ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 கன்னி ராசி | Rahu Ketu Peyarchi 2019 Kanni Rasi
கன்னி ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 (Kanni Rasi Rahu Ketu Peyarchi 2019)
மார்ச் மாதம் ஏழாம் தேதி திருக்கணிதப்படி பெயர்ச்சி அடையும் ராகு கேதுக்கள் உங்கள் ராசிக்கு இதுவரை கேது ஐந்திலும், ராகு பதினொன்றிலும் சஞ்சாரம் செய்து வந்தார்கள்.
இந்த இடங்கள் ஓரளவுக்கு நல்ல இடங்களே என்றாலும் உங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டம சனி நடைபெற்று வந்ததால் உங்களுக்கு எந்த ஒரு நல்ல பலனும் நடக்கவில்லை என்பதே உண்மை.
மார்ச் ஏழாம் தேதிக்கு பிறகு ராகு பத்திலும், கேது நான்காம் இடத்துக்கும் பெயர்ச்சி அடையப் போகின்றார்கள். ராகு பத்தில் இருப்பது ஓரளவுக்கு நன்மையை தரும். பாவர்கள் பத்தில் இருக்கலாம். பத்தாமிடமான மிதுனம் ராகுவுக்கு நட்பு வீடாகும். அதன் அதிபதி புதன் ராகுவுக்கு அதிநட்பு கிரகமாவார்.
ராகு தான் இருக்கும் வீட்டின் அதிபதியை போல பலன் தருவார். எனவே ராகுவால் தொழில், ஜீவன அமைப்புகள் மிக நன்றாக இருக்கும்.
ஆடிட்டர், ஐ.டி.துறையினர், புத்தக விற்பனையாளர்கள்,ஆசிரியர்கள், வக்கீல்கள், ஜோதிடர், ஆன்மீகவாதிகள், ஆலயத்துறை, வைத்தியர்கள் ,மாந்திரீகர்கள் இவர்களுக்கு நல்ல தொழில் வலிமையை தரும். இந்த ராசிக்காரர்களை விஐபி மனிதராக நல்ல தொழில் வலிமை உள்ளவராக ராகு மாற்றுவார்.தொழில் சிறக்கும்.
கேதுபகவான் நான்கில் சனியுடன் வந்து இணைவது ஓரளவுக்கு நல்ல பலன்களை இந்த ராசிக்காரர்கள் அடைய இருக்கிறீர்கள். சனியால் வரக்கூடிய தொல்லைகள் இனி குறையும். சனி பத்தாம் பார்வையால் உங்கள் ராசியை பார்த்து ஒருவருடகாலமாக எதிர்மறை எண்ணங்களையும்,சோம்பேறித்தனத்தையும் கொடுத்து வந்தார். இனி உங்கள் தன்னம்பிக்கை கூடும். இனம் புரியாத பயம் உங்களை விட்டு விலகும். வயதானவர்களுக்கு படபடப்பு விலகும்.
சனியின் பத்தாம் பார்வையால் இதுவரை இருந்து வந்த தேக்க நிலைகள் மாறும். உத்யோகத்தில் பதவி உயர்வு, விரும்பிய இடங்களுக்கு இடமாற்றம் ,வேலையில்லாத கன்னி ராசிக்காரர்களுக்கு வேலை கிடைத்து பொருளாதார அபிவிருத்தி ஏற்படும். சமுதாயத்தில் நாலுபேர் மதிக்க தகுந்த வாழ்க்கை அமையும்.
சிலர் அர்த்தாஷ்டம சனியால் வழக்குகளை சந்தித்து வந்தார்கள். அவர்களுக்கு எல்லாம் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அல்லது உங்களுக்கு சாதகமான கேஸ் வாபசாகிவிடும்.
தாயார், மனை,மாடு ,கொடுக்கல் வாங்கல்களில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும்.
பொதுவாக கொடும் சனி,பாம்பிரண்டும் பிற்பலனை செய்யும் என்ற விதிப்படி ஒரு நான்கு, ஐந்து மாதங்கள் சென்று விடவேண்டும். அப்போது தான் ராகு கேதுக்கள் பலன் அளிப்பார்கள்.
உங்களுக்கு சனி ,நான்காம் பாவகத்தில் சாதகமற்ற நிலையில் இருந்து வந்தாலும், இந்த வருட இறுதியில் குருப்பெயர்ச்சி யில் இருந்து உங்களுக்கு யோகம் ஆரம்பிக்கும். குரு சனியுடன் சேர்ந்து சனி சுபத்தன்மை அடைவதால்
வீடு,வாகனம்,குழந்தைகளால் நன்மைகள் இருக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு இவ்வருடம் இறுதியில் குழந்தை பாக்கியம் கிட்டும்.
சிலருக்கு வீடு கட்டுவதில் இருந்த தடைகள் முற்றிலுமாக விலகும். ஆள்கிடைக்காது.கொத்தனார் வரமாட்டாரு..மணல் தட்டுப்பாடு வேறு.
எல்லாம் இருந்தாலும் கல்லை கண்டால் நாயை காணோம், நாயை கண்டால் கல்லை காணோம் என்ற பழமொழிக்கேற்ப எல்லாம் சரியாக இருந்தால் பணம் இருக்காது. ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு இந்நிலை மாறும்.
அர்த்தாஷ்டம சனியின் காரணமாகவும், மூன்றில் இருக்கும் குருவின் காரணமாகவும் ,நான்கில் சனி, சனிக்கு வீடு கொடுத்த குரு சனிக்கு பன்னிரண்டில் ,தன் வீட்டுக்கு பன்னிரண்டில் மறைந்த காரணத்தினால்
காலேஜ் படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் கொஞ்சம் கவனக்குறைவால் அரியர்ஸ் வைக்க நேரிடும்.
மாணவர்கள் அதிகமான கவனத்துடன் படிக்க வேண்டும்.. தாயார் உடல்நிலையில் கவனம் தேவைப்படும்.
வண்டி வாகனமான நான்கில் சனி இருப்பதால் வாகன வகைகளில் செலவுகள் வைக்கும்.. விவசாயிகளுக்கு பூமி இந்த ஒரு வருட காலமாக பகை.அதனால விளைச்சல் குறைந்து போட்ட முட்டுவலி செலவே எடுக்க முடியாத நிலை. மாடு கன்று பலிதமாகாத நிலை. இந்நிலை மார்ச் ஏழு ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு மாறும். படிப்படியாக முன்னேற்றங்கள் அதிகரிக்கும்.இவ்வருடம் இறுதியில் ஆகப்போகும் குரு ப்பெயர்ச்சியில் இருந்து உங்களுக்கு யோகம் ஆரம்பிக்கும்..
இவ்வருடம் இறுதியில் இருந்து பூமி லாபம், வாகன சுகம்,தாயார் ஆதரவுகள்,வண்டி வாகன யோகம், படிப்பில் முன்னேற்றம், ஜீவன,தொழில் லாபம், வேலை கிடைக்கப்பெறுவது,சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகமாக கிடைக்கப்பெறுவது , பதவி உயர்வு ,வழக்குகளில் வெற்றி போன்ற நல்ல பலன்களை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்
Comments are closed.