விருச்சிக ராசி (விசாகம் 4, அனுஷம் கேட்டை) ராகு கேது பகவான் பெயர்ச்சி பலன்கள்
வாக்கியப் பஞ்சாங்கப்படி
பிலவ வருஷம் பங்குனி மாதம் 07 ஆம் தேதி (21.03.2022) திங்கட்கிழமை சூர்ய உதயாதி 22.06 நாழிகை அளவில் முறையே ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்கள்
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி
பிலவ வருஷம் பங்குனி மாதம் 29 ஆம் தேதி (12.04.2022) செவ்வாய்க்கிழமை சூர்ய உதயாதி 19.24 நாழிகை பகல் 01:48 அளவில் முறையே ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்கள்
ராகு கேது பகவான் பெயர்ச்சி சுமார் ஒன்னரை வருடம் ஒரு ராசியை கடப்பார் அதன் படி Oct 2023 வரை இருப்பார்
🎈உங்கள் ராசிக்கு 6-ஆம் இடம் ருண ரோக சத்ரு ஸ்தானம் என்று சொல்லக்கூடிய இடத்திற்கு ராகு பகவான் பெயர்ச்சியாகிறார்
🎈உங்கள் 12ஆம் இடம் அயன சயன சுக ஸ்தானம் என்று சொல்லக்கூடிய இடத்திற்கு கேது பகவான் பெயர்ச்சியாகிறார்.
ராகு பகவான் பெயர்ச்சி பலன்கள் 2022 கன்னி ராசி
- கடன் தொந்தரவுகள் அதிகரிக்கும் புதிய கடன் வாங்கும் நெருக்கடி ஏற்படும் கடனுக்காக கடன் வாங்கும் சூழ்நிலையும் உண்டாகும்
- நோய்கள் அதிகரிக்கும் காலகட்டம்
- எதிரி பகைகள் அதிகரிக்கும்
- சிறைச்சாலை செல்லும் அளவுக்கு பிரச்சனைகளை சந்திக்கும் காலகட்டம்
- ஆறாத புண் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் குறிப்பாக சர்க்கரை வியாதிக்காரர்கள்
- பால்வினை சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் நோய்கள் ஏற்படும்
- வழக்குகளில் வெற்றி தோல்வி ஏற்படும்
- வீட்டில் களவு தொந்தரவுகள் ஏற்படும்
- வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அமையும்
- இருக்கும் வேளையில் கடுமை உண்டாகும் அல்லது இடமாற்றங்கள் ஏற்படும்
- ஆபத்துக்கள் நிறைந்த காலகட்டம் இடையூறுகள் தடைகள் அதிகரிக்கும்
- மன நோய்கள் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் அதிகரிக்கும்
- கொடுஞ் செயல்களில் ஈடுபட வேண்டாம்
- உடலில் கட்டி சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்படும் அதன் மூலம் அறுவை சிகிச்சைகள் ஏற்படும் கால கட்டம்
- உடல் வீக்கம் சுற நோய்கள் ஏற்படும்
- சோர்வு களைப்பு அதிகரிக்கும்
- பழிச் சொற்கள் ஏற்படும் கால கட்டம்
- எலும்பு நோய்கள் எலும்புருக்கி நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு
- கண் நோய் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் உண்டாகும்
- பலருடன் பகைக்கும் சூழ்நிலை ஏற்படும்
- சரியான நேரத்தில் சமைக்கப்பட்ட உணவை உண்ணாத நிலைமை ஏற்படும் நேரம் தவறி சாப்பிட வேண்டிய நிலை உண்டாகும்
- அச்சம் பயம் அதிகரிக்கும்
- வெளி உணவுகளைத் தவிர்க்க வேண்டிய காலகட்டம் ஃபுட் பாய்சன் ஏற்பட வாய்ப்புண்டு
- கடும் வயிற்றுவலி சம்பந்தப்பட்ட நோய்கள் வயிற்றுப் போக்கு ஏற்படும் வயிற்றுப் புண் ஏற்படும்
- சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனமுடன் இருக்க வேண்டும்
- உயிர் கண்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்
- பங்காளிப் பகை ஏற்படும்
- சுய மரியாதை குறையும்
- விவாகரத்து ஏற்பட வாய்ப்புகள் உண்டு
- தைரியமுடன் செயல்பட்டால் மட்டுமே நோயில் இருந்து விடுதலை கிடைக்கும்
கேது பகவான் பெயர்ச்சி பலன்கள் 2022 கன்னி ராசி
- பண விரயங்கள் அதிகரிக்கும்
- தூக்கம் கெடும் நோய்கள் அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள் கூடும்
- வெளிநாடு பயணங்கள் தடை தாமதங்கள் ஏற்படும் அல்லது பிரச்சனைகளை சந்திக்கும் காலகட்டம்
- வெளிநாட்டில் உள்ளவர்கள் நம் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் இல்லையெனில் சிறைவாசம் சந்திக்கும் காலகட்டம்
- நீண்ட நாட்களாக தீராத நோய்கள் உள்ளவர்களுக்கு மோட்சம் கிட்டும்
- சிலருக்கு கடன் தீரும்
- திருமண தடை ஏற்படும் கால கட்டம் திருமணம் நடந்தாலும் இல்லற சுகம் கெடும் விரக்தி தன்மை அதிகரிக்கும்
- புத்திர தோஷங்கள் ஏற்படும் குழந்தை பாக்கியம் தள்ளி போகும்
- பெரும் கவலையை அதிகரிக்கும்
- வாக்குவாதம் கோபம் களை தவிர்க்க வேண்டிய காலகட்டம்
- திடீர் இடமாற்றங்கள் பணிநீக்கம் வேண்டாத இட மாற்றங்கள் ஏற்படும்
- பலவகையில் செலவுகளை எதிர்கொள்ள வேண்டிய காலகட்டம்
- தீராத நோய் உள்ள மனைவி இருந்தால் இழப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு
- உடல் உறுப்புகள் அறுபடும்
- மூததையர் சொத்தில் பிரச்சினைகளை சந்திக்கும் காலம்
- சர்க்கரை நோயாளிகளின் பாத சம்பந்தப்பட்ட நோய்கள் தொந்தரவுகள் ஏற்படும்
- மறைமுக பகைவர்கள் தொந்தரவு அதிகரிக்கும்
- வண்டி வாகன மாற்றங்கள் ஏற்படும்
- இடது கண் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்படும்
- பொதுமக்களிடம் பகைமையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்
- மலை வாசஸ்தலங்களில் வாழும் வாய்ப்பு அமையும்
- தெய்வ மந்திரங்கள் சித்தியாகும்
- வீட்டில் ஒருவருக்கு இறுதி கடன் செய்யும்போது நிலை ஏற்படும்
பரிகாரம்:
ஞாயிற்றுக்கிழமை ராகு வேளையில் திருநாகேஸ்வரம் ராகு பகவானையும் , கீழப்பெரும்பள்ளம் கேது பகவானையும் தரிசிக்க சிறப்பு
அல்லது
காளஹஸ்தி சென்று காலஹஸ்தி நாதரை வழிபட சிறப்பு
தினந்தோறும் விநாயகருக்கு அருகம்புல் வைத்து வழிபாடு
நாச்சியார் கோயில் கல் கருடன் வழிபாடு அவசியம்
குலதெய்வ கோவிலில் மொட்டை அடிக்க வேண்டும்
இவைகள் யாவும் பொதுபலன்களே. உங்கள் ஜனன ஜாதகம், தசா புத்தி, கிரக பலம் மற்ற கிரக பெயர்ச்சிகள் கொண்டு பலன்களில் மாற்றம் உண்டாகும்.