சனி பெயர்ச்சி பலன்கள் 2020 - 2022 | Sani Peyarchi 2020 Kataka Rasi

கடக ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020

நிகழும் மங்களகரமான தமிழ் விகாரி வருடம், தை மாதம் 10ம் தேதியும், ஆங்கில வருடம் ஜனவரி மாதம் 24 .1. 2020 ம் தேதி காலை 9.57 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு திருக்கணிதப்படி பெயர்ச்சி ஆகிறார்.

29 .4 .2022. காலை 7.53 மணி வரை மகரராசியில் தங்கியிருந்து தன்னுடைய பணிகளை கவனிக்க இருக்கிறார்.

இக்காலகட்டங்களில் கடக ராசிக்கு என்ன மாதிரியான நல்ல, தீய பலன்களை கொடுப்பார் என, வாருங்கள் விரிவாக பார்ப்போம்.

கடக ராசிக்கு சனிபகவான் தற்போது 6ம் இடத்தில் இருந்து 7ம் இடத்திற்கு கண்டக சனியாக வந்துள்ளார்.

7ம் இடத்தில் சப்தம ஸ்தானத்தில் தன் சொந்த வீட்டில் ஆட்சி ஆகும் சனி, அங்கு உத்திராடம், திருவோணம், அவிட்டம் நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்வார்.

அது போல் சனி தன்னுடைய 3 பார்வையாக 9 ஆம் இடத்தையும், 7-ஆம் பார்வையாக 1-ஆம் இடத்தையும் 10ம்ஆம் பார்வையால் 4ம்இடத்தையும் பார்ப்பார்.

கடக ராசியைப் பொறுத்தவரை கண்டகச்சனி ஆரம்பித்தாலும் கவலைப்படத் தேவையில்லை.

தொழில்வளம் சிறப்பாகவே இருக்கும். உற்பத்தி மற்றும் வேலை செய்யும் இடத்தில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது.

பணத் தட்டுப்பாடுகள் இருந்தாலும் தேவைக்கேற்ற பண வரவு வந்து கொண்டே இருக்கும்.

திருமண வயதை ஒத்த நபர்களுக்கு திருமணம் நல்லபடியாக நடக்கும்.

சிலருக்கு காதல் போன்ற விஷயங்கள் ஏற்பட்டு அது நல்லபடியாக திருமணத்தில் முடியும் .

ஒரு சிலருக்கு மட்டும் ராசிக்கு ஏழாம் இடத்தில் சனி இருப்பதால் கணவன் மனைவிக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வந்து போகும். கூட்டுத் தொழிலும் சிலர் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது மற்றபடி பெரிய அளவிற்கு கெடுதல் இல்லை.

மாணவர்கள் கல்வியின் மேன்மை பெறும். விருப்பத்திற்கேற்ற படிப்புகள் கிடைக்கும்.

குருபகவான் தற்போது ஆறாம் இடத்தில் இருப்பதால் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வங்கி கடன் கேட்டால் எளிதில் கிடைக்கப் பெறும்.

இருந்தாலும் கடனை அளவோடு வாங்கி கொள்வது நல்லது.

வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் தாராளமாக செய்யலாம்.

சனி தன் மூன்றாம் பார்வையால் ஒன்பதாம் இடத்தைப் பார்ப்பதால் சிலருக்கு தந்தை சார்ந்த விஷயங்களில் கருத்து வேறுபாடும், சொத்து பிரச்சனையும் உண்டாகும்.

சிலருக்கு ஆன்மீக யாத்திரை போகும் வாய்ப்பும் உண்டு.

ராசியை சனி பார்ப்பதால் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டு தெளியும். சில நேரத்தில் மனம் சஞ்சலமடையும்.

ஒரு சிலருக்கு வீடு, மனை, வண்டி வாகனம் போன்ற அனைத்தும் கிடைக்கப்பெறும்.

சனி ராசிக்கு 4-ஆம் இடத்தைப் பார்ப்பதால் உடல் நிலை சார்ந்த விஷயங்களில் அக்கறை தேவை.

புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் அளவோடு முதலீடு செய்து சிறிய அளவில் தொழில் தொடங்கலாம்.

லாபம் ஓரளவுக்கு சீராக இருக்கும்.

வருட கடைசிக்கு பிறகு நடக்கும் குருப்பெயர்ச்சியால் நல்ல லாபம் உண்டு.

திருமணமான தம்பதியருக்கு குழந்தைகள் கிடைக்க வாய்ப்புண்டு. சிலருக்கு குழந்தைகளால் அன்பும் ஆதரவும் கிடைக்கப் பெறும்.

வேலையில் நல்ல முன்னேற்றமும், பணி உயர்வும் கிடைக்கப்பெறும். அதே நேரத்தில் வேலை செய்யும் வேலையில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது.

இடமாற்றம், தொழில் மாற்றம் ஏற்பட்டாலும் பெரிய அளவில் மாற்றமும், முன்னேற்றமும் இருக்காது. இருப்பது தொடரும். அதேநேரத்தில் கெடு பலனுமில்லை

உடல்நிலை சார்ந்த விஷயங்களில் கொஞ்சம் கவனமுடன் இருப்பது நல்லது.

சனி மகர ராசியில் நுழையும் போது சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் நட்சத்திரத்தில் நுழையும்.

சூரியனின் நட்சத்திரத்தில் 22. 1. 2021 வரை இருக்கும்.

இந்த காலகட்டங்களில் தந்தை மகன் உறவு பாதிக்கக்கூடும். 01 – 1 – 21 முதல் சந்திரனின் நட்சத்திரமான திருவோணத்தில் பயணிப்பதால் எல்லா விஷயங்களிலும் ஓரளவு அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் சுணக்கம் ஏற்படும். டென்சன் உண்டு. 18. 2 .2022 வரை திருவோண நட்சத்திரத்தில் சனி சஞ்சரிப்பார்

சந்திரனின் நட்சத்திரத்தை கடந்து, சனி பெயர்ச்சி ஆகும்வரை செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் பொழுது கணவன்-மனைவி கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம் கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை.

சனியின் வக்ர காலங்கள்:

11.5 2020 முதல் 29.9.2020 வரையிலும் 23.5.2021 முதல் 11.10.2021 வரையிலும் சனி வக்ரமாக இருப்பதால் இந்த காலகட்டங்களில் எல்லா வகையிலும் ஏற்றமுண்டு.

சனிப்பெயர்ச்சி ஆகும் நேரத்திலேயே சனிபகவான் அஸ்தமனத்தில் இருப்பதால் (சூரியனுக்கு முன், பின் 15 டிகிரி) சனியின் அஸ்தமனம் முடியும் நாளான 30.1.20 அன்று கிட்டத்தட்ட ஆறு நாட்கள் கழித்து மேற்சொன்ன பலன்கள் நடக்க ஆரம்பிக்கும்.

சனியின் அஸ்தமன காலகட்டங்கள் :

7.1. 2021 முதல் 10. 2 .2021 வரை.
19.1.2022 முதல் 21.2.2022 வரை

இந்த காலகட்டத்தில் வேலையில் சற்று நிம்மதி ஏற்பட்டாலும் தொழில் முடக்கம், சுணக்கம் ஏற்படும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் ஏற்பட்டு விலகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று இளைப்பாறும் நேரம் இது. பணிச்சுமை குறையும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். அதே நேரத்தில் உங்கள் சுய ஜாதக அமைப்பே முழுமையாக பேசும் என்பதால் உங்கள் சுய ஜாதகத்தை ஒருமுறை பரிசீலனை செய்து அதற்கேற்றபடி முடிவு எடுத்துக் கொள்வது நல்லது.

இதைப்படிக்கும் கண்டக சனியை கடந்து வந்த மிதுன ராசி அன்பர்கள் உங்கள் கடந்த கால அனுபவங்களை கமெண்ட்டுகளாக பதிவிடுங்கள்.

கடக ராசியை பொறுத்த வரை பெரிய மாற்றமின்றி வாழ்க்கையோடும். பண விஷயங்களில் மற்றும் கடன் சார்ந்த விஷயங்களில் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

பரிகாரம்:

உங்கள் குலதெய்வத்தை மாதமொருமுறை வழிபட்டு வரவும். வீட்டில் தினசரி வழிபாடுகளை எப்பொழுதும் போல் மேற்கொள்வது நல்லது.

வாய்ப்பு இருப்பவர்கள் ஒருமுறை திருச்செந்தூர் சென்று வரவும்.

இந்தப் பதிவு பிடித்திருந்தால் பலரும் பயனடைய பதிவை ஷேர் செய்யுங்கள்.

ஓம் நமசிவாய

Blog at WordPress.com.

%d bloggers like this: