Rahu Ketu peyarchi palangal Rishaba Rasi 2020 to 2022

ரிஷப ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி செப்டம்பர் 1ம் தேதி ( சார்வரி வருடம் ஆவணி மாதம் 16ம் தேதி) செவ்வாய் கிழமையும்.

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இந்த கிரக பெயர்ச்சி செப்டம்பர் 23ம் தேதியும் (புரட்டாசி 7) புதன் கிழமை பெயர்ச்சி ஆகிறது
இந்த பெயர்ச்சியின் போது ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கும், கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

ஒன்னறை வருடம் ஒரு ராசியில் சஞ்சரித்து பலன்களைத் தரக்கூடிய இந்த ராகு கேது பகவான் 2022ம் ஆண்டு பிலவ வருஷத்தில் பங்குனி மாதம் 7ம் தேதி வரை ராகு கேது முறையே ரிஷபம், விருச்சிகம் ராசியில் சஞ்சரிப்பார்கள்.

  • உங்கள் ராசியில் ராகு பகவான் பெயர்ச்சி ஆகிறார்
  • மனநிலையில் அடிக்கடி மாற்றங்கள் உண்டாகும் தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும்
  • உடல் நலத்தில் மிக மிக கவனம் தேவை
  • விஷ சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும்
  • இடம் விட்டு இடம் மாறும் சூழல் உண்டாகும்
  • புதிய வேலை நிமித்தமாக தூர பயணங்கள் உண்டாகும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அமையும்
  • பெண்கள் வழியில் தேவையற்ற தொந்தரவுகள் ஏற்படும்
  • குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் தலைதூக்கும்
  • பூர்வீகத்தில் இருந்த பிரச்சனைகள் ஓரளவுக்கு முடிவுக்கு வரும் சிலருக்கு பிரச்சினை பெரிதாகும்
  • பணப் பிரச்சினைகள் தலைதூக்கும் எதிரி தொந்தரவுகள் உண்டாகும்
  • உங்கள் களத்திரம், கூட்டு, நண்பர்கள், எதிரி என்று சொல்லக்கூடிய ஏழாம் இடத்தில் கேது பகவான் பெயர்ச்சியாகிறார்
  • கணவன் மனைவி இடையே பிரிவுகள் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும் மனக் கசப்புகள் அதிகரிக்கும்
  • கூட்டு தொழிலில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்
  • திருமணத்தில் தடை தாமதங்கள் உண்டாகும்
  • திட்டமிட்டபடி பயணங்கள் அமைவதில் தடை தாமதங்கள் ஏற்படும்
  • வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரச்சனைகள் / தடைகள் உண்டாகும்
  • எதிரி பிரச்சனைகள் தீர்வு வரும்
  • தொடை பகுதிகளில் வலி வேதனைகள் அறுவை சிகிச்சைகள் உண்டாகும் காலகட்டம்
  • நண்பர்கள் பொதுஜன தொடர்புகளில் பிரச்சனைகள்/ தடைகள் உண்டாகும்

பரிகாரம் :

நாகர், விநாயகர் வழிபாடு செய்ய சிறப்பு.

யானைக்கு ஒருமுறை கரும்பு கட்டு வாங்கித்தர சிறப்பு.

மேற்சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுப் பலன்களே உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் வலிமை தசா புக்தி மற்ற கிரக பெயர்ச்சிகளைப் பொருத்து பலன்களில் மாறுதல்கள் உண்டாகும்.

எனவே புதிய காரியங்களை அல்லது நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும் பொழுது அல்லது முடிவுகளை எடுக்கும் பொழுது உங்களுடைய ஜோதிடரை அல்லது என்னை தொடர்புகொண்டு கலந்தாலோசித்து முடிவு எடுப்பது சிறப்பைத் தரும்.

Blog at WordPress.com.

%d bloggers like this: