ராகு கேது பகவான் பெயர்ச்சி பலன்கள் மகர ராசி 2022 To 2023

0 359

மகர ராசி (உத்திராடம் 2 3 4 திருவோணம் அவிட்டம் 1) ராகு கேது பகவான் பெயர்ச்சி பலன்கள்

வாக்கியப் பஞ்சாங்கப்படி

பிலவ வருஷம் பங்குனி மாதம் 07 ஆம் தேதி (21.03.2022) திங்கட்கிழமை சூர்ய உதயாதி 22.06 நாழிகை அளவில் முறையே ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்கள்

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி

பிலவ வருஷம் பங்குனி மாதம் 29 ஆம் தேதி (12.04.2022) செவ்வாய்க்கிழமை சூர்ய உதயாதி 19.24 நாழிகை பகல் 01:48 அளவில் முறையே ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்கள்
ராகு கேது பகவான் பெயர்ச்சி சுமார் ஒன்னரை வருடம் ஒரு ராசியை கடப்பார் அதன் படி Oct 2023 வரை இருப்பார்
🎈உங்கள் ராசிக்கு 4-ஆம் இடம் தாய் வீடு மனை சொத்துக்கள் ஸ்தானம் என்று சொல்லக்கூடிய இடத்திற்கு ராகு பகவான் பெயர்ச்சியாகிறார்
🎈உங்கள் 10ஆம் இடம் கர்ம ஸ்தானம் என்று சொல்லக்கூடிய இடத்திற்கு கேது பகவான் பெயர்ச்சியாகிறார்.

ராகு பகவான் பெயர்ச்சி பலன்கள் 2022 கன்னி ராசி

  • தாயார் தாய் வழி உறவுகளில் சிக்கல்கள் ஏற்படும்
  • புதிய வீடு மனை வாங்கும் காலகட்டம் சிலருக்கு சொத்து இழப்புகள் ஏற்படும்
  • பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு தடைகள் ஏற்படும்
  • வித்தைகளில் தடைகள் உண்டு
  • சுகஜீவனம் பாதிக்கப்படும்
  • கல்லூரிகளில் விருதுகள் வாங்குவதில் தடை தாமதங்கள் உண்டாகும்
  • உறவினர் வகையில் தொந்தரவுகள் ஏற்படும்
  • சீட்டுப்பணம் இழக்கும் அபாயம் உண்டு
  • அந்தரங்க வாழ்க்கையை அடுத்தவரிடம் பகிர வேண்டாம் அந்தரங்க வாழ்க்கையில் பாதிப்பும் உண்டு
  • தூரதேச பயணங்கள் ஏற்படும்
  • தீராத நோய்கள் தொற்றிக் கொள்ள வாய்ப்பு உண்டு
  • நன்னடத்தை கெடும்
  • மனம் திறந்து பேசுவதில் கவனம் தேவை
  • இருதய சம்பந்தப்பட்ட நோய்கள் தொந்தரவுகள் ஏற்படும்
  • சாமர்த்தியங்கள் குறையும் காலகட்டம்
  • திறமைகளில் தொய்வு ஏற்படும்
  • மருத்துவத் துறையில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்
  • பரம்பரை சொத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு சரியாகும்
  • தந்தையின் ஆயுளில் பாதிப்பு உண்டாகும்
  • மனைவிவழி சீதனம் பொருள் வரவில் சிக்கல்களை சந்திக்கும் காலகட்டம்
  • சேமிப்பு கரையும்
  • உற்பத்தி தொழிலில் உள்ளவர்களுக்கு உற்பத்தி குறையும்
  • திடீர் புதையல் யோகம் உண்டு
  • விவசாயம் தோட்டம் பண்ணைகள் வைத்திருப்பவர்கள் பாதிப்புகள் சந்திக்கும் காலகட்டம்
  • பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் அதிகரிக்கும் அதனால் கரு உருவாவதில் சிக்கல்கள் ஏற்படும்
  • வெளியிடங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய காலகட்டம்

Jothida Rathna Chandrasekaran Post

கேது பகவான் பெயர்ச்சி பலன்கள் 2022 கன்னி ராசி

  • தொழில் ஜீவனம் தடைபடும்
  • கருமம் செய்ய வேண்டிய காலகட்டம்
  • அரசு பணியில் உள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் வேலை இழப்புகள் தண்டனைக்கு உள்ளாக வேண்டிய காலகட்டம்
  • சேவைத் தொழில் புரிபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
  • தெய்வ வழிபாடுகள் அதிகரிக்கும்
  • உயர்ந்த பதவிகள் உள்ளவர்களுக்கு பிரச்சனையான காலகட்டம்
  • மந்திரசித்தி தாயத்து மந்திர உபதேசம் செய்பவர்களுக்கு சித்திக்கும் காலகட்டம்
  • தத்துப்பிள்ளை எடுப்பதில் பிரச்சனைகள் ஏற்படும்
  • செல்வந்தர்களுக்கு பொருள் இழப்புகள் ஏற்படும்
  • முத்திரையிட்டு கையெழுத்திடும் அதிகாரம் உள்ளவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும்
  • சுயக் கட்டுப்பாட்டில் பிரச்சனைகளை சந்திக்கும் காலகட்டம்
  • வணிகம் தடைபடும்
  • மருத்துவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
  • தொடை சார்ந்த பிரச்சனைகள் மருத்துவச் செலவுகள் ஏற்படும்
  • நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பிதுர்கடன் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்
  • சொத்து சுகம் கெடும்

பரிகாரம்:

ஞாயிற்றுக்கிழமை ராகு வேளையில் திருநாகேஸ்வரம் ராகு பகவானையும் , கீழப்பெரும்பள்ளம் கேது பகவானையும் தரிசிக்க சிறப்பு
அல்லது
காளஹஸ்தி சென்று காலஹஸ்தி நாதரை வழிபட சிறப்பு
நாச்சியார் கோயில் கல் கருடன் வழிபாடு அவசியம்
குலதெய்வ தரிசனம் அடிக்கடி செய்ய வேண்டும்
இவைகள் யாவும் பொதுபலன்களே. உங்கள் ஜனன ஜாதகம், தசா புத்தி, கிரக பலம் மற்ற கிரக பெயர்ச்சிகள் கொண்டு பலன்களில் மாற்றம் உண்டாகும்.

Leave A Reply

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More