சனிபெயர்ச்சியும் நடப்பு திசா புத்தியும்

உச்சிஷ்ட மஹாகணபதி துணை.

சனிபெயர்ச்சியும் 12 லக்னங்களும்

சனிபெயர்ச்சி பலன்கள்:

லக்னம்  + திசா புத்தி சாரம்

( கோட்சார சனி ( பெயர்ச்சி) ஆ ஊ என்பதெல்லாம் நடைமுறை பலன் இல்லை. வேணும்னா ஆ ஊ நு பலன் வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் நடப்பு திசா புத்தி சாரம் ஸ்ட்ரோங் அண்ட் வீக் பொறுத்தே நடைமுறை பலன். ஜோதிட பலன் கணிப்பில் சனி குரு ராகு கேது போன்ற கோட்சார ( பெயர்ச்சி ) கிரகங்கள் மட்டுமே பலன் என்றால் அதாவது கோட்சாரம் மட்டுமே பலன் கணிப்பில் உதவும் என்றால் ஜோதிடம் என்பது கடல் அல்ல அது குட்டையை விட சிறியதாகும். பனிரெண்டு ராசிக்கும் ஒவ்வொரு ராசியாக பலன் குரப்படுகிறது ஒரே ராசி இருக்கும் அன்பர்கள் பலகோடி உலகில் அனைவர்க்கும் ஒரே பலனா நடைமுறையில் நடக்கும்? அணைத்தும் மாற்றம், மாற்றத்திற்கு காரணம் சந்திரன், சந்திரனின் மாற்றமே திசா புத்தி. ஜோதிட பலன் கணிப்பில் திசா புத்தியே 80% முதன்மை மற்றபடி இந்த சனி குரு ராகு கேது கொட்சாரம் அதாவது பெயர்ச்சி எல்லாம் திசா புத்தி சாரம் கணிக்க தவறும் ஜோதிடர்களின் ஒரு போலி யுத்தி. மேலும் சனி லக்னம் பொருத்தும் அதாவது லக்னாதிபதிக்கு சனி நட்பு பகை சமம் பொருத்தும், திசா புத்தி போருதுமே பலன் தருவார் ( 20%  என்ற குறைந்த பட்ச கோட்சார அளவிலும் கூட )

குறைந்த பட்ச 20%  என்ற சனி கோட்சார பலன்

1  சனி பெயர்ச்சி கான்செப்ட்ஸ் லக்ன சுபர் மற்றும் அசுபர் வகையில் சுப அசுப பலன்கள் நிகழும்.

2 12 லக்ன லக்னாதிபதிகளுக்கு நண்பர், பகைவர், சமமானவர் என்ற முறையில் நிகழும்.

சனிபெயர்ச்சி பலன்:

சனி கான்செப்ட்ஸ் அஷ்டமசனி, அர்தாஷ்டமசனி, கண்டகசனி, மற்றும் 7.5 சனி போன்றவை 12  லக்னங்களுகும் பொதுவான ஒரே மாதிரியான விளைவை தராது.

1 மகரம் கும்பம் ரிஷிபம் துலாம் லக்ன அன்பர்கள்.

( மகரம் கும்பம் சனி, ரிஷிபம் துலாம் சுக்கிரன் )

மகரம் கும்பம் ரிஷிபம் துலாம் லக்ன அன்பர்கள் மற்றும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சதிரங்களை ஜென்ம நட்சத்திரமாக கொண்ட அன்பர்கள் சனி கான்செப்ட்ஸ்  ஐ கண்டு பயம் கொள்ளவே வேண்டாம்.

மேற்கொண்டு மேலே குறிபிட்ட லக்னம் மற்றும் நட்சத்திர அன்பர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் ஜோதிடர்கள் சனி கான்செப்ட்ஸ் ஐ காரணம் கூறினால் நன்றாக பாவகொடுபினைகளையும் திசா புத்தி மற்றும் சார பலன் கணிக்கும் ஜோதிடரை அணுகவும். அல்லது சனி பெயர்ச்சி என்ற ஒரு சிறிய விஷயத்தால் கிட்டுவது ஏமாற்றமே.

சிறுவிளக்கம்:

1 சனி + சுக்ரன் நட்பு

நாடியில் இந்த சேர்கை கோடிஸ்வர யோகம் )

2 சனி ( விதி மற்றும் தொழில் காரகர் ) + சுக்ரன் ( பணம் மற்றும் ஐஸ்வர்யதிற்கு காரகர் )

மகரலக்னம்: சுக்ரன் 5 10 ஆம் பாவாதிபதி, லக்ன நண்பர், திரிகொனகேந்திராதிபதி, லக்ன யோகாதிபதி சுக்ரன் ஆவார்.

கும்பலக்னம்: சுக்ரன் 4 9 ஆம் பாவாதிபதி, லக்ன நண்பர், கேந்திரதிரிகொனாதிபதி, லக்ன யோகாதிபதி சுக்ரன் ஆவார்.

ரிஷிபலக்னம்: சனி 9 10 ஆம் பாவாதிபதி, லக்ன நண்பர், திரிகொனகேந்திராதிபதி, லக்ன யோகாதிபதி சனி ஆவார்.

துலாலக்னம்: சனி 4 5 ஆம் பாவாதிபதி, லக்ன நண்பர், கேந்திரதிரிகொனாதிபதி, லக்ன யோகாதிபதி சனி ஆவார்.

சனி நட்சத்திரங்கள்:

பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகும்.

குறிப்பு:

ராசியை வைத்து பலன் கேட்பதை கைவிடவும். உதாரணம் கும்பலக்னம் கடகராசி சனி கான்செப்ட்ஸ் என்ன செய்யும்? லக்னம் என்பது ஜாதகர் மற்றும் ஜாதகி எதையும் அனுபவிக்கும் யோகத்தை குறிக்கும். ராசி என்பது எதிர்பார்ப்பு மட்டுமே லக்னமே அனுபவிக்கும் யோகத்தை கொண்டது. யோக கொடுப்பினை லக்னத்துக்கு வேண்டுமா? ராசிக்கு வேண்டுமா? எல்லோருக்கும் பில்கேட்ஸ் ஆகணும்னு ஆசைதான் ஆனால் அனுபவிக்கும் யோகம் அதாவது விதிகொடுபினை லக்ன பாவம் என்னும் சட்டியில் ( 1 ஆம் பாவதின் விதி கொடுப்பினை ) இருக்க வேண்டும். எதிர்பார்ப்புக்கு கொடுப்பினை தேவையில்லை.

கோட்சார பொதுபலன்:

குரு சனி மற்றும் ராகு கேது கிரகங்களின் கொட்சாரங்களை வைத்து 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு ராசியாக, ஒவ்வொரு ராசிக்கும் ஒரே மாதிரியான பெயர்ச்சி பலன்கள் உரைகபடுகிறது. உலகில் ஒவ்வொரு ராசியிலும் உள்ள எத்தனையோ கோடி ராசி அன்பர்கள் அனைவர்க்கும் உரைக்கப்பட்ட ஒரே மாதிரியான கெடுதியோ அல்லது நற்பலனா  நடக்கிறது? அ நடக்கும்? மாற்றம் மட்டுமே மாற்றம் இல்லாதது சந்திரன் நிலை இல்லாதவர் சந்திரனை வைத்தே திசா புத்தி என்னும் ஜோதிட கதாநாயகன் ( ஒரே ராசி ஆனால் ) வெவேறு கதா பாத்திரத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிகொள்கிறார். ஆக மாற்றத்திற்கு காரணம் ஒவ்வொருவருக்கும் வெவேறு திசா, புத்தி, அந்தரம் மற்றும் சூட்சமம் நடந்து கொண்டிருக்கும். மேலும் திசா புத்தி அந்தரம் மற்றும் சூட்சம நாதர்கள் வெவ்வேறு நட்சத்திரங்களின் சாரம் நின்றிருப்பர்.

 குறிப்பு:

திசா புத்தி வரையே போக வேண்டாம், 20% மட்டுமே பலன் கொண்ட சனி பெயர்ச்சி கான்செப்ட்ஸ் 12 லக்னங்களுகும் பொதுவானவை அல்ல.

2  மேஷம் கடகம் சிம்மம் விருசிகம் லக்ன அன்பர்கள்.

( மேஷம் விருச்கம் செவ்வாய், கடகம் சந்திரன், சிம்மம் சூரியன் )

மேஷம் கடகம் சிம்மம் விருசிக லக்ன அன்பர்கள் சனி கான்செப்ட்ஸ்  நடப்பு காலத்தில் சற்று  கவனம் செலுத்தலாம் மேலும் திசா புத்தி சாரம் கெட்டு இருந்தால் மேலும் கவனம் செலுத்தலாம்.

சனி பகைவர்கள்: சூரியன் சந்திரன் செவ்வாய்.

3 மீனம் மிதுனம் கன்னி தனுஷு லக்ன அன்பர்கள்.

( மீனம் தனுஷு குரு, மிதுனம் கன்னி புதன் )

மீனம் மிதுனம் கன்னி தனுஷு லக்ன அன்பர்கள் திசா புத்தி சாரம் கெட்டு இருந்தால் மட்டும் சனி கண்செப்ட்ச்யில் கவனம் செலுத்தலாம்.

சனிக்கு சமமானவர்கள்: குரு புதன்.

 பராசாரர் கோட்சாரம் vs நாடி கோட்சாரம்

பிருகு சப்தரிஷி மற்றும் ஆர்ஜி ராவ் நாடி ஜோதிட வகுப்பு பதிவுகளில் கோட்சார கிரகங்களின் நடைமுறை பலன்களை விளக்கமாக காணலாம். காரணம் பராசாரர் ஜோதிடத்தில் கோட்சார பலன் சந்திரனை வைத்து மட்டுமே உரைகபடுகிறது. ஆனால் நடைமுறையில் அணைத்து கிரகங்களின் தாக்கமும் மனிதன் மேல் உள்ளது. நாடி முறையில் அணைத்து கிரகங்களின் கோட்சார முறையில் நடைமுறையில் ஓரளவு துல்லிய பலன் கிட்டுகிறது. ஆனாலும் திசா புத்தி சாரமே முதன்மையான 80% நடைமுறை பலன்  ஆகும். ஆகவே திசா புத்தி பராசரருக்கு சொந்தம், கோட்சாரம் ( கோள்களின் பெயர்ச்சி ) நாடி முறைக்கு சொந்தமாகும்.

 சனி கான்செப்ட்ஸ் பராசாரர் முறையிலும் தேவையற்ற பயம்.

சனி பகவான் லக்ன சுபர் அ லக்ன அசுபர் என்ற வகையிலும் மேலும் 12 லக்ன லக்னாதிபதிகளுகும் நண்பர் பகைவர் மற்றும் சமமானவர்  என்ற முறையில்தான்  பலன் தருவார். திசா புத்தி சாரம் நன்றாக இருந்தால் கோட்சார கான்செப்ட்ஸ் எல்லாம் கண்டுகவே வேண்டாம். ஜோதிடத்தில் சனி குரு ஒரு positive கிரகங்கள் ஆகும். குருவை விட சனி முதன்மை positive கிரகம் ஆகும். அவருக்கு நிறைய வேலை இருக்கு ஒவ்வொருதரையும் துலவி துலவி அடிக்கணும்னு அவருக்கு அவசியம் இல்லை. அது அவர் வேலையும் இல்லை. திசா புத்தி சாரம் கணிக்க தெரியாத அ தவறியவர்களால் தவறாக சித்தரிகபட்டவரே சனி பகவான்.

 ஜோதிட பரிணாமங்களில் திசா புத்தி சாரமே முதன்மை

பராசாரர் திசா புத்தி சாரம் போன்றவையே ஜோதிட பலன் கணிப்பில் முதன்மை பலன். மேலும் ஜோதிடம் கடல் துல்லிய பலன் கணிப்பு எங்கோ உள்ளது. பாரம்பரியம் அதாவது பராசாரர் ஜோதிடத்தின் பரிணாமமே கிருஷ்ணமூர்த்தி பதாதி ( kp 1st stage ) கேபி அட்வான்ஸ் ( kp 2nd stage ) போன்றவை இவை அனைத்தும் அதாவது கிருஷ்ணமூர்த்தி பதாதி கிரகங்கள் அடிப்படையிலான திசா புத்தி சாரம் உப சாரம் முதன்மையாகவும், கேபி அட்வான்ஸ் பாவங்கள் அடிப்படையிலான திசா புத்திகளை முதன்மையாகவும் கொண்டே பலன்கள் உரைகபடுகிறது. உரைக்கப்படும் பலன் நடைமுறைக்கு ஒத்துபோகும் பலன். ஆ ஊ என பயமுறுதபடும் கோட்சார பெயர்ச்சி சனியை வைத்து அல்ல. மேலும் கேபி ஜோதிடத்திலும் கோட்சார கொடுப்பினை உண்டு நட்சத்திரங்கள் மேல் நடப்பு புத்தியின் உப சாரதிபதியின் பெயர்ச்சியை வைத்து அருமையான நடைமுறை பலன் உரைகபடுகிறது, ஆனாலும் அங்கும் நடப்பு புத்தியின் உப சாராதிபதியின் பெயர்ச்சி தான் என்பதை கவனிக்கவும். ஜோதிடத்தில் சனி குரு அருமையான positive கிரகங்கள் ஆகும், குருவை விட சனி அருமையான positive கிரகம் ஆகும். அவருக்கு நிறைய வேலை இருக்கு ஒவ்வொருத்தரையும் துலவி துலவி அடிப்பது அவர் வேலை அல்ல.

திசா புத்தி பலன்:

ஒரு ஜாதகத்தில் திசா புத்தி நாதர்கள் நின்ற நட்சத்திர நாதன் ( சாரநாதன் ) 12 அமர்வு என்றால் அதன் திரிகோண பாவங்கள் முதல் மற்ற 11 பாவங்களுமே இயங்கும், விரயம் ( 12 ) என்றால் விரயமே சந்தேகமே வேண்டாம். ஜோதிடர் வேலை விதி வலிஹே மாற்று வழியில் பலன் சொல்வதே 12 இன திரிகொனமான 4 ஆம் பாவமும் 8 ஆம் பாவமும் இயங்குவதால் 4  ஆம் பாவம் ( விரயம் சொத்து பத்து  வண்டி  வாகனம் நிலம் புலம் வீடு ) வகையில் எனவும் 8 இயங்குவதால் லோன் அ கடன் பட்டு 12 இயங்குவதால் வட்டி வாசி என விரயம் நிகழ்த்தி நிகழும் விரயதையே சுப செலவாக மாற்றலாம் என  விதி ( 12  பாவ கொடுப்பினை ) மதி ( திசா புத்தி ) வலிஹே மாற்று வழியில் பலன் குருவதே ஆகும். அதுவே ஜோதிடம் மற்றும் ஜோதிடரை  காண செல்வது ஆகும். இதில் குரு சனி ராகு கேது போன்ற கோட்சாரம் ( பெயர்ச்சி ) அதாவது பராசாரர் முறையில் சந்திரனை மட்டும் வைத்து பலன் குறுவது நடைமுறை பலனுக்கு ஒத்து வராத பலனே கிட்டும். விரயம் என்றால் விரயம் தான் வேண்டுமென்றால் சனி பெயர்ச்சியை வைத்து ஆ ஊ நு பலன் சொல்லலாம் ஆனால் கிட்டுவது நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராத பலனே.

குறிப்பு:

பரிகாரம் என்னும் கான்செப்ட்ஸ் சாமியால் உருவாக்கப்பட்டவைகள் அல்ல, ஒரு சில ஆசாமிகளால் உருவாகக்ப்பட்டவை. கிரக அதிதேவதைகளும், கிரக கதிர்விச்சு விழும் ஆலயங்களும், மற்றும் புராதன சிறப்பு மிக்க ஆலயங்களுமே பெரியோர்களின் கண்டுபிடிப்பு மற்றும் முன்னோர்கள் பரிந்துரைத்த பரிகாரங்கள் ஆகும். உதாரனம் திருநள்ளார் ஒரு அருமையான நாசாவே வியக்கும் ஒரு ஆன்மீக விஞ்ஜானம்

அனைவர்க்கும் பகிரவும் பலரும் பயன் பெறலாம்.

பாரம்பரியம் + நாடி + கேபி நிபுணன் சி,காளிதாஸ்.

 

Blog at WordPress.com.

%d