ராகு கேது பகவான் பெயர்ச்சி பலன்கள் கடக ராசி 2022 to 2023

0 328

கடக ராசி (புனர்பூசம் 4, பூசம் ஆயில்யம்) ராகு கேது பகவான் பெயர்ச்சி பலன்கள்

வாக்கியப் பஞ்சாங்கப்படி

பிலவ வருஷம் பங்குனி மாதம் 07 ஆம் தேதி (21.03.2022) திங்கட்கிழமை சூர்ய உதயாதி 22.06 நாழிகை அளவில் முறையே ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்கள்

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி

பிலவ வருஷம் பங்குனி மாதம் 29 ஆம் தேதி (12.04.2022) செவ்வாய்க்கிழமை சூர்ய உதயாதி 19.24 நாழிகை பகல் 01:48 அளவில் முறையே ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்கள்
ராகு கேது பகவான் பெயர்ச்சி சுமார் ஒன்னரை வருடம் ஒரு ராசியை கடப்பார் அதன் படி Oct 2023 வரை இருப்பார்
உங்கள் ராசிக்கு 10-ஆம் இடம் கர்ம ஸ்தானம் என்று சொல்லக்கூடிய இடத்திற்கு ராகு பகவான் பெயர்ச்சியாகிறார்
உங்கள் ராசிக்கு கேது பகவான் 4மிடம் தாய் வீடு வண்டி வாகனம் கல்வி என்று சொல்லக்கூடிய இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

ராகு பகவான் பெயர்ச்சி பலன்கள் 2022 கடக ராசி

தொழில் ஜீவனம் இவைகளில் மேன்மை கிட்டும்
வெளிநாட்டு அந்நிய தேச வேலைவாய்ப்புகள் அமையும்
மாற்று மதத்தினர் மூலம் நன்மைகள் வந்து சேரும்
அரசு பணிக்காக காத்திருப்பவர்களுக்கு அரசு பணி கிடைக்கும்
ஆதிக்கம் செலுத்தக் கூடிய வகையில் உயர்ந்த பதவிகள் அமையும்
தெய்வ வழிபாடுகள் அதிகரிக்கும் மந்திர சித்தி ஏற்படும்
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தத்துப் பிள்ளை தத்தெடுக்கும் காலம்
செல்வந்தர் என்ற நிலையை அடையும் காலகட்டமாக இருக்கும்
புகழ் கௌரவம் கூடும்
அரசு வேலையில் இருப்பவர்கள் அரசு முத்திரை குத்தும் அளவிற்கு அதிகார பதவிகள் கிடைக்கும் மிக உயர்ந்த நிலையை அடையலாம்
அதிகாரப் பதவிகள் வந்து சேரும்
வணிகம் உயரும்
வண்டி வாகன வசதிகள் அதிகரிக்கும்
மருத்துவத் துறையில் உள்ள மருத்துவர்களுக்கு பொன்னான காலகட்டம்
நீண்ட நாட்களாக பிதுர்கடன் தீராதவர்களுக்கு இந்த காலகட்டத்தில் பரிகாரம் மூலமாக தீர்வுகள் கிடைக்கும் தீரும்
தொடை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்
சொத்து சுகம் சேரும்
பல ஊர்களுக்கு சென்று திரவியம் தேடும் காலகட்டம்
வீட்டில் ஒரு கருமம் ஏற்படும்

Jothida Rathna Chandrasekaran Post

கேது பகவான் பெயர்ச்சி பலன்கள் 2022 கடக ராசி

தாயாருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் தாய்வழி உறவுகள் பிரச்சனைகளை சந்திக்கும் காலகட்டம்
வீடு மாற்றம் ஏற்படும். சொத்து வீடு இழப்பு ஏற்படும்
வாகன பயணங்களில் மிகுந்த எச்சரிக்கை அவசியம்
உறவினர்கள் வழியில் சிக்கல்களை சந்திக்கும் காலகட்டம்
வித்தை சுகஜீவனம் கெடும்
கல்லூரிப் படிப்பில் தடை தாமதங்கள் ஏற்படும்
காரிய வெற்றிகளில் தடைகள் உண்டு
அந்தரங்க வாழ்க்கை குறித்து யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் இல்லையெனில் பாதிப்புகள் ஏற்படும்
தீராத நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்
பரம்பரை சொத்துக்களில் பிரச்சனைகளில் சந்திக்கும் காலகட்டம்
மனைவிவழி சீதனம் பொருள்வரவு இவைகளில் தடை தாமதங்கள் உண்டாகும்
புதையல் சேமிப்புகளில் இக்கட்டான சூழ்நிலை உண்டாகும்
கால்நடைகளுக்கு பிரச்சனைகளை சந்திக்கும் காலம்
பெண்களுக்கு மாதவிடாய் தொந்தரவுகள் அதிகரிக்கும் கர்ப்பம் சார்ந்த பிரச்சனைகளை சந்திக்கும் காலம்

பரிகாரம்:

ஞாயிற்றுக்கிழமை ராகு வேளையில் திருநாகேஸ்வரம் ராகு பகவானையும் , கீழப்பெரும்பள்ளம் கேது பகவானையும் தரிசிக்க சிறப்பு
அல்லது

காளஹஸ்தி சென்று காலஹஸ்தி நாதரை வழிபட சிறப்பு.
தினந்தோறும் விநாயகருக்கு அருகம்புல் வைத்து வழிபாடு
எறும்பு புற்றுக்கு சர்க்கரை தூவி வர வேண்டும்

இவைகள் யாவும் பொதுபலன்களே. உங்கள் ஜனன ஜாதகம், தசா புத்தி, கிரக பலம் மற்ற கிரக பெயர்ச்சிகள் கொண்டு பலன்களில் மாற்றம் உண்டாகும்.

Leave A Reply

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More