சனிபெயர்ச்சி கடகம் ராசி (அஷ்டம சனி முடிந்தது) 2020 – 2023

9,971

உங்கள் ராசிக்கு ஏழு மற்றும் எட்டாம் இடத்திற்கு உரியவர் #சனி பகவான்.

அதாவது, உங்களுக்கு #மாரகத்தை தருபவரும் #ஆயுளை தருபவரும் இவரே.

என்ன ஒரு அதிசயம் இறைவன் படைப்பில் ஆயுளை தருபவரே ஆயுளை இழக்க வைக்கும் நிலையை தரும் கிரகமாக இருக்கிறது, உங்கள் #ராசிக்கு மட்டுமே.

ஆயுளை தருவாரா அல்லது ஆயுளை எடுப்பாரா என்று பார்த்தால் #எட்டாம் இடமான #கும்பத்தின்_மூலத்திரிகோணம் வலிமையே அதிகமாக செய்வார் அதாவது ஆயுளை தான் தருவார்.

ஏனெனில் இந்த முறை ஆயுளை இழக்க வைக்கும் இடத்தில் வரும் #ஏழாம் இடம் வருவதால் பலர் உயிரிழப்பு பயத்துடன் உள்ளீர்கள், நிச்சயம் இவர் அந்த மாதிரி செய்ய மாட்டார். பயம் வேண்டாம்.

முக்கியமாக, உங்கள் ராசியில் உள்ள பலபேர் #ஜோதிடம் சம்பந்தப்பட்ட விஷயங்களை நம்ப மறுப்பீர்கள், அல்லது ஜோதிடம் பொய் என கூறுவோரும் உண்டு.

இனி வரும் #ஆறு ஆண்டுகளில் ஏதோ ஒரு நேரத்தில் #ஜோதிடம் உன்மை என நினைப்பீர்கள்.

இந்த முறை #சனி ஏழில் ஆட்சியாகி உங்கள் ராசிக்கு 9, 1, 4 ஆகிய இடங்களை பார்வை மூலம் பார்த்து பலனை தருவார்.

நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் #சனி என்றைக்குமே உங்கள் ராசிக்கு #அவயோகி தான் .

கண்டக சனியாக என்ன செய்வார் என்று பார்த்தால், விபத்துகளை தருவார், அதிக வேகம் வண்டியில் இனி வரும் காலங்களில் ஆகாது,வண்டியை over take எடுத்து செல்வது ஆகாது,

வேலை வாய்ப்புகளை நீங்களே இழக்க கூடாது, மறு வேலை கிடைப்பது கடினம். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வேலை கிடைக்கும், ஆனால் எதிர்ப்பார்த்த சம்பளம் கிடைக்காது.

வேலை நீங்களாகவே மாறுதல், புதிய தெரியாத வேலையில் சேருதல்,கூட்டு தொழில், அதிக முதலீடு போட்டு சுய தொழில் ஆரம்பிப்பது, இது போன்றவற்றில் நல்ல பலன் கிடையாது.

இப்போது உங்கள் நன்பர்கள் மூலம் பிரச்சினை வரும், ஜாமின் எதையும் நீங்கள் போட கூடாது அவர்களுக்காக.

அதே சமயம் #போட்டிபந்தயம் பரிட்சை நீங்கள் வெற்றி பெற நிச்சயம் முடியும், அதற்கு உண்டான சூழல் உண்டு.

பலருக்கும் திருமணம் நடக்கும் காலகட்டமாக அமையும், 10 பொருத்தம் பார்த்து செய்ய வேண்டாம், பின்நாளில் பிரச்சினை நிச்சயம் வரும், கவனம், ஜாதக அனுகூல பொருத்தம் பார்த்து செய்யுங்கள்.

சனி உங்கள் குடும்பாதிபதி நட்சத்திரத்தில் #உத்திராடத்தில் 22-01-2021 இருப்பதால்

காதல் திருமணம், அல்லது வீட்டிற்கு தெரியாமல் செய்யும் திருமணம் மூலம் நல்லது நடக்க வாய்ப்பு குறைவு.

நீங்கள் அவசரப்பட்டு குடும்ப விஷயத்தில் செய்யும் செயல் நிச்சயம் தலைவலியை தரும்.

குடும்ப உறுப்பினர்கள் உங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள், குடும்பத்தை நம்பி செய்யும் செயல் குழப்பத்தை தரும், பணம் சேமிப்பது கடினமான காலகட்டமாக அமையும்.

முகம் தெரியாத அறிமுகம் இல்லாத நபர்கள் மூலம் உங்களுக்கு பிரச்சினை உண்டு, அவர்களிடம் பண விஷயத்தில் கண்டிப்பாக இருங்கள்.

உங்களுக்கும் ,உங்கள் வாழ்க்கை துணைக்கும் இடையே சிறு பிரச்சினை மூலம் சன்டை வரும், அதே போல் சின்ன சின்ன பிரச்சினையை பெரிது படுத்தும் நோக்கில் வாழ்க்கை துணையிடம் பேச வேண்டாம், மூன்றாம் நபர்கள் உங்களை பிரித்து விடுவார்கள்.

அடுத்து, 9ம் இடத்தை சனி மூன்றாம் பார்வையால் பார்க்க போவதால் தந்தை மற்றும் தந்தை சொத்துக்கள் மூலம் பிரச்சினை வரும், தந்தை உடல் நிலை கவனிக்க வேண்டும், எந்த செயல் செய்தாலும் #திருப்தி அடைய இயலாது. நல்ல பெயர் எடுக்க எதையாவது யாருக்காவது மாட்டி கொள்ளாதீர்கள். ஏனெனில் வரபோகும் #ஆறு ஆண்டுகள் #சனியின் control ல் தான் உங்கள் ராசி இருக்கும் , கவனம்.

அடுத்து, உங்கள் #ராசியை சனி நேர் பார்வையால் பார்க்க போவதால்

உங்களிடம் சமுதாயத்தில் வாழ தெரியாத நபர் அறிமுகம் ஆவார், அது யாராக இருந்தாலும்.

சாரயம்_போதை பழக்கம் உள்ளவர்கள், தாழ்வு மணப்பான்மை உள்ளவர்கள், குள்ளமான மனிதர்கள், பார்வைக்கு வயோதிகமானவர்கள், எதுவாக இருந்தாலும் negative ஆக பேசுபவர்கள் இது போன்ற நபர்கள் உங்கள் கூடவே இனி இருப்பதற்கு அதிகமான வாய்ப்பு உண்டு, அவர்களை நிராகரித்து விடுங்கள்.

உங்களுக்கே தன்னம்பிக்கை குறைவாகவும், தாழ்வு மனப்பான்மையும் வரும், குழப்ப மனநிலை தான் இருக்கும், ஒன்று புரிந்து கொள்ளுங்கள் இனி உங்களுக்கு நல்லது நடக்க ஒரு செயலை ஒரே முயற்சியில் செய்து நடக்காது, இரண்டு. மூன்று தடவை முயற்சி செய்தால் மட்டுமே நடக்கும்.

அடுத்து , 4ம் இடத்தை பத்தாம் பார்வையால் பார்ப்பது வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் செலவு உண்டு, புதிய வீடு , வாகனம் வாங்குவது நடக்கும், இருக்கும் வீட்டை மாற்றுவது, அல்லது அதற்கு பழுது பார்ப்பது இப்போது நடக்கும்.

சுகம் கெடும், ஆரோக்கிய குறை வரும் இது எல்லாம் வாகன பயனத்தால் தான் கிடைக்கும், வாகனம் condition ஆக இருக்க வேண்டும், இரவு நேர பயனம் தவிர்க்க அல்லது போதுமான ரெஸ்ட் எடுத்து விட்டு இயக்குவது நல்லது.

கால்நடைகளை நம்பி இருப்பவர்கள் அவற்றை நன்றாக பராமரிக்க வேண்டும், சிறிய விஷயத்தில் அதிக சிரமத்தை அதன் மூலம் பெற கூடும்.

பலருக்கும் தாய் மற்றும் வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவலை இருக்கும், தாய்க்கு நீங்கள் ஒத்து போகவோ அல்லது அவர் உங்களுக்கு ஒத்து போவதோ கடினம்.

important

உங்கள் வீட்டிலோ அல்லது உங்களுடன் சேர்ந்தவர்களோ #மிதுனம்துலாம்மகரம்_கும்பம் இந்த ராசிக்காரர்கள் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு நல்லது கிடைக்க அல்லது உணர கால தாமதமாகும்.

பரிகாரம்

1) காலபைரவருக்கு சனிக்கிழமை மாலை நல்லஎன்னை தீபம்

2)வயதானவருக்கு உணவு வாங்கி கொடுங்கள், பணம் கொடுக்க கூடாது

3)அமாவாசை விரதம், திதி கொடுப்பது,முன்னோர்கள் வழிபாடு, கடலில் குளிப்பது, காக்கைக்கு சனிக்கிழமை உணவு அளிப்பது #கண்டக சனி தாக்கம் குறையும்.

கடகம்_நம்பிக்கை

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More