ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 மேச ராசி | Rahu Ketu Peyarchi 2019 Mesha Rasi
மேச ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 (Mesha Rasi Rahu Ketu Peyarchi 2019)
இதுவரை உங்கள் ராசியான மேச ராசிக்கு நான்கில் ராகுவும், பத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்து வந்தார்கள்…

மேச ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019
இதுவரை நான்கில் இருந்த ராகு அலைக்கழிப்புகளை தந்து வந்தார். சிலருக்கு இடமாற்றத்தை அளித்தார்.
தாயார் வகையில் சிலருக்கு தொல்லைகளையும், வண்டி வாகன வகையில் செலவுகளையும் , தெண்டச்செலவுகளையும் நான்காம் இடத்து ராகு கொடுத்து சோதனைகளை தந்து வந்தார்.
பத்தில் இருந்த கேது சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் ஊழ்வினையின் காரணமாக யாரோ செய்த தவறுக்கு நீங்கள் பலிகடாவாகி பதவி இறக்கம்,கௌரவக்குறைவு ,வேலையை அவசரப்பட்டு விட்டு விட்டு வேலை தேடி அலைவதையே வேலையாக கொண்டிருந்தீர்கள்.. வேலை செய்யும் இடத்தில் குயுக்தி உள்ள சிலரால் உங்களை பற்றி இல்லாததும் ,பொல்லாததும் சொல்லி உங்கள் மேலதிகாரியிடம் போட்டு கொடுத்து உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் நெருக்கடிகளை உருவாக்கி வந்திருப்பார்கள்.
வேலை செய்யும் இடத்தில் மனநிம்மதி இல்லாமல் தவித்து இருப்பீர்கள். பத்தில் கேது இருந்து கேது தசை அல்லது புக்தி அல்லது கேது அந்தரம் நடக்கும் சிலருக்கு இடமாற்றம், தொழில் மாற்றம், உத்யோக மாற்றம் ஏற்பட்டு இருக்கும்..
வரக்கூடிய மார்ச் முதல் வாரத்தில் பெயர்ச்சியாகும் ராகு கேதுக்கள் , முறையே 3 மற்றும்,9 ம் இடங்களுக்கு பெயர போகின்றார்கள். பொதுவாக ராகு கேதுக்கள் அப்பிரதட்சணமாக சஞ்சாரம் மேற்கொள்வார்கள். மற்ற எல்லா கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றி வரும் போது ராகு,கேதுக்கள் மட்டும் வலமிருந்து இடமாக சுற்றி வருவார்கள்.. அதன்படி இதுவரை நான்காம் இடத்தில் சஞ்சாரம் செய்து கொண்டு இருந்த ராகு மூன்றாம் இடத்துக்கும் ,கேது பத்தில இருந்து ஒன்பதாம் இடத்துக்கும் பெயர்ச்சி ஆகப்போகின்றார்கள்
பொதுவாக ராகு கேதுக்கள் 3,6,11 ல் நன்மைகளை தருவார்கள். இந்த பெயர்ச்சியில் ராகு மூன்றில் இருந்து மேச ராசிக்காரர்களுக்கு பல சகாயங்களை தர போகின்றார்.வேற்று இனத்தவர்களால் நன்மைகள் நடக்கும். வேற்று சாதிக்காரர்களால் ,வேற்று நாட்டினரால் உங்களுக்கு நன்மைகள் கண்டிப்பாக இருக்கும்.
மூன்றாம் இடத்து ராகு நல்ல தனவரவுகளை அளிப்பார். இதுவரை நான்காம் இடத்தில் பகைஷேத்திரம் பெற்றிருந்த ராகு, இப்போது நட்பு நிலையில் இருப்பது சிறப்பு.. வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருந்த மேசராசிக்காரர்களுக்கு நல்ல படியாக வெளிநாட்டு வேலை அமையும்.
சிலருக்கு வீட்டு வேலைகள் நடக்கும். புதிய வீடு கட்ட ஆரம்பிப்பீர்கள்..தடைப்பட்டிருந்த வீட்டு வேலைகள் தடையின்றி நடைபெறும். இதுவரை பணத்தட்டுப்பாடு இருந்து வந்திருக்கும்.இனி கொஞ்சம் உபரிப்பணம் மிச்சமாகும். சேமிக்க முடியும்.
“மூன்று, ஆறு, பதினொன்றில்
ராகு,கேதுக்கள் முகமலர்ந்து
இருக்குமானால்
ஆன்றோர்கள் சகாயம் உண்டாகும்
அதிகார உத்யோகம் உண்டாகும்
சான்றோரும் சினேகமாவர்
சகல சம்பத்தும் தோன்றியே
மனமகிழ்ந்து சுகமுடன் ஜீவிப்பாரே”
ராகு மூன்றில் இருப்பதால் பெரிய மனிதர்கள் சப்போர்ட் கிடைக்கும்.. குருப் 1 , குருப் 2 எழுதக்கூடிய மேச ராசி நேயர்களுக்கு அதிகாரம் செய்யும் பதவிகள் உண்டாகும்.
முக்கியமாக லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
லட்சுமி கடாட்சத்தால் திருமணம் நடக்கும்..
சுகமாக பிழைக்க கூடிய யோகத்தை மூன்றில் இருக்கும் ராகு தருவார்.
கேது பத்தில இருந்து ஒன்பதுக்கு பெயர்ச்சி ஆவதால் கேது ஞான மோட்ச காரகன் என்பதால் ஒன்பதில இருக்கும் கேது
சனியுடன் சேர்க்கை பெறுவதால் சித்தர்கள் வழிபாடு, ஜீவ சமாதி வழிபாடு, குலதெய்வ வழிபாடு ,போன்ற விஷயங்களை சனியுடன் இணைந்து குருவின் வீட்டில் இருக்கும் கேது கண்டிப்பாக தருவார்.
இதுவரை ஒன்பதில் இருந்து தகப்பனார் வழியில் விரயங்களை, தொல்லைகளை ,பூர்வீக சொத்து விரையங்களை தந்த சனியுடன் கேது இணைவதால் சனியின் கொடுமையான பார்வை குறைவதால் சனியின் பார்வையால் இனி கெடுபலன்கள் இருக்காது..
இதுவரை சனி மூன்றை ,பதினொன்றை பார்த்து இளைய ,மூத்த சகோதரர் களுடன் பகை, பிரிவை தந்தார். இனி சகோதர ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தில் ஏற்படும் சுபகாரியங்களின் காரியமாக பிரிந்து இருந்த அண்ணன் தம்பிகள் ஒன்று சேருவார்கள். வெளில கொடுத்து வைத்த ,வெகுநாட்களாக வரவே வராது என்று நினைத்த பணம் உங்களுக்கு கைக்குவந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
சிலருக்கு குருவின் வீட்டில் இருக்கும் சனி,கேதுவால் பின்னாடி நடப்பதை முன்கூட்டியே உணரக்கூடிய ஆற்றலை தருவார். ஞானிகளை,சித்தர்களை கனவிலும், நேரிலும் தரிசிக்கும் பாக்கியம் சிலருக்கு கிட்டும். சிலருக்கு மாந்திரீகத்தில் ஆர்வம் ஏற்படும். கேது ஞானத்தை தருவார் ..காவி வேட்டியின் மேல் ஆர்வம் இருக்கும். அணியப்பிடிக்கும்.
மொத்தத்தில் ராகு,கேதுவால் நன்மைகள் இருக்கும் அதே நேரத்தில் “கொடும் சனி பாம்பிரண்டும் பிற்பலனை செய்வார்கள் ‘என்ற விதிப்படி இந்த வருட பிற்பகுதியில் இருந்து யோகம் ஆரம்பிக்கும். பொதுவாக ராகு கேது பெயர்ச்சி மேசராசிக்காரர்களுக்கு நன்மைகளை மட்டுமே செய்யும். நல்ல பலன்கள் அதிகரிக்கும். முன்னேற்றம் உண்டாகும். தசாபுக்திகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் இன்னும் நல்ல பலன்களை நீங்கள் அனுபவிக்க முடியும்
நன்றி
வணக்கம்
Comments are closed.