சிம்ம ராசி (மகம் , பூரம், உத்திரம் 1) ராகு கேது பகவான் பெயர்ச்சி பலன்கள்
வாக்கியப் பஞ்சாங்கப்படி
பிலவ வருஷம் பங்குனி மாதம் 07 ஆம் தேதி (21.03.2022) திங்கட்கிழமை சூர்ய உதயாதி 22.06 நாழிகை அளவில் முறையே ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்கள்
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி
பிலவ வருஷம் பங்குனி மாதம் 29 ஆம் தேதி (12.04.2022) செவ்வாய்க்கிழமை சூர்ய உதயாதி 19.24 நாழிகை பகல் 01:48 அளவில் முறையே ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்கள்
ராகு கேது பகவான் பெயர்ச்சி சுமார் ஒன்னரை வருடம் ஒரு ராசியை கடப்பார் அதன் படி Oct 2023 வரை இருப்பார்
🎈உங்கள் ராசிக்கு 9-ஆம் இடம் பாக்கிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய இடத்திற்கு ராகு பகவான் பெயர்ச்சியாகிறார்
🎈உங்கள் ராசிக்கு கேது பகவான் 3மிடம் தாய் முயற்சி,வீரியம், இளைய சகோதரன் என்று சொல்லக்கூடிய இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்.
ராகு பகவான் பெயர்ச்சி பலன்கள் 2022 சிம்ம ராசி
- தகப்பனாருக்கு பாதிப்புகளும் உண்டாகும்
- வம்சவிருத்தி தடைபடும்
- தந்தைவழி சொத்தில் பிரச்சனைகளை சந்திக்கும் காலம்
- குலதெய்வ கோயில் பராமரிப்பு ஆலயத் திருப்பணி செய்ய வேண்டிய வாய்ப்புகள் வந்து சேரும்
- குருவிடமிருந்து தீட்சை பெறுவதில் தடை தாமதங்கள் உண்டாகும்
- குலதெய்வம் இஷ்ட தெய்வ வழிபாடுகள் அதிகம் செய்ய வேண்டிய காலகட்டம்
- ஞான வித்தை தடைபடும்
- கல்வியில் தடை தாமதங்கள் உண்டாகும்
- தீர்த்த யாத்திரைகள் அமையும் தெய்வ சிந்தனைகள் அதிகரிக்கும்
- கடல் கடந்து செல்லும் காலகட்டம் நீண்ட தூர பயணங்கள் ஏற்படும்
- புதிய பதவிகள் ஏற்பதில் பிரச்சனைகளை சந்திக்கும் காலம்
- ஒழுக்கமற்ற செயல்கள் அதிகரிக்கும்
- கண்ணியம் குறையும் கொள்கைகளில் பிரச்சனைகளை சந்திக்கும் காலம்
- தம்பியின் மனைவி அல்லது தங்கையின் கணவருக்கு பாதிப்புகள் உண்டாகும்
- வண்டி வாகனத்தில் கவனம் தேவை
கேது பகவான் பெயர்ச்சி பலன்கள் 2022 சிம்ம ராசி
- உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்
- காதுகள் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் மருத்துவச் செலவுகள் ஏற்படும்
- வீரம் தேகபலம் இவற்றில் குறைவுகள் காணப்படும்
- தொண்டை சம்பந்தப்பட்ட நோய் நோய்கள் உண்டாகும்
- காது அணிகலன்கள் தொலைய வாய்ப்பு உண்டு
- பொழுதுபோக்கு நேரங்கள் குறையும்
- சங்கீதத் துறையில் உள்ளவர்களுக்கு இடைஞ்சல்கள் ஏற்படும் தொழில் பாதிப்பு உண்டாகும்
- கழுத்து சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் மருத்துவச் செலவுகள் ஏற்படும்
- கஷ்ட போஜனம் உண்டாகும்
- வயதானவர்களுக்கு ஆயுள் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்படும்
- ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் வீரியம் குறையும் மர்ம உறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படும்
- பணியாட்கள் மூலமாக தொந்தரவு சந்திக்கும் காலகட்டம்
- வேலையாட்கள் மூலம் தொந்தரவுகள் பிரச்சனைகளை சந்திக்கும் காலகட்டம்
- கடன் பிரச்சனைகள் அதிகரிக்கும் ஏற்கனவே இருக்கிற கடன் மூலம் பல பிரச்சனைகளை சந்திக்கும் காலம்
- இளைய சகோதரர்கள் வழியில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்
- குறுகிய பயணங்களில் எப்பொழுதும் கவனம் தேவை
- எழுத்து சார்ந்த பணிகளில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்
- அடுத்தவருக்கு கியாரண்டி கொடுப்பது தேவையில்லாத ஒப்பந்தங்களில் கையப்பம் இடுவது சாட்சி கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டிய காலகட்டம்
- தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் சொரியாசிஸ் இவைகளில் கவனம் தேவை
பரிகாரம்:
ஞாயிற்றுக்கிழமை ராகு வேளையில் திருநாகேஸ்வரம் ராகு பகவானையும் , கீழப்பெரும்பள்ளம் கேது பகவானையும் தரிசிக்க சிறப்பு
அல்லது
காளஹஸ்தி சென்று காலஹஸ்தி நாதரை வழிபட சிறப்பு
தினந்தோறும் விநாயகருக்கு அருகம்புல் வைத்து வழிபாடு
கருடாழ்வார் வழிபாடு தினந்தோறும்
அடிக்கடி குலதெய்வ வழிபாடு செய்வது சிறப்பு
இவைகள் யாவும் பொதுபலன்களே. உங்கள் ஜனன ஜாதகம், தசா புத்தி, கிரக பலம் மற்ற கிரக பெயர்ச்சிகள் கொண்டு பலன்களில் மாற்றம் உண்டாகும்.