Mesha Rasi Rahu Ketu peyarchi palangal 2020 to 2022

மேஷ ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி செப்டம்பர் 1ம் தேதி ( சார்வரி வருடம் ஆவணி மாதம் 16ம் தேதி) செவ்வாய் கிழமையும்.

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இந்த கிரக பெயர்ச்சி செப்டம்பர் 23ம் தேதியும் (புரட்டாசி 7) புதன் கிழமை பெயர்ச்சி ஆகிறது.

இந்த பெயர்ச்சியின் போது ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கும், கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

ஒன்னறை வருடம் ஒரு ராசியில் சஞ்சரித்து பலன்களைத் தரக்கூடிய இந்த ராகு கேது பகவான் 2022ம் ஆண்டு பிலவ வருஷத்தில் பங்குனி மாதம் 7ம் தேதி வரை ராகு கேது முறையே ரிஷபம், விருச்சிகம் ராசியில் சஞ்சரிப்பார்கள்.

உங்கள் ராசிக்கு தனம் குடும்பம் வாக்கு ஸ்தானம் என்று சொல்லக்கூடிய இரண்டாம் இடத்திற்கு ராகு பகவான் பெயர்ச்சி ஆகிறார்.

தனவரவுகள் அதிகரிக்கும் பண விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும் தேவை இல்லாதவர்களுக்கு/ அறிமுகம் இல்லாதவர்களுக்கு/சீட்டு கட்டுவது/தேவையற்ற முதலீடுகள்/அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்வது தவிர்க்க வேண்டிய காலகட்டம். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

முகம்/ கண் /பல் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள்/ வியாதிகள்/ நோய் நொடிகள் வர வாய்ப்புண்டு.

வெளியில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டியது அவசியம் ஃபுட் பாய்சன் ஆக வாய்ப்புண்டு எனவே கவனமுடன் இருப்பது நல்லது.

விஷ வாயு சம்பந்தப்பட்ட பகுதிகளில் செல்வதை தவிர்க்க வேண்டிய காலகட்டம்.

குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படும்.

திருமணம் நடைபெறுவதில் தடை தாமதங்கள் உண்டாகும் வரன் அமைவதில் கால தாமதங்கள் உண்டாகும் அல்லது பிரச்சனைகள் ஏற்படும்.

குழந்தை பாக்கியம் தடை தாமதங்கள் உண்டாகும் அல்லது தடைபடும்.

தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். பொய் சொல்வதை தவிர்க்க வேண்டிய காலகட்டம்.

உங்கள் ராசிக்கு மறைவிடம்,ஆயுள் என்று சொல்லக்கூடிய எட்டாம் இடத்திற்கு கேது பகவான் பெயர்ச்சி ஆகிறார்.

உடல் நிலை பாதிப்புகளால் அறுவைச் சிகிச்சை, மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.

மர்ம உறுப்புகளில் தொந்தரவுகள் பிரச்சனைகள் தோல்/புண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும் சூதக வலி ஏற்படும் பெண்களுக்கு கர்ப்ப பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

பண இழப்புகள் உண்டாகும். மரணத்துக்கு ஒப்பான கண்டங்கள் ஏற்படும். முதலீடுகளில் மிக மிக கவனம் தேவை. பங்குசந்தைகளில் திடீர் லாபங்கள் ஆதாயங்கள் கிடைக்கும் உழைத்த பணம் கைக்கு வந்து சேரும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். ஜாமீன் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எழுத்து ஒப்பந்தங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

சரியான நேரத்தில் தூங்கவும் அதிகாலையில் குறிப்பிட்ட நேரத்தில் விழித்து கொள்ளவும் சிறப்பு.

உடல் நலத்தில் அக்கறையுடன் இருக்க வேண்டிய காலகட்டம். ஒருவித பயம் இருந்துகொண்டே இருக்கும். விஷ சம்பந்தப்பட்ட நோய் நொடிகள் அதிகரிக்கும்.

பரிகாரம் :

தினமும் காலையில் விநாயகர் வழிபாடு செய்ய சிறப்பு.

யானைக்கு ஒருமுறை கரும்பு கட்டு வாங்கித்தர சிறப்பு.

மேற்சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுப் பலன்களே உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் வலிமை தசா புக்தி மற்ற கிரக பெயர்ச்சிகளைப் பொருத்து பலன்களில் மாறுதல்கள் உண்டாகும்.

எனவே புதிய காரியங்களை அல்லது நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும் பொழுது அல்லது முடிவுகளை எடுக்கும் பொழுது உங்களுடைய ஜோதிடரை அல்லது என்னை தொடர்புகொண்டு கலந்தாலோசித்து முடிவு எடுப்பது சிறப்பைத் தரும்.

Blog at WordPress.com.

%d bloggers like this: