கன்னி ராசி (உத்திரம் 2,3,4 அஸ்தம் சித்திரை 1 2) ராகு கேது பகவான் பெயர்ச்சி பலன்கள்
வாக்கியப் பஞ்சாங்கப்படி
பிலவ வருஷம் பங்குனி மாதம் 07 ஆம் தேதி (21.03.2022) திங்கட்கிழமை சூர்ய உதயாதி 22.06 நாழிகை அளவில் முறையே ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்கள்
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி
பிலவ வருஷம் பங்குனி மாதம் 29 ஆம் தேதி (12.04.2022) செவ்வாய்க்கிழமை சூர்ய உதயாதி 19.24 நாழிகை பகல் 01:48 அளவில் முறையே ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்கள்
ராகு கேது பகவான் பெயர்ச்சி சுமார் ஒன்னரை வருடம் ஒரு ராசியை கடப்பார் அதன் படி Oct 2023 வரை இருப்பார்
🎈உங்கள் ராசிக்கு 8-ஆம் இடம் ஆயுள் ஸ்தானம், திடீர் அதிர்ஷ்டம் என்று சொல்லக்கூடிய இடத்திற்கு ராகு பகவான் பெயர்ச்சியாகிறார்
🎈உங்கள் ராசிக்கு கேது பகவான் 2மிடம் தனவரவு குடும்பம் என்று சொல்லக்கூடிய இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்.
ராகு பகவான் பெயர்ச்சி பலன்கள் 2022 கன்னி ராசி
- வாழ்க்கைப் போராட்டங்கள் அதிகரிக்கும்
- எல்லாவற்றிலும் கடுமையான போராட்டங்கள் இருந்து கொண்டே இருக்கும்
- ஆயுள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கும் காலம் வயதானவர்கள் கவனமாக இருக்கவும்
- உடல் நலத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் இல்லையெனில் மீள முடியாத வியாதிகள் ஆரம்பமாக வாய்ப்புகள் உண்டு
- தோல் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் அதிகரிக்கும்
- தோல்விகள் அதிகரிக்கும் மனப்போராட்டங்கள் உண்டாகும்
- பில்லி சூனியம் போன்ற பிரச்சனைகளை சந்திக்கும் காலம்
- சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்கள் மர்ம உறுப்புகளில் பிரச்சனைகள் அடிவயிறு பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும்
- அரசு காரியங்களில் கவனமாக இருக்கவேண்டும் இல்லையெனில் அரசு சம்பந்தப்பட்ட தண்டனைகள் கிடைக்கும்
- திடீர் திடீர் அச்சங்கள் ஏற்படும்
- பல இழப்புகளை சந்திக்கும் காலகட்டம்
- கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் கொடுக்கல் வாங்கலில் மிகமிக எச்சரிக்கை அவசியம்
- உடல் உறுப்புக்களில் சேதாரங்கள் உண்டாகும் அதாவது அறுவை சிகிச்சை ஏற்பட வாய்ப்புண்டு
- மனத்துயரம் தொடர்ச்சியான தோல்வி நீங்காத பகை காரியத் தடைகள் அதிகரிக்கும்
- இயந்திர பணிகளில் உள்ளவர்கள் விருந்து எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும் இல்லையெனில் காயங்கள் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புண்டு
- கணவன் மனைவி இடையே விரிசல் அதிகரிக்கும்
- ஆயுள் காப்பீடு பணம் இவைகள் வந்து சேரும்
- லஞ்ச லாவண்யத்தில் ஈடுபடாமல் இருப்பது சிறப்பு
- புதையல் சம்பந்தப்பட்ட நன்மைகள் ஏற்பட வாய்ப்புண்டு
- மனைவி பெயரில் உள்ள சொத்துகளில் பிரச்சனைகளை சந்திக்கும் காலகட்டம் அல்லது குறைவு ஏற்படும்
- எதிர்பாராத தன வரவும் நஷ்டமும் ஏற்படும் கால கட்டம்
- அரசாங்க காரியங்களில் கவனமாக இல்லை எனில் சிறைவாசம் அனுபவிக்கும் காலகட்டம்
- ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட படிப்புகளில் நன்மைகள் ஏற்படும் தொழில் கல்வி படிக்க நினைப்பவர்கள் வெளிநாட்டில் நல்ல படிப்பு கிடைக்கும்
- பெண்களுக்கு ஜனன உறுப்பு களில் பிரச்சனைகளை சந்திக்கும் காலகட்டம்
- தற்கொலை எண்ணங்கள் அதிகரிக்கும்
கேது பகவான் பெயர்ச்சி பலன்கள் 2022 கன்னி ராசி
- தனம் பணம் பொருள் நாசம் ஏற்படும்
- கடன் கொடுப்பது கொடுக்கல் வாங்கல் செய்வது தவிர்க்க வேண்டிய காலகட்டம்
- கொடுத்த பணம் திரும்பி வராது
- தேவையற்ற வாக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்
- குழந்தைகளுக்கு படிப்பு தடைபடும்
- தேவையற்ற வம்பு வழக்கு வாய்த் தகராறில் ஈடுபட வேண்டாம்
- குடும்பத்தில் பிரச்சனைகள் தலை தூக்கும்
- கண் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் நகம் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்படும்
- மூக்கில் காயங்கள் ஏற்படும்
- காரியத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய காலகட்டம்
- ரத்தின வகைகளில் குறைவு ஏற்படும்
- நெருங்கிய நண்பர் உறவினர்கள் விருந்தாளிகள் வழியில் பிரச்சினைகள் ஏற்படும்
- பணப்புழக்கம் கடுமையாகும் கையிருப்பு கரையும்
- செலவில் சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டிய காலகட்டம் பரந்த மனப்பான்மையை கைவிட வேண்டிய காலகட்டம்
- பெண்கள் பொது இடங்களில் தங்கும் போது கவனமாக இருக்க வேண்டும்
- மசாலா உணவுகள் வெளி உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
பரிகாரம்:
ஞாயிற்றுக்கிழமை ராகு வேளையில் திருநாகேஸ்வரம் ராகு பகவானையும் , கீழப்பெரும்பள்ளம் கேது பகவானையும் தரிசிக்க சிறப்பு
அல்லது
காளஹஸ்தி சென்று காலஹஸ்தி நாதரை வழிபட சிறப்பு
தினந்தோறும் விநாயகருக்கு அருகம்புல் வைத்து வழிபாடு
கருடாழ்வார் வழிபாடு தினந்தோறும்
அடிக்கடி குலதெய்வ வழிபாடு செய்வது சிறப்பு
இவைகள் யாவும் பொதுபலன்களே. உங்கள் ஜனன ஜாதகம், தசா புத்தி, கிரக பலம் மற்ற கிரக பெயர்ச்சிகள் கொண்டு பலன்களில் மாற்றம் உண்டாகும்.