2019 புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி – New year Rasi Palan 2019 Vrischika Rasi

Puthandu rasi palan 2019 Vrischika Rasi - New Year Rasi palan Vrischika Rasi 2019 in Tamil

16,566

2019 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் விருச்சிக ராசி

(New Year Rasi Palan 2019 Vrischika Rasi – Puthandu Rasi Palan Vrischika Rasi 2019 in Tamil)

ராகு_கேது பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசி (Rahu Ketu Payarchi Palangal 2019 – Vrischika Rasi)

விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2019 எப்படி இருக்க போகின்றது???

வரக்கூடிய 2019 ஆங்கில புத்தாண்டில் ,குரு பகவான் உங்கள் ராசியிலேயே இருக்கிறார். சனி இரண்டாம் இடத்தில் பாதசனியாக,போக்கு சனியாக,குடும்ப சனியாகவும் ,ராகு கேதுக்கள் முறையே 2019 மார்ச் மாதத்திற்கு பிறகு 8 ,2 ம் இடங்களில் சஞ்சாரம் செய்ய உள்ளார்கள்..

கடந்த ஆறு ஆண்டுகளாக உங்கள் ராசிக்கு ஏழரைச்சனி நடந்து கொண்டு உள்ளது.முதல் இரண்டரை ஆண்டுகளாக
விரையச்சனியாக வந்து கடுமையான விரையங்களை அதுவும் தெண்டச்செலவுகள் தந்து பற்றாக்குறையை தந்து , கடனை ஏற்படுத்தினார்.

அடுத்த இரண்டரை ஆண்டுகளில் ஜென்ம சனியாக வந்து அவர் அவர்கள் வயதுக்கு தகுந்தபடி மனச்சஞ்சலங்களை கொடுத்து வந்தார். அதாவது 20_25 வயதில் உள்ள இளைஞர்களுக்கு காதல் தோல்விகளையும், 25_35 வயதுகளில் உள்ளவர்களுக்கு வேலை விசயங்களில்
பிரச்னைகளும் அதனால் மனச்சஞ்சலங்களும், அதற்கு மேல் உள்ளவர்களுக்கு கடன்,நோய்,எதிரி,வழக்குகள், குழந்தைகளால் மனக்குழப்பங்கள், என ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணங்களுக்காக மனக்குழப்பங்களை சனிபகவான் தந்து வந்து இருப்பார்.

பொதுவாக ஏழரைச்சனியை வெல்ல வேண்டும் என்றால் லக்னாதிபதி,ராசியாதிபதி வலுவாக இருக்க வேண்டும். இவர்களுக்கு வீடு கொடுத்தவர்களும் வலுவாக இருக்க வேண்டும். பூர்வ புண்ணிய ஸ்தானம்,பூர்வ புண்ணியாதிபதி வலுத்தவர்களையும் ஏழரைச்சனி பெரிய அளவில் கெடுதல்கள் செய்வது இல்லை.

ஜனன ஜாதகத்தில் சனி சுபராசிகளில் அமையப்பெற்று ,சுபகிரகங்களால் பார்க்கப்பட்டு பகை,நீசம், வக்ரம் பெற்றிருக்குமானால் சனியால் ஏழரைச்சனி காலங்களில் பெரிய அளவில் துன்பங்கள் இருக்காது. சுப ராசிகள் எவை??? ரிஷபம், துலாம், மிதுனம்,கன்னி, தனுசு, மீனம் ,வளர்பிறை சந்திரனாக இருந்தால் கடகம் சுபராசியாக வரும். இந்த ராசிகள் எல்லாம் சுப ராசிகள். சுபக்கிரகங்கள் உங்களுக்கே தெரியும்.

ஏழரை சனியில் நல்ல யோகத்தை தரக்கூடிய தசாபுக்திகள் நடக்கும் போது
தோட்டம் வாங்கறது,வீடு கட்டறது,ஆடம்பரமாக திருமணம் செய்யறது,வெளிநாடு சென்று நல்ல சம்பாத்யம் செய்வது போன்ற நல்ல பலன்களும் நடக்கும்.1,5,9,10 போன்ற நல்ல ஆதிபத்தியங்களை வாங்கக்கூடிய கிரகங்களின் தசைகளில் மேலே சொன்ன சுபவிரையங்கள் இருக்கும்.

ஏழரைச்சனியில் ராகுதசையோ,சந்திர தசையோ,சனிதசையோ அல்லது இவர்களின் புக்திகளோ நடக்கும் போது பொருள் இழப்புகள், உயிர் இழப்புகள், விபத்துகள், நஷ்டங்கள் ,அவமானங்கள், அசிங்கங்களை ,சிறை அல்லது ஜென்மம் போன்ற பலன்களை சனிபகவான் தருவார்.

விருச்சிக ராசிக்காரர்கள் பலருக்கு உயிர் இழப்புகள், பொருள் இழப்பு, வருமானம் இழப்பு, அவமானம், குடும்ப பிரிவு ,கடன்,வழக்குகள் என்று சாதகமற்ற பலன்களை சனிபகவான் இதுவரை உங்களுக்கு தந்து வந்தார்.
தற்போது உங்கள் ராசிக்கு குருபகவான் வந்து விட்டார். குரு லக்னத்தோடு, ராசியோடு சம்பந்தப்படுவது யோகம். அவரே உங்களுக்கு பூர்வ புண்ணியாதிபதி. அவரே உங்களுக்கு யோகர்.அவரே உங்களுக்கு சகல யோகங்களையும் தர கடமைப்பட்டவர்.
குருபகவான் உங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்க வந்து விட்டார்.

இந்த இரண்டு மூன்று நாட்களாக எல்லோரும் வீட்டில், மொட்டை மாடியில் தீபமேற்றி வழிபட்டனர். வீட்டில் விளக்கேற்றுவது எதற்காக என்றால் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் வெளியேறி உங்களை சுற்றியும் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி ஏற்பட வீட்டில் விளக்கு ஏற்றுகிறார்கள். பெண்கள் கோவிலில், வீட்டில் விளக்கு ஏற்றிட அவர்களது முகத்தில் பொலிவு கூடும்.அழகு ,தேஜஸ் கூடும். முக்கியமாக வீட்டில் இருள் விலகும். ஒளி உங்களை வாழ வைக்கும். ஏழரைச்சனி காலத்தில்,ராகு தசா காலங்களில் வீட்டில் மாலைநேரங்களில் வீட்டில் விளக்கேற்றுவது ரொம்ப ரொம்ப நல்லது.

சரி குரு உங்கள் ராசிக்கு வந்து உங்கள் ராசியை புனிதமடைய செய்து விட்டார். குரு ராசியில் இருந்து 5,7,9 ம் இடங்களை பார்த்து இந்த இடங்களை புனிதப்படுத்தி குழந்தைகளால் நன்மைகளையும், ஆன்மிக புனித பயணங்களையும், லட்சுமி கடாட்சத்தால், பணவரவுகளையும் ,நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத ஆண்,பெண் இருபாலருக்கும் திருமணத்தை நடத்தி வைப்பார்.திருமணம் ஆன தம்பதிகளுக்கு அன்னியோன்யம் அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.குடும்ப ஒற்றுமையின் காரணத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெற்று ,குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவக்கூடிய ஆண்டு 2019.

கூட்டுத்தொழில் மூலமாக நல்ல லாபங்கள் ஏற்படும். திருமண வழக்குகள் ஏதேனும் இருந்தால் குருபகவான் அதில் வெற்றியை ஈட்டித்தருவார்.நண்பர்கள் உதவுவார்கள். சிலருக்கு காதலில் வெற்றியை தரும் ஆண்டாக 2019 இருக்கும். பாதச்சனியாக ,குடும்ப சனியாக வருவதால் சனி குடும்பத்தை ஏற்படுத்தி தருவார்.

2019 மார்ச் மாதத்திற்கு பிறகு ராகு ,கேதுக்கள் முறையே 8 ,2 ம்மிடங்களுக்கு பெயர்ச்சி ஆகப்போகின்றார்கள். குடும்பத்தில் உள்ள சனியை கேது சுபப்படுத்தி, சனி நான்காம் இடமான தன் வீட்டை தானே பார்த்து தாயார், மனை,மாடு,கொடுக்கல்,வாங்கல்,போக்குவரத்து போன்ற ஆதிபத்திய காரகத்துவங்கள் பெருகும். எனவே தாயாரால் நன்மைகள் இருக்கும் ஆண்டாக 2019 இருக்கும்.

விவசாயிகளுக்கு நாலுகால் பொருளான ஆடு,மாடுகளால் நன்மைகள் கிடைக்கும்.
விருச்சிக ராசி அன்பர்கள் சிலருக்கு வீடுகட்டக்கூடிய யோகம் உண்டு. ராகு கேதுக்களால் அலைச்சல்கள் மிகும்.
வாக்கு தவற நேரும். எனவே யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். தசரதன் கொடுத்த வாக்கு அவனுடைய உயிரினும் மேலான பிள்ளையை பிரிய காரணமாக இருந்ததை மறக்க வேண்டாம். இரண்டாம் இடத்தில் பாவக்கிரகங்கள் இருப்பதை மறக்க வேண்டாம்.

கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் விருச்சிக ராசியாக இருந்தால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. இந்த ராசியை சேர்ந்த வக்கீல்களுக்கு, வியாபாரிகளுக்கு யோகமான ஆண்டாக இந்த 2019 இருக்கும். ஏன்னா சனி இரண்டாம் பாவத்தில் இருக்கும் போது கேதுவும் சனியுடன் இணைந்து சனியை சுபவலுப்படுத்தி இருப்பது பொய் சொல்லி பிழைக்க க்கூடிய(தொழில் தர்மம்) வக்கீல், மார்கெட்டிங், தரகர்கள், போன்றவர்களுக்கு நல்ல காலமாகும் இந்த 2019.

ராகு எட்டில் இருப்பது விருச்சிக ராசிக்கு நல்லது. விருச்சிக ராசிக்கு ராகு நன்மை தரும் கிரகமல்ல.ராகு எட்டில் மறைவது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் ஆகும். தொழில் ஸ்தானத்திற்கு பதினொன்றாம் இடம் இந்த எட்டாம் இடம்.எனவே தொழில் சிறக்கும். தொழிலில் ராகுவால் லாபங்கள் ஏற்படும்.

இரண்டு ,எட்டில் இருக்கும் ராகு கேதுக்களால் சிலரை குடும்பத்தை விட்டு தூரதேசம் செல்ல வைக்கும். பாவர்கள் 2,4,7,8,12 ம் பாவங்களில் இருக்கக்கூடாது அப்படி இருந்தால் அந்த வீட்டதிபதிகளால் பார்க்க பட வேண்டும் என்பது விதி.. குடும்பத்தை விட்டு பிரிய வைக்கும். சனி நான்காம் பாவமான தன் வீட்டை தானே பார்ப்பதால் காலேஜ் படிக்கும் மாணவர்களுக்கு நல்ல காலம் தான். மேற்படிப்பு,பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு 2019 மிக மிக நல்ல காலம்தான்.

கேது இரண்டாம் இடத்தில் சனியுடன் சேர்க்கை பெறுவதால் டிரஸ்ட் வைத்து நடத்துபவர்களுக்கு யோகமான ஆண்டாக 2019 இருக்கும். இதுவரை இருட்டில் இருந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு விடிவுகாலம் குருவால் பிறந்து விட்டது என்றே சொல்லலாம். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றத்தை நோக்கி விருச்சிக ராசிங்காரர்கள் சென்று கொண்டு இருக்கிறீர்கள்..

இதுவரை இந்த ஏழரைச்சனியில் வாழ்க்கைனா என்ன? பணம்னா என்ன??நண்பன்னா யாரு? துரோகி யாரு,?உறவுகள் எப்படிப்பட்டது?? போன்ற வாழ்க்கை பாடங்களை நீங்கள் கற்று கொண்டிருப்பதால் இனி உங்களை யாரும் ஏமாற்ற முடியாது. இனிமேல் உங்களுக்கு எல்லாமே நல்ல நேரம் தான். இன்னும் ஒரு முப்பது வருடங்களுக்கு இதுபோல ஒரு கஷ்டம் உங்களுக்கு வரப்போவது இல்லை.

இந்த ராசியை சேர்ந்த அரசியல் வாதிகள்
எதை பேசினாலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து பேசவேண்டும். இந்த ராசியை சேர்ந்த பெண்மணிகள் குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது .இன்னும் கொஞ்சம் காலத்துக்கு பொறுமையாக இருப்பது நல்லது. வியாபாரிகள் யாருக்கும் தேவையில்லாமல் வாக்கு தரவேண்டாம்.

பொதுவாக இந்த 2019 ல் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுபநிகழ்ச்சிகள் நடக்கும் ஆண்டாக, காலேஜ் படிக்கும் மாணவர்களுக்கு யோகமான ஆண்டாக,
தாயாரால் உதவிகள் பெறும் ஆண்டாக, விவசாயிகளுக்கு நாலுகால் பொருள்களான ஆடு,மாடுகளால் லாபம் தரும் ஆண்டாக, டிராவல்ஸ் வைத்திருப்பவர்களுக்கு யோகமான ஆண்டாக, டிரஸ்ட் வைத்து நடத்துபவர்களுக்கு யோகமான ஆண்டாக, வக்கீல் தொழில் பார்ப்பவர்களுக்கு யோகமான ஆண்டாக இந்த 2019 நிச்சயம் இருக்க போகின்றது..

நன்றி
வணக்கம்

1 Comment
  1. Arani says

    Thank you,
    Thoththuppona kadhal thirumba kai kooduma illana nalla life kidaikkuma.
    En date of birth 22-08-1996 17.44 pm new time
    Anusham

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More