தனுசு ராசி (மூலம் பூராடம் உத்திராடம் 1) ராகு கேது பகவான் பெயர்ச்சி பலன்கள்
வாக்கியப் பஞ்சாங்கப்படி
பிலவ வருஷம் பங்குனி மாதம் 07 ஆம் தேதி (21.03.2022) திங்கட்கிழமை சூர்ய உதயாதி 22.06 நாழிகை அளவில் முறையே ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்கள்
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி
பிலவ வருஷம் பங்குனி மாதம் 29 ஆம் தேதி (12.04.2022) செவ்வாய்க்கிழமை சூர்ய உதயாதி 19.24 நாழிகை பகல் 01:48 அளவில் முறையே ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்கள்
ராகு கேது பகவான் பெயர்ச்சி சுமார் ஒன்னரை வருடம் ஒரு ராசியை கடப்பார் அதன் படி Oct 2023 வரை இருப்பார்
🎈உங்கள் ராசிக்கு 5-ஆம் இடம் பூர்வ புண்ணியம் குழந்தை பாக்கியம் மனம் தொழில் கல்வி ஸ்தானம் என்று சொல்லக்கூடிய இடத்திற்கு ராகு பகவான் பெயர்ச்சியாகிறார்
🎈உங்கள் 11ஆம் இடம் லாபம் ஆசை அபிலாசைகள் மூத்தவர்கள் என்று சொல்லக்கூடிய இடத்திற்கு கேது பகவான் பெயர்ச்சியாகிறார்.
ராகு பகவான் பெயர்ச்சி பலன்கள் 2022 கன்னி ராசி
- பூர்வ புண்ணியம் களில் குறைபாடுகள் உண்டாகும்
- தாத்தா வழியில் இருந்த சொத்துப் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்
- பெற்ற பிள்ளைகள் வழியில் தொல்லை கள் சந்திக்கும் காலகட்டம்
- மனக் குழப்பங்கள் ஏற்படும்
- அமைதி பாதிக்கப்படும்
- மறதி கூடும்
- மகிழ்ச்சி குறையும்
- தொழில் கல்வி படிப்பவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமையும்
- மந்திரங்கள் சித்திக்கும் ஆன்மிகத் துறையில் பற்று அதிகமாகும்
- கண்ணியம் நல்லொழுக்கம் கெடும்
- உறுதியான எண்ணங்கள் தளர்வடையும்
- வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சந்திக்கும் காலகட்டம
- ஆழ்ந்த புலமை கிட்டும்
- கர்ப்பம் தடைபடும்
- தானதர்மம் அதிகரிக்கும்
- வரும்முன் அறியும் சக்தி ஏற்படும்
- வணிக ஈடுபாடுகளில் சிக்கல்களை சந்திப்பீர்கள்
- பணம் ஈட்டும் வழிகள் அதிகரிக்கும்
- பங்குசந்தைகளில் கள்ளச் சந்தைகளில் லாபங்கள் அதிகரிக்கும்
- புத்திர பாக்கியம் தடைபடும்
கேது பகவான் பெயர்ச்சி பலன்கள் 2022 கன்னி ராசி
- லாப வரவுகள் தடைப்படும்
- மூத்த சகோதர வழியில் பிரச்சனைகள் தொந்தரவுகள் ஏற்படும்
- இளைய மனைவி மூலம் பிரச்சினைகளை சந்திக்கும் காலகட்டம்
- காரிய சித்திகள் தடைபடும்
- சொத்துக்கள் சேர்க்கை பிரச்சனையை தரும்
- அதிர்ஷ்டம் நடைபெறும்
- ஆசை அபிலாசைகள் நிறைவேறுவதில் தடை தாமதங்கள் உண்டாகும்
- விரும்பிய குறிக்கோளை அடைய முடியாத நிலைமை உண்டாகும்
- கௌரவ பதவி பிரச்சனைகள் ஏற்படும்
- பணப்புழக்கம் தடைபடும்
- மூதாதையர் சொத்துக்களில பிரச்சனைகளை சந்திக்கும் காலம்
- மருமகள்கள் வழியில் தொந்தரவுகள் அதிகரிக்கும்
- நாயின் ஆயுள் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்
- சகோதரனின் பாக்கியம் தடை போடும் சண்டை சச்சரவுகள் ஏற்படும்
- கல்வியில் தடைகள் உண்டாகும்
- புதிய அணிகலன்கள் தொலைந்து போக வாய்ப்புண்டு
- முழங்கால் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்
- நீண்ட நாட்களாக இருந்த உறவுகள் தடைபடும்
- தகாத நட்புகள் ஏற்படும் அதனால் பெயர் கெடும்
- குறுக்கு வழி வருமானத்தில் கவனம் தேவை அல்லது தடைபடும்
- நீண்ட நட்பில் உள்ளவர்களுடன் பிரச்சினைகள் ஏற்படும்
- அத்தை மருமகன் வழியில் தொந்தரவுகள் ஏற்படும்
- தோள்பட்டை வலி காது வலி இடது கை வலி ஏற்படும்
- நீண்ட நாட்களாக நோய்கள் உள்ளவர்களுக்கு நோய் அதிகரிக்கும்
பரிகாரம்:
ஞாயிற்றுக்கிழமை ராகு வேளையில் திருநாகேஸ்வரம் ராகு பகவானையும் , கீழப்பெரும்பள்ளம் கேது பகவானையும் தரிசிக்க சிறப்பு
அல்லது
காளஹஸ்தி சென்று காலஹஸ்தி நாதரை வழிபட சிறப்பு
தினந்தோறும் விநாயகருக்கு அருகம்புல் வைத்து வழிபாடு
நாச்சியார் கோயில் கல் கருடன் வழிபாடு அவசியம்
குலதெய்வ கோவிலில் மொட்டை அடிக்க வேண்டும்
இவைகள் யாவும் பொதுபலன்களே. உங்கள் ஜனன ஜாதகம், தசா புத்தி, கிரக பலம் மற்ற கிரக பெயர்ச்சிகள் கொண்டு பலன்களில் மாற்றம் உண்டாகும்.