துலாம் ராசி ( சித்திரை 3 4, சுவாதி, விசாகம் 1,2,3) ராகு கேது பகவான் பெயர்ச்சி பலன்கள்
வாக்கியப் பஞ்சாங்கப்படி
பிலவ வருஷம் பங்குனி மாதம் 07 ஆம் தேதி (21.03.2022) திங்கட்கிழமை சூர்ய உதயாதி 22.06 நாழிகை அளவில் முறையே ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்கள்
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி
பிலவ வருஷம் பங்குனி மாதம் 29 ஆம் தேதி (12.04.2022) செவ்வாய்க்கிழமை சூர்ய உதயாதி 19.24 நாழிகை பகல் 01:48 அளவில் முறையே ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்கள்
ராகு கேது பகவான் பெயர்ச்சி சுமார் ஒன்னரை வருடம் ஒரு ராசியை கடப்பார் அதன் படி Oct 2023 வரை இருப்பார்
🎈உங்கள் ராசிக்கு 7-ஆம் இடம் களத்திர ஸ்தானம் என்று சொல்லக்கூடிய இடத்திற்கு ராகு பகவான் பெயர்ச்சியாகிறார்
🎈உங்கள் ராசிக்கு கேது பகவான் பெயர்ச்சியாகிறார்.
ராகு பகவான் பெயர்ச்சி பலன்கள் 2022 கன்னி ராசி
- திருமணத் தடைகள் ஏற்படும்
- கணவன் மனைவி இடையே விரிசல் அதிகரிக்கும்
- திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்கும் காலகட்டம்
- சுக்கிலம் சுரோணிதம் இவைகளில் குறைபாடுகள் ஏற்படும்
- கணவன் மனைவி உடலுறவு பாதிப்புகள் ஏற்படும்
- சிறுநீர் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்படும்
- எல்லாக் காரியத்திலும் விவாதித்து வெற்றி பெற வேண்டிய காலகட்டம்
- சமூக அந்தஸ்து குறையும்
- வியாபாரங்களில் தடை தாமதங்கள் உண்டாகும்
- இரண்டாம் தாரம் ஏற்பட வாய்ப்பு உண்டு
- பிள்ளைகள் வழியில் பிரச்சனைகளை அதிகம் சந்திக்கும் காலகட்டமாக இருக்கும்
- காதலில் தோல்வி அடையும் காலகட்டம்
- வணிகம் பாதிக்கப்படும்
- புதிய பொன் பொருள் ஆடை வாங்குவதில் பிரச்சனைகளை சந்திக்கும் காலம்
- வெளிநாடு பயணங்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அமையும்
- தத்துப் பிள்ளை ஏற்படும் கால கட்டம்
- வாக்குவாதங்கள் அதிகரிக்கும்
- பகைவரிடம் விடுத்த எச்சரிக்கை அவசியம்
- இடுப்பு தொடைக்கும் அடி வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் பிரச்சனைகளை சந்திக்கும் காலகட்டம்
கேது பகவான் பெயர்ச்சி பலன்கள் 2022 கன்னி ராசி
- தேக வளம் பாதிக்கப்படும் உருவ மாற்றங்கள் ஏற்படும்
- நிறத்தில் மாறுபாடுகள் உண்டாகும் தோல் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்படும்
- உறுப்புகளில் பிரச்சனைகளை சந்திக்கும் காலகட்டம்
- பிறந்த இடத்தை விட்டு மாற வேண்டிய கட்டாயம் ஏற்படும்
- குணா மாறுபாடுகள் உண்டாகும்
- கௌரவம் புகழ் குறையும்
- அடிக்கடி மனநிலை மாற்றம் ஏற்படும்
- வயது ஆயுள் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்படும்
- தெய்வ பக்தி அதிகரிக்கும் விரக்தி தன்மை கூடும்
- பிறரை அவமதிக்கும் காரியங்களில் இறங்க வேண்டாம்
- ஒழுக்க நிலை கண்ணியம் குறையும்
பரிகாரம்:
ஞாயிற்றுக்கிழமை ராகு வேளையில் திருநாகேஸ்வரம் ராகு பகவானையும் , கீழப்பெரும்பள்ளம் கேது பகவானையும் தரிசிக்க சிறப்பு
அல்லது
காளஹஸ்தி சென்று காலஹஸ்தி நாதரை வழிபட சிறப்பு
தினந்தோறும் விநாயகருக்கு அருகம்புல் வைத்து வழிபாடு
கருடாழ்வார் வழிபாடு தினந்தோறும்
திருப்பதிக்கு அல்லது குலதெய்வ கோவிலில் மொட்டை அடிக்க வேண்டும்
இவைகள் யாவும் பொதுபலன்களே. உங்கள் ஜனன ஜாதகம், தசா புத்தி, கிரக பலம் மற்ற கிரக பெயர்ச்சிகள் கொண்டு பலன்களில் மாற்றம் உண்டாகும்.