வாக்கிய பஞ்சாங்கத்தின் படி செப்டம்பர் 1ம் தேதி ( சார்வரி வருடம் ஆவணி மாதம் 16ம் தேதி) செவ்வாய் கிழமையும்.
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி செப்டம்பர் 23ம் தேதியும் (புரட்டாசி 7) புதன் கிழமை பெயர்ச்சி ஆகிறது.
இந்த பெயர்ச்சியின் போது ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கும், கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.
ஒன்னறை வருடம் ஒரு ராசியில் சஞ்சரித்து பலன்களைத் தரக்கூடிய இந்த ராகு கேது பகவான் 2022ம் ஆண்டு பிலவ வருஷத்தில் பங்குனி மாதம் 7ம் தேதி வரை ராகு கேது முறையே ரிஷபம், விருச்சிகம் ராசியில் சஞ்சரிப்பார்கள்.
- உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்பதாம் இடத்திற்கு ராகு பகவான் பெயர்ச்சி ஆகிறார்
- பூர்வீகத்தில் / தந்தை வழியில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும் தாத்தா வழியில் இருந்த பிரச்சனைகள் தீரும் சொத்துக்கள் கைக்கு வரும்
- தந்தையாருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும்
- குழந்தை பாக்கியம் தடை ஏற்படும்
- தூரதேச பயணங்கள் உண்டாகும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட தகவல்கள் அடிக்கடி சென்று வரும் சூழ்நிலையில் உண்டாகும்
- தீர்த்த யாத்திரைகள் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும்
- வேற்றுமதத்தவர் ஆதரவுகள் கிடைக்கும்
- எதிர்பார்த்த காரியங்கள் தடை தாமதத்துடன் நடந்தேறும்
- சம்பந்தம் இல்லாதவர்களிடம் தேவையற்ற தொடர்புகளை தவிர்க்க வேண்டியது அவசியம்
- மூத்தவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்
- தேவையற்ற முதலீடுகளை தவிர்ப்பது சிறப்பு
- ரேஸ் பந்தயம் சம்மந்தம் இல்லாத முதலீடுகள் பங்குச் சந்தைகளின் முதலீடுகள் இவைகளில் மிகுந்த கவனம் தேவை
- பண வரவுகளில் தடை தாமதங்கள் வசூலாவதில் சிரமங்கள் ஏற்படும் புதியவர்களுக்கு கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்
- வேலைகளில் விரும்பத்தகாத இடமாற்றங்கள் உண்டாகும்
- உங்கள் ராசிக்கு முயற்சி வீரியம் தைரியம் எனப்படும் மூன்றாம் இடத்திற்கு கேது பகவான் பெயர்ச்சியாகிறார்
- குறுகிய பயணங்களில் கவனத்துடன் இருக்க வேண்டிய காலகட்டம்
- முயற்சிகளில் தடை தாமதங்களை தரும் 2க்கு மூன்று முறை முயற்சி செய்து காரியங்கள் நிறைவேறும்
- எழுத்து ஒப்பந்தங்கள் செய்வதில் கவனத்துடன் செயல் படவேண்டும்
- எழுத்து சம்பந்தமான துறையில் உள்ளவர்கள் மிகமிக பொறுப்புடன் இருக்க வேண்டும் இல்லையெனில் பலரின் அவ சொல்லுக்கு ஆளாக நேரிடும்
- குழந்தை பாக்யம் தடைபடும்
- வீரிய குறைபாடுகள் ஏற்படும்
- தைரிய குறைபாடுகள் உண்டாகும்
- தோள்பட்டை / கை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்
- இளைய சகோதரர்கள் வழியில் சண்டை சச்சரவுகள் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்கும் காலம்
- வசிப்பிடத்தில் மாற்றங்கள் ஏற்படும்
- மற்றவர்களை தொடர்பு கொள்வதில் பிரச்சனைகளை சந்திக்க நேரும்
- பொதுஜன வழியில் தொந்தரவுகள் ஏற்படும்
பரிகாரம் :
- குலதெய்வ வழிபாடு, குளக்கரையில் உள்ள விநாயகர் உடன் கூடிய ராகு கேது பகவான் வழிபாடு செய்ய சிறப்பு
- யானைக்கு ஒருமுறை கரும்பு கட்டு வாங்கித்தர சிறப்பு
- மேற்சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுப் பலன்களே உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் வலிமை தசா புக்தி மற்ற கிரக பெயர்ச்சிகளைப் பொருத்து பலன்களில் மாறுதல்கள் உண்டாகும்.
- எனவே புதிய காரியங்களை அல்லது நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும் பொழுது அல்லது முடிவுகளை எடுக்கும் பொழுது உங்களுடைய ஜோதிடரை அல்லது என்னை தொடர்புகொண்டு கலந்தாலோசித்து முடிவு எடுப்பது சிறப்பைத் தரும்