டாக ,நன்மைகள் மிக அதிகமாக நடக்ககூடிய ஆண்டாக 2019 நிச்சயம் இருக்கபோகின்றது என்பதில் ஊசிமுனையளவு கூட சந்தேகமே இல்லை

நன்றி

வணக்கம்

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More