ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 ரிஷப ராசி | Rahu Ketu Peyarchi 2019 Rishaba Rasi

1,899

ரிஷப ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 (Rishaba Rasi Rahu Ketu Peyarchi 2019)

இந்த வருடம் திருக்கணிதப்படி 2019 மார்ச் மாதம் முதல் வாரத்தில் ராகு,கேதுக்கள் பெயர்ச்சியாகின்றார்கள்.ஏற்கனவே 2019 புத்தாண்டு பலன்களில் ராகு ,கேது பெயர்ச்சி பலன்களையும் சேர்த்தே எழுதி இருந்தேன். இப்போது நண்பர்கள் கேட்டு கொண்டதுக்கு இணங்க ராகு கேது பெயர்ச்சி பலன்கள் தனியாக எழுதிக்கொண்டு உள்ளேன்

இதுவரை உங்கள் ராசிக்கு அதாவது ரிஷப ராசிக்கு 3,9 ல் இருந்த ராகு,கேதுக்கள் 2,8 க்கு மாறப்போகிறார்கள்.இந்த அரவங்களின் பெயர்ச்சி உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகின்றது???

இப்போது மாறியுள்ள இடங்கள் அவ்வளவு சிறப்பு இல்லை. பொதுவாக 2,,4,7,8,12 போன்ற இடங்களில் பாவர்கள் இருக்கக்கூடாது.

ராகு இரண்டில் இருந்து தனம்,குடும்பம் ,வாக்கு ,கல்வி, கண்,பொன், அதிர்ஷ்டம் போன்ற காரகத்துவங்களில் ராகு பிரச்னைகளை தருவார். மொதல்ல கொடுத்த வாக்க காப்பாற்ற முடியாது. இன்னைக்கு உங்களுக்கு பணம் வந்துரும்னு நினைச்சு ஒருத்தருக்கு வாக்கு கொடுத்திருப்பீங்க…

உங்களுக்கு வரவேண்டிய பணம் குறிப்பிட்ட நேரத்தில் பணம் வராமல் போய் வாக்கு தவற நேரும். வினாயகர் “இன்று போய் நாளை வா ” என சனியை பணித்ததுபோல நாளை,நாளை என்று நாளை கடத்துவதால் உங்கள் மேல் நம்பிக்கை ,நாணயம், நா நயம் குறையும்…

கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். யாராவது ஒருவர் விட்டு கொடுத்து செல்ல குடும்ப ஒற்றுமை ஏற்படும்…

இரண்டில் ராகு,எட்டில் சனி என்ற அமைப்பு இருப்பதால் ,அஷ்டம சனியும் நடப்பில் இருப்பதால் மாணவர்கள் நன்கு கவனத்துடன் ,ஈடுபாட்டுடன், அக்கறையுடன் படிக்க வேண்டும். புத்தகத்தை எடுத்தாலே தூக்கம் தான் வரும். கூட ராகுதசையும் படிக்கற காலத்துல வந்து விட்டால் கேட்கவே வேண்டியது இல்லை…பையன் ரொம்ப பிடிவாதமாக இருப்பான்.அவனை கவனிக்கறதுக்கு நாலு ஆள் வேண்டும்.
குறும்பு, சேட்டை சமாளிக்க முடியாத அளவுக்கு இருக்கும்.அடமென்டா இருக்கும்..

வயதான ரிஷப ராசிக்காரர்களுக்கு , கண் அறுவை சிகிச்சைகள் செய்ய கண் டாக்டரிடம் சென்று ஒரு நாள், இருநாள் தங்கி ட்ரீட்மெண்ட் செய்ய வைக்கும்.
பணம் எவ்வளவு சம்பாதித்தாலும் ரிஷபராசிக்காரர்கள் சேமிக்கவே முடியாத நிலை கடந்த மூன்றரை வருடங்களாக உள்ளது… ஏதோ கடவுளின் கருணையால் குருபார்வை ராசிக்கு ஏற்பட்டு உள்ளதால் உங்களால் எந்த ஒரு பிரச்னையும் சமாளிக்க முடியுது.

பஞ்சபாண்டவர்களுக்கு கிருஷ்ணன் எப்படி பாதுகாப்பு கவசமாக இருந்தாரோ அதேபோல குருபார்வை ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக உள்ளது. ஏதோ ஆண்டவன் அனுகிரகத்தால் பணம் ஏதோ ஒரு விதத்தில் வந்து விடுகிறது. ஆனால் பணத்தை சேமிக்க முடியவில்லை..

கடுமையான அஷ்டம சனி நடந்து கொண்டிருந்தாலும், உங்கள் சுயஜாதகத்தில் ராசிநாதன் சுக்கிரன் வலுவாக ஆட்சி, உச்சம் கேந்திரம், திரிகோணங்களில் வலுவாக அமைய இந்த அஷ்டம சனி,அஷ்டம கேதுவை சமாளிக்க முடியும்…

அதேபோல சுய ஜாதகத்தில் சனி பகை,நீசம், பெற்று குரு, ,புதன்,மற்றும் சுக்கிரன்,லக்ன சுபர்களின் பார்வையை பெற அஷ்டம சனியால் பாதிப்பு இருக்காது…

எட்டாம் இடத்தில் கேது இருப்பதால் சிலருக்கு கௌரவ குறைவுகள் வரும்.
சிலருக்கு ஞாபக மறதிவந்து பொருளை ஒரு இடத்தில் வைத்துவிட்டு ,இன்னொரு இடத்தில் தேடுவார்கள். “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே” என்ற பாடல் இவர்களுக்கு பொருந்தும். மறதியால் ஏதாவது ஒரு பொருள், விலைமதிப்புள்ள,நீங்கள் பெரிதும் விரும்பக்கூடிய ஒரு பொருள் தொலைந்து உங்களுக்கு அதன் மூலம் மனக்குழப்பங்கள் வரும்.

சிலருக்கு எட்டில் இருக்கும் சனி,கேதுவால் இடமாற்றம் இருக்கும். மாமனார், மாமியார் பெரிய டார்ச்சர் என்று நினைத்து கொண்டு தனிக்குடித்தனம் செல்வர்.ஆனால் அவர்களுக்கு தெரியாது. மூத்தோர் சொல்லும் ,முதிர்நெல்லி கனியும் முன்னே கசக்கும். பின்னே இனிக்கும்.
என்பது போல அவர்கள் இல்லாத போதுதான் அவர்களுடைய அருமை தெரியும். சிலர் ஒரே வீட்டை இரண்டாக பிரித்து அல்லது சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வருவதுபோல வீட்டின் நடுவில் ஒருகோட்டை கிழித்து தனிஉலை வைத்து தனியாக சமைத்து சாப்பிடுவார்கள். இது கணவன் மனைவிக்குள்ளும் வரலாம் என்பதால் கூடுதல் எச்சரிக்கை தேவை.

எட்டில் சனி,கேது இருப்பதால் சிலருக்கு அதீதமான கஷ்டத்தின் காரணமாக மாந்தீரிகத்தை நாடுவார்கள்.யாராவது நமக்கு செய்வினை வைத்துவிட்டார்களோ என்று போலி சாமியார்களிடம் போய் ஏமாறுவார்கள்.பணத்தை தொலைப்பார்கள்.

உங்களுக்கு சுயஜாதகத்தில் நல்ல தசாபுக்திகள் நடந்தால் இந்த பலன்கள் எல்லாம் மாறி நல்ல பலன்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More