Rahu Ketu peyarchi palangal Mituna Rasi 2020 to 2022

மிதுன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி செப்டம்பர் 1ம் தேதி ( சார்வரி வருடம் ஆவணி மாதம் 16ம் தேதி) செவ்வாய் கிழமையும்.

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இந்த கிரக பெயர்ச்சி செப்டம்பர் 23ம் தேதியும் (புரட்டாசி 7) புதன் கிழமை பெயர்ச்சி ஆகிறது.

இந்த பெயர்ச்சியின் போது ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கும், கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

ஒன்னறை வருடம் ஒரு ராசியில் சஞ்சரித்து பலன்களைத் தரக்கூடிய இந்த ராகு கேது பகவான் 2022ம் ஆண்டு பிலவ வருஷத்தில் பங்குனி மாதம் 7ம் தேதி வரை ராகு கேது முறையே ரிஷபம், விருச்சிகம் ராசியில் சஞ்சரிப்பார்கள்.

  • உங்கள் ராசிக்கு ரகசியம், அயன, சயன, போக ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 12-ஆம் இடத்திற்கு ராகு பகவான் பெயர்ச்சி ஆகிறார்
  • இரகசிய ஒப்பந்தங்கள் முதலீடுகள் உண்டாகும்
  • தூர பயணங்கள் / வெளிநாட்டு பயணங்கள் / தூரதேச பயணங்கள் உண்டாகும்
  • மறைமுகமான வருமானங்கள்/ஆதாயங்கள்/ லாபங்கள் வந்து சேரும்
  • தூக்கமின்மை மலச்சிக்கல் கால் பாத வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்
  • தாத்தா வழியில் இழப்புகள் உண்டாகும்
  • மாற்று மதத்தினரின் தொந்தரவுகள் உண்டாகும்
  • உடல்நிலையில் கவனம் தேவை
  • தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்
  • கணவன் மனைவியிடையே உறவுகள் பாதிக்கும்
  • திட்டமிட்ட செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும்
  • பயணங்களில் பாதுகாப்பும் மிதவேகம் அவசிய
  • உங்கள் சர்வீஸ் ருண ரோக சத்ரு ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஆறாமிடத்தில் கேது பகவான் பெயர்ச்சியாகிறார்
  • கடன் எதிரி பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்
  • புதிய கடன்கள் கிடைப்பதிலும் தடை தாமதங்கள் உண்டாகும்
  • உடல் நலம் மனம் சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்கும்
  • சரியான நேரத்தில் சுவையான உணவு கிடைப்பதில் தடை தாமதங்கள் உண்டாகும்
  • வேலை கிடைப்பதில் சிரமங்கள் உண்டாகும், இருக்கும் வேலையில் சிரமங்கள் ஏற்படும் அல்லது வேலை இழப்பு உண்டாகும்
  • பலவிதமான தொந்தரவுகளை சந்திக்கும் காலம்
  • குடும்பத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும்
  • தூக்கமின்மை, இல்லற சுகத்தில் பிரச்சனைகள் உண்டாகும்
  • திருமண தடைகளை ஏற்படுத்தும்

பரிகாரம் :

  • நாகர்கோயில் நாகர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், விநாயகர் வழிபாடு செய்ய சிறப்பு
  • யானைக்கு ஒருமுறை கரும்பு கட்டு வாங்கித்தர சிறப்பு
  • மேற்சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுப் பலன்களே உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் வலிமை தசா புக்தி மற்ற கிரக பெயர்ச்சிகளைப் பொருத்து பலன்களில் மாறுதல்கள் உண்டாகும்.
  • எனவே புதிய காரியங்களை அல்லது நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும் பொழுது அல்லது முடிவுகளை எடுக்கும் பொழுது உங்களுடைய ஜோதிடரை அல்லது என்னை தொடர்புகொண்டு கலந்தாலோசித்து முடிவு எடுப்பது சிறப்பைத் தரும்

Blog at WordPress.com.

%d