மேஷ ராசி (அஸ்வினி பரணி கார்த்திகை 1) ராகு கேது பகவான் பெயர்ச்சி பலன்கள்.
வாக்கியப் பஞ்சாங்கப்படி
பிலவ வருஷம் பங்குனி மாதம் 07 ஆம் தேதி (21.03.2022) திங்கட்கிழமை சூர்ய உதயாதி 22.06 நாழிகை அளவில் முறையே ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்கள்.
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி
பிலவ வருஷம் பங்குனி மாதம் 29 ஆம் தேதி (12.04.2022) செவ்வாய்க்கிழமை சூர்ய உதயாதி 19.24 நாழிகை பகல் 01:48 அளவில் முறையே ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்கள்.
ராகு கேது பகவான் பெயர்ச்சி சுமார் ஒன்னரை வருடம் ஒரு ராசியை கடப்பார் அதன் படி Oct 2023 வரை இருப்பார்.
உங்கள் ராசிக்கு ராகு பகவான் பெயர்ச்சியாகிறார்.
உங்கள் ராசிக்கு கேது பகவான் 7 மிடத்தில் (களத்திரம், கூட்டு, நண்பர்கள், தூர பயணம், எதிராளிகள்) என்று சொல்லக்கூடிய இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்.
ராகு பகவான் பெயர்ச்சி பலன்கள்
- எதிர்பாராத வகையில் நல்ல வருமானங்கள் கூடும் தேவைக்கு அதிகமான பண வரவுகள் உண்டாகும்.
- மாற்று மதத்தினவர்கள் மூலம் நன்மைகள் வந்து சேரும்
- வெளிநாடு பயணங்கள் ஏற்படும்
- தேவையில்லாத குழப்பங்கள் அதிகரிக்கும்
- தலை சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். அடிக்கடி தலைவலி, பேன் தொல்லைகள் பொடுகு பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்பு உண்டு.
- தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகரிக்கும். உடலில் அரிப்புக்கள் கூடும். உடலில் கருப்பு போன்ற திட்டுகள் உண்டாகும். எனவே உடனுக்குடன் மருந்துகள் எடுப்பது நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும். முற்றிலும் நீங்க அடுத்ததாக பெயர்ச்சியில் தீர்வுக்கு வரும்.
- வியாபாரம் செய்பவர்கள் வேலை செய்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டிய காலகட்டம்.
- இளைய சகோதரர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும்
- தோள்பட்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும்
- எழுத்து ஒப்பந்தங்களில் கவனம் தேவை
- மூத்த சகோதரர்கள் வழியில் நன்மைகள் உண்டாகும் மூத்த சகோதரர்களுக்கு நன்மை ஏற்படும்.
- வீடு மாற்றம் இடமாற்றம் உண்டாகும்,
- வீட்டில் திருடு போக வாய்ப்பு ஏற்படும்
கேது பகவான் பெயர்ச்சி பலன்கள்
- கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள்/ பிரச்சனைகள்/ பிரிவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
- நண்பர்களுடன் கருத்து வேறுபாடு பிரிவுகள் ஏற்படும் கௌரவ குறைச்சல் ஏற்படும்
- தூர பயணங்களில் தடைகள் ஏற்படும்
- வீட்டில் உள்ள பெண்களுக்கு சுகவீனம் ஏற்படும்
- கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் பிரச்சினைகள் ஏற்பட்டு கூட்டுத் தொழிலில் பிரிவினை ஏற்படும்.
- கணவன் மனைவியிடையே விவாகரத்து ஏற்பட்டு சொத்துக்கள் வரவு செலவுகள் பிரிக்கப்படும்
- நீங்கள் சந்திக்கும் நபர்களிடம் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இல்லையெனில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மனஸ்தாபங்கள் ஏற்படும்
- பயணங்களில் மிகுந்த எச்சரிக்கை அவசியம் தேவை
- கணவன்/ மனைவிக்கு அறுவை சிகிச்சைகள் ஏற்படும் காலகட்டம்
- திருமணம் அடுத்த ஒன்றரை வருடத்துக்கு தள்ளிப்போகும். மீறி நடந்தால் நிம்மதியற்ற நிலமை அல்லது விவாகரத்து ஏற்படும்.
- குழந்தை பாக்கியம் தடைபடும்
- எல்லாவற்றிலும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம்
- மாற்று மதத்தினர் மூலம் தொந்தரவுகள் ஏற்படும்.
- கணவன் / மனைவிக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்படும்
பரிகாரம்:
ஞாயிற்றுக்கிழமை ராகு வேளையில் திருநாகேஸ்வரம் ராகு பகவானையும் , கீழப்பெரும்பள்ளம் கேது பகவானையும் தரிசிக்க சிறப்பு
அல்லது
காளஹஸ்தி சென்று காலஹஸ்தி நாதரை வழிபட சிறப்பு.
- தினந்தோறும் விநாயகர் வழிபாடு
- யானைக்கு முடிந்த அளவு கரும்பு வாங்கித் தருவது
- சந்நியாசிகளுக்கு வஸ்திரதானம்
இவைகள் யாவும் பொதுபலன்களே. உங்கள் ஜனன ஜாதகம், தசா புத்தி, கிரக பலம் மற்ற கிரக பெயர்ச்சிகள் கொண்டு பலன்களில் மாற்றம் உண்டாகும்.