கடக ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 (Kataka Rasi Rahu Ketu Peyarchi 2019)
ராகு கேது பெயர்ச்சியானது திருக்கணிதப்படி மார்ச் மாதம் 6 ம்தேதி 59.30 நாழிகைக்கு இன்னும் சுருக்கமாக சொல்ல போனால் மார்ச் ஏழாம் தேதி பெயர்ச்சி அடையப் போகின்றார்கள்…
இந்த பெயர்ச்சி கடக ராசிக்கு எப்படி இருக்கும்??
இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்றில் ராகுவும்,ஏழில் கேதுவும் இருந்து உங்களுக்கு அலைக்கழிப்புகளை உண்டாக்கினார்கள்.ஓய்வே எடுக்க முடியாதபடி வேலைப்பளுவை கொடுத்தார்கள்… உடல் உபாதைகளை கொடுத்தார்கள். பாம்புகள் உடலை(மனசை) சுற்றி வளைத்து விட்டது. அதனால் சிலருக்கு நோய் தொல்லைகளையும், சிலருக்கு மனக்குழப்பங்களையும் தந்திருப்பார்கள்.
சிலருக்கு கணவன் உறவில் விரிசல்களை, கோர்ட், கச்சேரி, பஞ்சாயத்து போன்றவைகளை கணவன் மனைவிக்குள் ஏற்படுத்தி வாழ்கையே கொஸ்டின் மார்க்காக( கேள்வி குறியாக ) மாற்றிய அரவங்கள் ,
கடன் வாங்கி கடனை அடைத்து மஹா கடன்காரனாக மாற்றிய அரவங்கள்,
நோய் தொல்லையால் ஆஸ்பத்திரியே கதி என கிடக்க வைத்தது.
இவ்வாறு சாதகமற்ற பலன்களை அளித்து வந்த ராகு,கேதுக்கள் தற்போது ராகு பன்னிரண்டாம் இடத்துக்கும், கேது ஆறாம் இடத்துக்கும் மாறப்போகின்றார்கள். கொடியவர்கள் 3,6,8,12 ல் மறைந்து பலனை கொடுக்க வேண்டும் என்ற விதிப்படி ஒரு கெட்ட கிரகம் இன்னொரு கெட்ட ஸ்தானத்தில் இருப்பது “கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்” என்று அழைக்கப்படும். அதாவது விபரீத ராஜயோகத்தை ஏற்படுத்தி திடீர் அதிர்ஷ்டங்களை தருகின்ற ஒரு அமைப்பாகும்.
ஒரு கெட்ட கிரகம் கெட்ட இடத்தில் இருப்பது மைனஸ் ×மைனஸ் =ப்ளஸ் என்ற கணக்குப்படி சாதகமான அமைப்பாகும். ஒரு கெட்ட கிரகம் கெடுதல் செய்ய முடியாத அமைப்பில் இருந்தாலே அது யோகம் தான்.இந்த பெயர்ச்சியினால் அதிகமான நன்மைகளை அடையப்போகும் ராசி கடகமேயாகும்..
குரு ராசியை பார்த்து கொண்டு உள்ள அற்புதமான ஒரு அமைப்பு கடக ராசிக்கு உள்ளது. “குரு பார்க்க கோடி நன்மை” ஏற்படும்..கடந்த நான்கு மாதங்களாக
குருபலம் உள்ளது. சனி ஆறில் இருந்து சனிபலம் கடந்த 15 மாதங்களாக குருவின் வீட்டில் ஏற்பட்டுள்ளது. இப்போது ராகு கேது பலமும் வந்துள்ளது. குருபலம், சனிபலம், ராகு,கேதுபலம் என்ற ஆண்டுகிரங்களின் சஞ்சாரம் மிக அற்புதமாக உள்ளதால் நீங்கள் எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும் அது ஈசியாக முடியும்.
நீங்கள் நினைத்துகூட பார்க்க முடியாத காரியங்கள் கூட நடக்கும். முடியவே முடியாது என்ற காரியங்கள் கூட டக்,டக்னு நடந்து முடிந்து உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும். உங்களுக்கு நேரம் நன்றாக இருப்பதால் தசாபுக்திகளும் நன்றாக இருந்தால் சொந்த தொழில் பண்ணலாம்.
நேரம் நன்றாக இருப்பதால் என்ன செய்தாலும் உங்களால் ஜெயிக்க முடியும்.. பணவரவுகள் நன்றாக இருக்கும்… செலவுகள் குறைந்து வருமானம் அதிகரித்து பணம் சேமிப்பு என்று நிலையில் பணத்தை சேமிக்க முடியும்.
ராசிக்கு பன்னிரண்டாம் பாவத்தில் ராகு இருந்து சனி ,கேதுவால் பார்க்க படக்கூடிய அமைப்பால் விரையங்கள் குறையும். செலவுகள் குறையும். மருத்துவ செலவுகள் வராது. தண்டச்செலவுகள் வராது.
ஆறாமிடத்தில் பாவக்கிரகங்கள் இருப்பதால் ஆறாமிடமான கடன்,நோய் ,எதிரி,வம்பு வழக்குகள், தொல்லைகளை கெடுக்கும். கடன்,நோய், எதிரி வம்பு வழக்குகள் இல்லாத வாழ்க்கையை உங்களுக்கு தரும். வழக்குகள் ஏதேனும் இருந்தால் உங்களுக்கே வெற்றி கிடைக்கும். அரசாங்கமே வழக்கு போட்டாலும் உங்களுக்கே வெற்றி கிடைக்கும்.
கடனை எல்லாம் கட்டமுடியும்.கடனை கட்டும் அளவுக்கு வருமானம் அதிகமாக வரும். செலவுகள் குறைந்து வருமானம் அதிகரிக்கும். நோயற்ற வாழ்க்கையை ஆறில் உள்ள கிரகங்கள் உங்களுக்கு வழங்கும்.
சிலருக்கு இடம் ,தோட்டம் ,வீடு போன்ற அசையா சொத்துக்கள் விற்பனையாகி லட்சக்கணக்கில், கோடிக்கணக்கான பணம் கைக்கு வரும். மகிழ்ச்சிகரமான வாழ்க்கை, கொண்டாட்டமான வாழ்க்கை, ஈசியான வாழ்க்கை குருபலம், சனிபலம், ராகு கேது பலத்தால் உங்களுக்கு கடகராசிக்காரர்களுக்கு கிடைக்கும்.
சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை உயரும். உங்களுடைய சமூக அந்தஸ்து உயரும். இதுவரை உங்களை எள்ளி நகையாடியவர்கள் எல்லாம் மூக்கின் விரலை வைத்து ஆச்சரிய படக்கூடிய அளவில் உங்கள் முன்னேற்றம் இருக்கும்.
குருபலத்தால், ராகு ,கேது பலத்தால், சனி பலத்தால் கடகராசிக்காரர்களின் குடும்பத்தில் கல்யாணம், காதுகுத்து, சீமந்தம், திரட்டி, வளைகாப்பு போன்ற சுபகாரியங்கள் நடந்து உங்கள் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்த வண்ணம் இருப்பர்.
வீடே ஜே.ஜே என்று இருக்கும்.
பேங்க்ல லோன் கிடைக்கும். அரசாங்க உதவி கிடைக்கும். படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். வேற்று மதம் ,அந்நிய நாட்டவர்,வேற்று சாதிக்காரர்களால் உதவி கிடைக்கும்.
இப்போது புதியதாக அறிமுகம் ஆகக்கூடிய நண்பர்களால் ,நபர்களால்,நண்பிகளால்,காதலன்,காதலியால் , எதிர்காலத்தில் நன்மைகள் இருக்கும். புதிய இடமாற்றத்தால்,தொழில் மாற்றத்தால், உத்யோக மாற்றத்தால் எதிர்காலத்தில் நன்மைகளும், முன்னேற்றங்களும் ஏற்படும்.
தைரிய வீரியங்கள் அதிகமாக ஏற்பட்டு தன்னம்பிக்கை அதிகம் உள்ளவராக திகழ்வீர்கள். தன்னம்பிக்கையால் எந்த ஒரு காரியத்தையும் திறம்பட முடிப்பீர்கள்.
கணவன் மனைவி உறவு மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும்,ஆதரவுகளும், அனுசரனையும்,ஒத்துழைப்புகளும்,அதாவது தாய், தந்தை, சகோதர,சகோதரிகள், மாமன்,மாமி என்று அனைத்து தரப்பு மக்களின் உதவிகளும் உங்களுக்கு கிடைத்துவிடும்.சுய ஜாதகத்தில் தசாபுக்திகள் நன்றாக இருக்கும் பட்சத்தில் இன்னும் கூடுதலான பலன்களை கடகராசிக்காரர்களுக்கு உண்டு என்று கூறி,இந்த பெயர்ச்சியிலேயே அதிகமாக நன்மைகள் அடையப்போகும் ராசிகளில் கடகம் முக்கியமான இடத்தை பெறுகிறது. நன்மைகள் மட்டுமே நடக்க கூடிய பெயர்ச்சியாக இந்த ராகு கேது பெயர்ச்சி இருக்கப் போகின்றது.
நன்றி
வணக்கம்