மிதுனம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 (Mithuna Rasi Rahu Ketu Peyarchi 2019)
ஏற்கனவே 2019 ல் ஆங்கில புத்தாண்டு ராசிபலனில் ராகு,கேது பெயர்ச்சி பலனையும் சேர்த்து விரிவாக எழுதியிருந்தாலும்,
நண்பர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க நிறைய பேர் போனிலும் நேரிலும் என்னுடைய ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று கேட்பதாலும் ,எல்லோரும் பயன்பெற இந்த ராகு கேது பெயர்ச்சி பலன்கள
எழுதி வருகிறேன்.
மிதுன ராசிக்கு கடந்த ஒன்றரை வருடங்களாக 2,8 ல் இருந்த ராகு கேதுக்கள் பணப்பற்றாக்குறையையும்,
குடும்பத்தில் சலசலப்பையும், கௌரவக்குறைவுகளையும்,கடனையும், வயதான மிதுன ராசிக்காரர்களுக்கு நோய்தொல்லைகளையும்,30, 35 வயது நபர்களுக்கு மனக்குழப்பங்களையும்,சிலருக்கு தேவையற்ற பயத்தையும், எதிர்மறை எண்ணங்களையும் ,அளித்து வந்தார்.
அதாவது இன்னும் குறிப்பாக சொல்ல போனால் ராசிக்கு அருகில் ராகு இருந்து, சனி ஏழில் இருந்து ராசியை பார்த்து கொண்டு இருந்ததால் மேற்படியான பலன்களும் ,உங்களுக்கு எல்லாவற்றிலும் தடை,தாமதங்களையே தந்து வந்து இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் கடும் அலைச்சல்களின் பேரில் தந்து வந்து இருக்கும்.திருமண விஷயங்களில் உங்களுக்கு Speed breaker ஆக இந்த ராகு_கேதுக்கள் இருந்து திருமணத்தை தாமதப்படுத்தி இருக்கும். போதாக்குறைக்கு சனி வேறு ஏழில்
அப்ப 2,8 ல் பாவக்கிரகங்களான ராகு கேதுக்கள் ,போதாக்குறைக்கு ஏழில் சனி.
அப்ப 2,7,8 ம் பாவங்கள் பாவக்கிரகங்களால் முற்றிலும் பாதிப்பு என்பதால் மிதுன ராசிக்காரர்கள் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண தடையும், ஆனவர்களுக்கு பிரிவும்,குடும்பத்தில் சண்டை சச்சரவுகளும் நிச்சயமாக இருந்து வந்துஇருக்கும். அல்லது கணவன் ஓரிடம்,மனைவி ஓரிடத்தில் என்று பிரிந்து வாழும் அமைப்பை சிலருக்கு சனி,ராகு,கேதுக்கள் தந்திருப்பார்கள்..
ராகு,கேது தசை நடப்பில் இருந்து கோட்சாரத்திலும், சாதகமற்ற இடங்களில், ராகு கேதுக்கள் சஞ்சரிக்கும் போது இவர்களுக்கு பாம்பு கனவிலும், நேரிலும் தட்டுப்படும். ஊழ்வினையை உணர வைப்பவர்கள் ராகு கேதுக்கள் தான். சனி ஜாதகத்தில் ராகு கேதுக்கள் இருக்கும் நிலையை பொறுத்து பனிஷ்மெண்ட் தருவார்.
கடந்த காலங்களில் சாதகமில்லாத ,2,8 சஞ்சாரம் செய்து வந்த பாம்புகள் தற்போது 1,7 ல் வந்து அமரப்போகின்றார்கள்…இந்த அமைப்பு முன்ன இருந்தத காட்டிலும் நல்ல அமைப்பு தான் என்பதில் சந்தேகமில்லை.
முதலில் லக்ன ராகு குழப்பங்களை தருவார். எந்த முடிவும் காலதாமதமாக எடுத்து ,அந்த வாய்ப்புகள் தவறும்..வாய்ப்புகள் வாழ்வில் ஒருமுறை தான் வரும். அதை நல்லபடியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதிர்ஷ்ட லட்சுமி டெய்லியும் வந்து வீட்டின் கதவை தட்ட மாட்டார்.
இவர்கள் வாய்ப்புகளை தவறவிடுவார்கள்.தாமதமான முடிவு எடுக்க வைக்கும். மனச்சஞ்சலங்களை தருவார். குழப்ப வாதிகளாக வைத்திருப்பார் ராசியில் உள்ள ராகு. பொதுவாக
(லக்னம் அல்லது ராசியோடு ராகு ,செவ்வாய், சனி மூவரும் சம்பந்தப்படும்போது ஜாதகரின் மனநலம் பாதிக்கப்படும்.)
குருவும் சாதகமற்ற ஆறாமிடத்தில் சஞ்சரிக்கிறார். உறவுகள் பகையாகும்.கடன் வாங்கி கடனை அடைக்க வேண்டும்.
ஏழில் இருக்கும் கேதுவால் நன்மைகள் இருக்கும். அதேநேரத்தில் இந்த உபயம ராசிகளுக்கு ஏழில் இருக்கும் ராகு கேதுக்கள் நன்மைகளை தருவதில்லை.
என்ன காரணம் என்று பார்த்தால் உபயம ராசிகளுக்கு ஏழாமிடம் ,பாதகஸ்தானமாக வரும்.
ராகு கேதுக்கள் இருக்கும் இடத்தின் அதிபதியை போலவும், தன்னை பார்த்த சேர்ந்த கிரகங்களின் பலனை பிடுங்கி தருபவர் என்பதாலும் ஏழில் இருக்கும் போது பாதகாதிபதியாக மாறி விடுவார்கள். ராகு கேதுக்களுக்கு சொந்த வீடு இல்லை. எந்த வீட்டில் இருக்கிறார்களோ அந்த வீட்டை சொந்த வீடாக மாற்றி கொள்வார்கள்.
சரி ராகு,கேதுக்களால் என்ன பலன் என்றால் முற்கூறில் சிரமத்தையும்,பிற்கூறில் சுகத்தையும், பொருள் வரவுகளும், முன்னேற்றங்களும், உங்கள் ,மதிப்பு, மரியாதை அந்தஸ்து உயர்வதுவும் இருக்கும்..
ராகு கேதுக்கள் ஒரு ராசியில் ஒன்றரை வருடங்கள் இருப்பார்கள். முதல் ஒன்பது மாதங்கள் ராகு,கேது ,குரு,சனியால் பெரிய நன்மைகள் எதுவும் இருக்காது.
இரண்டாவது ஒன்பது மாதங்கள் மிகச்சிறந்த நல்ல பலன்களை ராகு,கேது,குரு தருவார்கள்..
அப்ப மிதுன ராசிக்காரர்களுக்கு ஒன்பது மாதங்கள் போகவேண்டும்.. ஒருமுறை காளஹஸ்தி சென்று வரவேண்டும். அல்லது திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் சென்று பால் அபிஷேகம் செய்து வர ராகு,கேதுக்களால் தொல்லைகள் இருக்காது.
“பிருகு,சனி ,பாம்பிரண்டும்
பிற்பலனை செய்யும்’”ஒன்பது மாதங்களுக்கு பிறகு வாழ்க்கையில் குரு பகவான் உங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றி வைப்பார்.திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடந்து விடும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துவிடும்.
தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கி லாபம் வரும். தம்பதிகள் இடையே அன்னியோன்யம் மிகச்சிறப்பாக இருக்கும். கூட்டுத்தொழில் பிரகாசிக்கும்.
திருமண வழக்குகள் ஏதாவது இருந்தால் அது நீங்கி இரண்டாவது திருமணம் நடக்கும். ஒன்பது மாதங்களுக்கு பிறகு உங்களுக்கு நல்ல தண்ணீர் வசதிகிடைக்கும்.
நீங்கள் எங்கு கிணறு தோண்டினாலும்,போர் போட்டாலும் தேவையான அளவு தண்ணீர் கிடைக்கும். நினைத்த காரியங்கள் நினைத்த மாதிரி நடக்கும். இளைய சகோதர சகோதரிகள் ஒற்றுமையும் அவர்களால் ஆதாயங்களும் நிச்சயம் இருந்தே தீரும்.மொத்தத்தில் ஒன்பது மாதங்கள் போயிட்டால் அடுத்து ஒருவருடங்கள் உங்களுக்கு யோகமான ஆண்டாக இருக்கும். “குருபதி ஏழில் நிற்க புனிதன் கீர்த்தி என்று சொல்லு”
பேரும் புகழெல்லாம் உங்களுக்கு வாங்கி தரும் .
நன்றி
வணக்கம்