மகர ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022
வாக்கிய பஞ்சாங்கத்தின் படி செப்டம்பர் 1ம் தேதி ( சார்வரி வருடம் ஆவணி மாதம் 16ம் தேதி) செவ்வாய் கிழமையும்.
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி செப்டம்பர் 23ம் தேதியும் (புரட்டாசி 7) புதன் கிழமை பெயர்ச்சி ஆகிறது.
இந்த பெயர்ச்சியின் போது ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கும், கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.
ஒன்னறை வருடம் ஒரு ராசியில் சஞ்சரித்து பலன்களைத் தரக்கூடிய இந்த ராகு கேது பகவான் 2022ம் ஆண்டு பிலவ வருஷத்தில் பங்குனி மாதம் 7ம் தேதி வரை ராகு கேது முறையே ரிஷபம், விருச்சிகம் ராசியில் சஞ்சரிப்பார்கள்.
உங்கள் ராசிக்கு பூர்வீகம், புத்திரம், டெக்னிக்கல் ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஐந்தாம் இடத்திற்கு ராகு பகவான் பெயர்ச்சி ஆகிறார்.
- டெக்னிக்கல்/மேற்கல்வி/அயல்நாட்டுப் படிப்புகள் படிக்க வாய்ப்புகள் உண்டாகும்
- காதலில் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு
- குழந்தை பாக்கியம் தடை படும்
- குழந்தைகள் வழியில் பிரச்சனைகளை சந்திக்கும் காலம்
- குழந்தைகளின் உடல் நலனில் பாதிப்பு ஏற்படும்
- மனம் சார்ந்த பிரச்சனைகள் உண்டாகும் எப்பொழுதும் ஒருவித பயம் தொற்றிக் கொள்ளும்
- குலதெய்வ தொடர்ந்து செய்ய வேண்டிய காலகட்டம்
- பங்கு சந்தையில் லாபம் அதிகரிக்கும்
- பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தமான தொந்தரவுகள் ஏற்படும்
- வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அறுவை சிகிச்சைகள் ஏற்படும் காலகட்டம்
- முதலீடுகளில் லாபங்கள் உண்டாகும்
- பேச்சுவார்த்தைகளில் மிகப்பெரிய தவறாகும்
- வழக்குகள் தேவையற்ற சண்டை சச்சரவுகள் மன இறுக்கங்கள் ஏற்படும்
- மாற்று மதத்தினரின் நட்பு ஏற்படும்
உங்கள் ராசிக்கு லாபம் ஆசை அபிலாசைகள் என்று சொல்லப்படும் 11-ஆம் இடத்திற்கு கேது பெயர்ச்சியாகிறார்.
- தொழிலில் வியாபாரத்தில் லாபம் கிடைப்பதில் தடைகள் ஏற்படும்
- பணியாளர்களுக்கு சம்பள உயர்வு உத்தியோக உயர்வு இடமாற்றம் இவைகளில் தடை தாமதங்கள் உண்டாகும் மேலதிகாரியின் தொந்தரவுகள் உண்டாகும்
- நினைத்த காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படும்
- புத்திர பாக்கியம் தடைபடும்
- மூட்டு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்
- மூத்தவர்கள் வழியில் இழப்புகளை சந்திக்கும் காலகட்டம்
- வாக்குறுதி கொடுப்பதில் மிக மிக கவனம் தேவை
- வியாபாரத்தை விஸ்தரித்து செய்வதில் கவனம் தேவை
- அடுக்கடுக்கான தொந்தரவுகள் வந்து சேரும் காலகட்டம்
- எதையும் ஒன்றுக்கு பல முறை யோசித்து செய்வது நன்மையை தரும்
- விருப்பப்படி திருமணம் நடப்பதில் சங்கடங்கள் உண்டாகும் விரும்பிய அமைவதில் கடினமான சூழ்நிலை உண்டாகும்
பரிகாரம் :
- குலதெய்வ, கற்பக விநாயகருக்கு அருகம்புல் சாற்றி கற்கண்டு நெய்வேத்தியம் வைத்து வழிபாடு செய்ய சிறப்பு
- யானைக்கு ஒருமுறை கரும்பு கட்டு வாங்கித்தர சிறப்பு
- மேற்சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுப் பலன்களே உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் வலிமை தசா புக்தி மற்ற கிரக பெயர்ச்சிகளைப் பொருத்து பலன்களில் மாறுதல்கள் உண்டாகும்.
- எனவே புதிய காரியங்களை அல்லது நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும் பொழுது அல்லது முடிவுகளை எடுக்கும் பொழுது உங்களுடைய ஜோதிடரை அல்லது என்னை தொடர்புகொண்டு கலந்தாலோசித்து முடிவு எடுப்பது சிறப்பைத் தரும்
Comments are closed.