வாக்கிய பஞ்சாங்கத்தின் படி செப்டம்பர் 1ம் தேதி ( சார்வரி வருடம் ஆவணி மாதம் 16ம் தேதி) செவ்வாய் கிழமையும்.
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி செப்டம்பர் 23ம் தேதியும் (புரட்டாசி 7) புதன் கிழமை பெயர்ச்சி ஆகிறது.
இந்த பெயர்ச்சியின் போது ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கும், கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.
ஒன்னறை வருடம் ஒரு ராசியில் சஞ்சரித்து பலன்களைத் தரக்கூடிய இந்த ராகு கேது பகவான் 2022ம் ஆண்டு பிலவ வருஷத்தில் பங்குனி மாதம் 7ம் தேதி வரை ராகு கேது முறையே ரிஷபம், விருச்சிகம் ராசியில் சஞ்சரிப்பார்கள்.
உங்கள் ராசிக்கு கர்ம ஸ்தானம் என்று சொல்லக்கூடிய பத்தாம் இடத்திற்கு ராகு பகவான் பெயர்ச்சி ஆகிறார்.
- புதிய தொழில் / வேலை வாய்ப்புகள் / உத்தியோகங்கள் அமையும்
- வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் / தூரதேச வேலைவாய்ப்புகள் / வேலை நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு சென்று வரும் நிலைமை ஏற்படும்
- மாற்று மதத்தவர்கள் மூலம் வேலைவாய்ப்புகள் அமையும்
- அரசு ஊழியர்களுக்கு இடமாற்றங்கள்/ பணி மாற்றங்கள்/ டிபார்ட்மெண்ட் மாற்றங்கள் / திடீர் இட மாற்றங்கள் / வேலையில் கடுமைகள் / உயரதிகாரிகளின் தொந்தரவுகள் ஏற்படும் காலகட்டம்
- பூர்வீகத்தில் தேவையில்லாத மன சங்கடங்கள் இழப்புகள் ஏற்படும்
- குழந்தை பாக்கியம் தடை படும்
- நினைத்த காரியங்கள் நடப்பதில் தடைகள் ஏற்படும்
- எதிர்பார்த்த காரியங்கள் தடையுடன் கடந்து வெற்றி பெறும்
- புது ஒப்பந்தங்களில் மிக மிக கவனமாக செய்துகொள்ள வேண்டியது அவசியம்
- ஜாமீன்/ உத்தரவாத கையெழுத்து தவிர்ப்பது நல்லது
- உழைப்புக்கேற்ற வருமானங்களை பெறும் காலகட்டம்
- முழங்கால் சம்பந்தப்பட்ட வலி வேதனைகள் ஏற்படும்
- உங்கள் ராசிக்கு சுகஸ்தானம்,வீடு வண்டி வாகனம், தாயார் எனப்படும் நான்காம் இடத்திற்கு கேது பகவான் பெயர்ச்சியாகிறார்
- மாணவ மாணவியர்களுக்கு விரும்பிய உயர்கல்வி கிடைப்பதில் தடை தாமதங்கள் உண்டாகும் / தேர்வு பெறுவதிலும் பிரச்சனைகள் தடை தாமதங்கள் உண்டாகும்
- திட்டமிட்ட காரியங்களில் தடைகள் ஏற்படும்
- உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படும் சுகக் கேடுகள் ஏற்படும்
- தாயாருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்/மரணத்துக்கு ஒப்பான கண்டத்தை தரும்/தாயாருடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது
- வீடுகள் மாற்றம் செய்யும் காலகட்டம் / சொந்த வீடு எனில் மராமத்து வேலைகள் நடக்கும் / குலதெய்வ கோயிலில் மராமத்து வேலைக்கு செலவுகள் செய்யும் நாள்
- பழைய வண்டிகளில் அடிக்கடி பழுதுகள் ஏற்படும் பழைய வண்டியை மாற்ற வேண்டிய காலகட்டம் ஆகும்
- வண்டி வாகன பயணங்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்
- புதிய சொத்துக்களை வாங்குவதில் மிக மிக கவனமாக இருந்து அனைத்து விதமான சொத்து விவரங்களை சரிபார்த்து வாங்க வேண்டிய காலகட்டம் இல்லையெனில் ஏமாற்றப்படுகிறார்கள்
- அதிகப் பணத்துக்கு/ வட்டிக்கு ஆசைப்பட்டு நிதி நிறுவனங்களில் / தனியார் வசம் / நெருங்கிய நபர் / தெரியாத நபர்களிடம் சீட்டு கட்டுவது / பணம் கொடுப்பது தவிர்க்க வேண்டிய காலகட்டம்
- வீடுகளில் விலை உயர்ந்த பொருட்கள் களவு போக வாய்ப்புகள் உண்டு எனவே கவனமுடன் இருக்க வேண்டிய காலகட்டம்
- பெண்களுக்கு கர்ப்பப்பையில் தொந்தரவுகள் ஏற்படும்
- இருதய வலி வேதனை / இருதய சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு
- புதிதாக வாங்கும் நிலபுலன்களில் பாம்பு புற்று இல்லாதவாறு பார்த்துக்கொள்வது நல்லது அப்படியிருந்தால் அதை இடிக்காமல் இருப்பது நல்லது
- சீட்டு நிறுவனங்கள் நடத்துபவர்கள் மிக மிக எச்சரிக்கையுடன் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்
- குடும்பத்தில் பிரிவினைகள் ஏற்படும்
பரிகாரம் :
- குலதெய்வ வழிபாடு, குளக்கரையில் உள்ள விநாயகர் உடன் கூடிய ராகு கேது பகவான் வழிபாடு செய்ய சிறப்பு
- யானைக்கு ஒருமுறை கரும்பு கட்டு வாங்கித்தர சிறப்பு
- முதியோர் இல்லத்துக்கு தேவையான உதவிகள்
- மேற்சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுப் பலன்களே உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் வலிமை தசா புக்தி மற்ற கிரக பெயர்ச்சிகளைப் பொருத்து பலன்களில் மாறுதல்கள் உண்டாகும்.
- எனவே புதிய காரியங்களை அல்லது நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும் பொழுது அல்லது முடிவுகளை எடுக்கும் பொழுது உங்களுடைய ஜோதிடரை அல்லது என்னை தொடர்புகொண்டு கலந்தாலோசித்து முடிவு எடுப்பது சிறப்பைத் தரும்