ராகு கேது பகவான் பெயர்ச்சி பலன்கள் மிதுன ராசி 2022 to 2023

702

மிதுன ராசி (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1 2 3) ராகு கேது பகவான் பெயர்ச்சி பலன்கள்

வாக்கியப் பஞ்சாங்கப்படி

பிலவ வருஷம் பங்குனி மாதம் 07 ஆம் தேதி (21.03.2022) திங்கட்கிழமை சூர்ய உதயாதி 22.06 நாழிகை அளவில் முறையே ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்கள்

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி

பிலவ வருஷம் பங்குனி மாதம் 29 ஆம் தேதி (12.04.2022) செவ்வாய்க்கிழமை சூர்ய உதயாதி 19.24 நாழிகை பகல் 01:48 அளவில் முறையே ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்கள்
ராகு கேது பகவான் பெயர்ச்சி சுமார் ஒன்னரை வருடம் ஒரு ராசியை கடப்பார் அதன் படி Oct 2023 வரை இருப்பார்
உங்கள் ராசிக்கு 11-ஆம் இடம் லாபம் ஆசை அபிலாசைகள் மூத்த சகோதரம் என்று சொல்லக்கூடிய இடத்திற்கு ராகு பகவான் பெயர்ச்சியாகிறார்
உங்கள் ராசிக்கு கேது பகவான் 5மிடம் ஆசை அபிலாசைகள் குலதெய்வம் குழந்தை பாக்கியம் மனம் என்று சொல்லக்கூடிய இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

ராகு பகவான் பெயர்ச்சி பலன்கள் 2022 மிதுன ராசி

அபரிமிதமான லாபங்கள் கிடைக்கும்
மூத்த சகோதரர்கள் வழியில் நன்மைகள் வந்து சேரும்
மனைவியை இழந்தவர்களுக்கு அடுத்த தாரம் (இளைய மனைவி) அமைய வாய்ப்புகள் உண்டு. இரண்டாம் தாரம் வாழ்க்கையும் அமைய வாய்ப்புண்டு
சேவைகள் செய்ய சிறப்பான வாய்ப்புகள் அமையும்
காரிய சித்திகள் உண்டாகும்
சொத்துக்கள் பொன் பொருள் ஆபரணங்கள் சேர்க்கை ஏற்படும்
புதையல் அதிர்ஷ்ட யோகங்கள் வந்து சேரும்
கௌரவமான பதவிகளுக்கு வழிவகை ஏற்படும்
பணப்புழக்கம் அதிகரிக்கும்
மூதாதையர் சொத்துக்கள் அமையும்
வீட்டில் குழந்தைகளுக்கு திருமணம் ஆகி மருமகள் வரும் காலகட்டம்
வண்டி வாகன வசதிகள் ஏற்படும்
முழங்கால் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்படும்
தகாத நட்பு ஏற்பட வாய்ப்புண்டு அதனால் பிரச்சனைகளை சந்திக்கும் காலகட்டம் எனவே கவனமுடன் இருக்க வேண்டும்
குறுக்கு வழியில் வருமானங்கள் அதிகரிக்கும்
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்
அத்தை மருமகன் தந்தைவழி பாட்டி மூலம் நன்மைகள் உண்டாகும்
இடது கை காது தோள்பட்டை இவைகளில் பிரச்சனைகளை சந்திக்கும் காலம்
நீண்ட நாட்களாக மருத்துவமனையில் உள்ளவர்கள் நோய் நீங்கி வீடு திரும்பும் காலகட்டம்
புதிய மருந்துகள் மூலம் நோய்கள் விடுபடும் காலகட்டம்
தாயாரின் ஆயுள் அதிகரிக்கும்
வீட்டில் வேத சடங்குகள் அதிகரிக்கும்

Jothida Rathna Chandrasekaran Post

கேது பகவான் பெயர்ச்சி பலன்கள் 2022 மிதுன ராசி

கர்ப்பம் தடைபடும், சந்தான விருத்தி தள்ளிபோகும்
பெற்ற பிள்ளைகள் மூலம் பலவித சங்கடங்களை அனுபவிக்க காலகட்டம், பிள்ளைகளுக்கு பிரச்சனைகளை சந்திக்கும் காலம்
தாய்வழி மாமன் மூலம் மனக்கசப்புகள் ஏற்படும்
பலவித குழப்பங்கள் உண்டாகும் எண்ணங்களில் தாமதம் ஏற்படும் அமைதி குலையும் மறதி அதிகரிக்கும் மகிழ்ச்சி குறையும்
புத்தி சாதுர்யம் அதிகரிக்கும்
புகழ் மங்கும்
விரக்தி எண்ணங்கள் அதிகரிக்கும்
ஆன்மிகத் துறையில் நாட்டங்கள் அதிகரிக்கும்
கண்ணியம் நல்லொழுக்கம் கெடும்
வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும் அறுவைச்சிகிச்சை உண்டாக வாய்ப்புண்டு
தானதர்மம் அதிகரிக்கும்
வரும்முன் அறியும் சக்தி கிடைக்கும் காலகட்டம்

பரிகாரம்:

ஞாயிற்றுக்கிழமை ராகு வேளையில் திருநாகேஸ்வரம் ராகு பகவானையும் , கீழப்பெரும்பள்ளம் கேது பகவானையும் தரிசிக்க சிறப்பு
அல்லது

காளஹஸ்தி சென்று காலஹஸ்தி நாதரை வழிபட சிறப்பு.
தினந்தோறும் விநாயகருக்கு அருகம்புல் வைத்து வழிபாடு
அன்னதானமும் தானதர்மம் செய்ய பலவித சங்கடங்கள் நீங்கும்

இவைகள் யாவும் பொதுபலன்களே. உங்கள் ஜனன ஜாதகம், தசா புத்தி, கிரக பலம் மற்ற கிரக பெயர்ச்சிகள் கொண்டு பலன்களில் மாற்றம் உண்டாகும்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More