ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 துலாம் ராசி | Rahu Ketu Peyarchi 2019 Thula Rasi
துலாம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 (Thula Rasi Rahu Ketu Peyarchi 2019)
இதுவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பத்தில் கடகத்தில் இருந்த ராகு இப்போது ஒன்பதாம் இடமான மிதுனத்திற்கும், இதுவரை நான்காம் இடத்தில் இருந்து வந்த கேது இப்போது மூன்றாம் பாவமான தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைய இருக்கிறார்கள்.
இதுவரை உங்களுக்கு அலைக்கழிப்புகளை ராகு கேதுக்கள் அளித்து வந்தார்கள். வெட்டி அலைச்சல்களை தந்தார்கள். இங்கிருந்து அங்க ,அங்கிருந்து இங்க என இங்க ஓடியும் கெட்டுச்சு,அங்க ஓடியும் கெட்டுச்சு என்பதுபோல பிரயோசனம் இல்லாத பிரயாணங்களை ராகு கேதுக்கள் அளித்து வந்தார்கள்.
இப்போது மாறியிருக்கும் இடங்கள் நல்ல இடங்கள் ஆகும். ராகு ஆன்மீக எண்ணங்களை அதிகளவில் தருவார். சிவவழிபாடுகளை மேற்கொள்ள வைப்பார். ராகு இந்த லக்னத்திற்கு யோகரான சனியை பார்த்து கொண்டு இருப்பது யோகம். நான்கு ஐந்துக்குடைய சனியை ராகு பார்த்து இருப்பதால் ராகுவால் நன்மைகள் இருக்கும்.
வேற்று சாதி ,வேற்று மனிதர்கள் உதவி கிடைக்கும். சிலருக்கு வீடு கட்டும் யோகம் உண்டாகும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்துக்களில் இருந்த தடைகள் ,வில்லங்கங்கள், பிரச்னைகள் விலகி நன்மைகள் உண்டாகும்.பாகப்பிரிவினை ஏற்பட்டு உங்களுக்கு உரிய பாகம் கிடைக்கும்.
தகப்பனார் வழி சொந்தங்களின் வழியாகவும் சில நன்மைகள் ,தந்தை வழி பாட்டனார் வழியாகவும் உதவிகள் இருக்கும். இது சனியின் பலன்களை ராகு வாங்கி தருவதால் ஏற்படக்கூடிய பலன்கள். ஏற்கனவே குருபலம் வேறு உள்ளது.2017 டிசம்பர் முதல் சனிபலமும் சேர்ந்தே உள்ளது.இப்போது ராகு,கேது பலமும் கூடிவிட்டது.
கேது மூன்றில் சனியுடன் இணைந்து இருப்பதால் வீட்டில் சுபகாரியங்கள் நிறைய நடக்கும். நீங்கள் நினைத்து பார்க்க முடியாத காரியங்கள் கூட டக்,டக்,டக் என்று நடந்து முடியும். கேது உபஜெய ஸ்தானத்தில் இருப்பதால் காரிய வெற்றி கிடைக்கும். ஆனால் பாவர்கள் மூன்றில் கூட்டமாக கும்மியடிப்பதால் இளைய சகோதர்கள் பகை ஏற்படும்.
அரசாங்க உதவி கிடைக்கும். வீடு கட்ட முடியும். இடம் வாங்க முடியும். லட்சுமி கடாட்சத்தால் பணவரவுகள் அதிகம் உண்டாகி கடன் அடைக்க முடியும் ..புதிய தொழில்கள் தொடங்கி லாபகரமாக நல்ல முறையில் நடந்து வரும்.இந்த பெயர்ச்சியினால் அதிகமாக நன்மைகள் அடையப்போகும் ராசிகளுல் துலாமும் ஒன்று.
உங்களின் அவநம்பிக்கை எல்லாம் மாறி தன்னம்பிக்கை, புத்துணர்ச்சி ,அழகு அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகமாவதால் எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். பேரும், புகழும் கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும்.அந்தஸ்து உயர்வு, ஏற்பட்டு சமுதாயத்தில் உங்களுக்கு என ஒரு பெயர் கிடைக்கும்.
இந்த வருட ஆரம்பித்தில் இருந்தே எல்லா நல்லதுகளும் நடக்க ஆரம்பிக்கும். அடுத்த வருடமும் குரு தைரிய வீரிய ஸ்தானத்தில் ஆட்சி பெறுவதால் அடுத்த வருடம் சனி அதிகமாக சுபத்தன்மை அடைவதால் அடுத்த வருடம் இந்த இளம் வயது துலாம் ராசிக்காரர்களுக்கு குழந்தை பாக்கியம் சிறப்பாக இருப்பதால் இந்த வருடம் திருமணம் நடந்து விடும்.சிலருக்கு வீடுகட்டும் வீடு கட்டும் யோகமும் உண்டாகும்.
மொத்தத்தில் குருபலம் ,சனிபலம்,ராகு கேது பலம் என அனைத்தும் சிறப்பாக இருப்பதால் நன்மைகள் மட்டுமே நடக்கும். யாருக்கு என்ன தேவையோ அது உடனே கிடைக்கும். சிறிய அளவிலான முயற்சிக்குபெரிய அளவிலான நன்மைகள் கிடைக்கும் ..சிலருக்கு புதிய தொழில் அமைந்து எதிர்காலம் சிறக்கும். கஷ்டப்படாத எளிதான ,ஈசியான வாழ்க்கை துலாம் ராசிக்காரர்களுக்கு உண்டாகும்.
Comments are closed.