விருச்சிக ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022
வாக்கிய பஞ்சாங்கத்தின் படி செப்டம்பர் 1ம் தேதி ( சார்வரி வருடம் ஆவணி மாதம் 16ம் தேதி) செவ்வாய் கிழமையும்.
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி செப்டம்பர் 23ம் தேதியும் (புரட்டாசி 7) புதன் கிழமை பெயர்ச்சி ஆகிறது.
இந்த பெயர்ச்சியின் போது ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கும், கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.
ஒன்னறை வருடம் ஒரு ராசியில் சஞ்சரித்து பலன்களைத் தரக்கூடிய இந்த ராகு கேது பகவான் 2022ம் ஆண்டு பிலவ வருஷத்தில் பங்குனி மாதம் 7ம் தேதி வரை ராகு கேது முறையே ரிஷபம், விருச்சிகம் ராசியில் சஞ்சரிப்பார்கள்.
உங்கள் ராசிக்கு களத்திரம், கூட்டு, நண்பர்கள், எதிராளி ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஏழாம் இடத்திற்கு ராகு பகவான் பெயர்ச்சி ஆகிறார்.
- வரன் முடிவாவதில் / திருமண வாய்ப்புகள் தடைப்படும்
- காதலில் தோல்விகள் ஏற்படும்
- கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும்
- கூட்டுத் தொழில் செய்பவர்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய கால கட்டம் கூட்டுத் தொழிலில் பிரச்சினைகள் ஏற்பட்டு பிரிவுகள் ஏற்படும்
- நண்பர்கள் எதிராளிகளின் வழியில் தொந்தரவுகள் ஏற்படும் அல்லது பிரச்சனைகள் ஏற்படும்
- தூர பயணங்கள் / வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அமையும்
- பூர்வீகத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும் தாத்தா வழியில் இருந்த சொத்தில் பாகப்பிரிவினைகள் வந்து சேரும்
- அசுப செய்திகள் அடிக்கடி வர வாய்ப்புகள் உண்டு
- தந்தைவழியில் பிரிவினைகள் ஏற்படும்
- மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் பயம் பீதி ஏற்படும்
- குழந்தை பாக்கியம் தள்ளி போகும் / குறைபாடுகள் உண்டாகும்
உங்கள் ராசியில் கேது பகவான் பெயர்ச்சியாகிறார்
- தெய்வீக சிந்தனைகள் அதிகரிக்கும் தெய்வீக தரிசனங்கள் ஏற்படும்
- ஒருவித பயம் தொற்றிக் கொள்ளும்
- எல்லாவற்றிலும் தடை தாமதங்கள் பிரச்சனைகள் சந்திக்க நேரிடும்
- உடல்நலனில் கவனம் தேவை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டிய காலகட்டம் உண்டாகும் சுகம் கெடும்
- தலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எதிர்கொள்ளும்
- வேலைகளில் கடுமையான பிரச்சனைகளை சந்திக்கும் காலகட்டம்
- இளைய சகோதரர்கள் வழியில் சண்டை சச்சரவுகள் பிரச்சனைகள் ஏற்படும்
- எழுத்து சம்பந்தமான ஒப்பந்தங்களில் / ஜாமின் கவனமாக இருக்க வேண்டும் அல்லது தவிர்ப்பது சிறப்பு
- தோள்பட்டை கை போன்ற இடங்களில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு அல்லது விபத்துக்கள் சந்திக்க. வாய்ப்புண்டு
- பல இழப்புகள் ஏற்படும்
- எதிலும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்
பரிகாரம் :
- குலதெய்வ வழிபாடு, பாதாள விநாயகர், நாகர், ஹனுமான் வழிபாடு செய்ய சிறப்பு
- யானைக்கு ஒருமுறை கரும்பு கட்டு வாங்கித்தர சிறப்பு
- மேற்சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுப் பலன்களே உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் வலிமை தசா புக்தி மற்ற கிரக பெயர்ச்சிகளைப் பொருத்து பலன்களில் மாறுதல்கள் உண்டாகும்.
- எனவே புதிய காரியங்களை அல்லது நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும் பொழுது அல்லது முடிவுகளை எடுக்கும் பொழுது உங்களுடைய ஜோதிடரை அல்லது என்னை தொடர்புகொண்டு கலந்தாலோசித்து முடிவு எடுப்பது சிறப்பைத் தரும்
Comments are closed.