ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2020 - 2022 தனுசு ராசி

தனுசு ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி செப்டம்பர் 1ம் தேதி ( சார்வரி வருடம் ஆவணி மாதம் 16ம் தேதி) செவ்வாய் கிழமையும்.

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி செப்டம்பர் 23ம் தேதியும் (புரட்டாசி 7) புதன் கிழமை பெயர்ச்சி ஆகிறது.

இந்த பெயர்ச்சியின் போது ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கும், கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

ஒன்னறை வருடம் ஒரு ராசியில் சஞ்சரித்து பலன்களைத் தரக்கூடிய இந்த ராகு கேது பகவான் 2022ம் ஆண்டு பிலவ வருஷத்தில் பங்குனி மாதம் 7ம் தேதி வரை ராகு கேது முறையே ரிஷபம், விருச்சிகம் ராசியில் சஞ்சரிப்பார்கள்.

உங்கள் ராசிக்கு ருண ரோக சத்துரு ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஆறாமிடத்திற்கு ராகு பகவான் பெயர்ச்சி ஆகிறார்.

 • எல்லாவற்றிலும் வெற்றிகள் கிடைக்கும் காலகட்டம்
 • எதிரிகள் தொந்தரவு குறையும்
 • உடல்நலனில் இருந்த பிரச்சனைகள் சரியாகும்
 • புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமையும்
 • மாற்று மதத்தினரின் உதவிகள் கிடைக்கும்
 • கடன் பிரச்சினைகள் தீரும் புதிய கடன்களும் கிடைக்கும்
 • வெளிநாட்டு ஆர்டர்கள் கிடைக்கும் தொழில் வாய்ப்புகள் பெருகும்

உங்கள் ராசிக்கு அயன சயன போகம் என்று சொல்லப்படும் 12-ஆம் இடத்திற்கு கேது பெயர்ச்சியாகிறார்

 • வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும்
 • ஓய்வில்லாமல் உழைக்க வேண்டிய காலகட்டம்
 • குடும்பத்தைப் பிரிந்து தூர பயணம் உண்டாகும்
 • உடல் நலத்தில் கவனம் தேவை சரியான நேரத்தில் தேவையான அளவு ஓய்வு எடுக்க வேண்டிய காலகட்டம்
 • நீண்ட தூர தீர்த்த யாத்திரை செல்லும் வாய்ப்புகள் வந்து சேரும்
 • புதிய மகான்களின் தொடர்புகள் கிடைக்கும்
 • நீண்ட நாட்களாக நடந்து கொண்டிருந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும்
 • பூர்வீகத்தில் இழப்புகளை சந்திக்கும் காலகட்டம்
 • பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது
 • மருத்துவமனை செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு

பரிகாரம் :

 • குலதெய்வ, விநாயகரை அருகம்புல் சாற்றி வழிபாடு செய்ய சிறப்பு
 • யானைக்கு ஒருமுறை கரும்பு கட்டு வாங்கித்தர சிறப்பு
 • மேற்சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுப் பலன்களே உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் வலிமை தசா புக்தி மற்ற கிரக பெயர்ச்சிகளைப் பொருத்து பலன்களில் மாறுதல்கள் உண்டாகும்.
 • எனவே புதிய காரியங்களை அல்லது நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும் பொழுது அல்லது முடிவுகளை எடுக்கும் பொழுது உங்களுடைய ஜோதிடரை அல்லது என்னை தொடர்புகொண்டு கலந்தாலோசித்து முடிவு எடுப்பது சிறப்பைத் தரும்

Blog at WordPress.com.

%d bloggers like this: