சனி பெயர்ச்சி பலன்கள் 2020 - 2023 கன்னி ராசி | Sani Peyarchi 2020 Kanni Rasi

சனிபெயர்ச்சி கன்னி ராசி (பஞ்சம சனி) 2020 – 2023

உங்கள் ராசிக்கு சனி 5ம் இடமான பஞ்சம ஸ்தானத்திற்கு ஆட்சி பெற்று 7, 11, 2 ஆகிய இடங்களை பார்வை மூலம் பார்த்து பலனை தருவார்.

5ம் இடத்திற்கு பெயர் தாங்க #பஞ்சமஸ்தானம்.

அந்த இடத்திற்கு மற்றொரு பெயர் #அதிர்ஷ்டம் தரும் இடம் என்று

இனி வேலை கிடைக்கும், வேலை பிரச்சினையும் தீரும்

பலருக்கும் வேலை மாற்றம் வரும்

வீடு மாற்றம் வரும், வீடு கட்டும் வேலையில் வளர்ச்சி கிடைக்கும்

வேலை பதவி உயர்வு வரும்

வண்டி,கால்நடைகள் வாங்குவது நடக்கும்

கல்வி தடை இருக்காது,ஆரோக்கியம் நிவர்த்தி உண்டு

தாய் நல்ல நிலைக்கு வருவார்கள்

மேற் சொன்னவற்றில் கடந்த காலங்களில் பிரச்சினையை சந்தித்தவர்கள் நீங்கள்.

இந்த முறை சனியானவர் புத்தியை பயன்படுத்தும் இடத்திற்கும், அதிர்ஷ்டம் தரும் இடமான #பஞ்சம ஸ்தானத்திற்கு வருவதால் உங்களுடைய புத்தி #குறுக்கு வழியில் சிந்திக்க ஆரம்பிக்கும்.

மேலும் 22-01-2021 வரை உங்கள் ராசிக்கு விரையாதிபதியான சூரியனின் நட்சத்திரமான #உத்திராடத்தில் இருக்க போவதால் பண விஷயத்தில் தேவையற்ற அல்லது எதிர்பார்த்த நல்ல செலவு நடக்க வாய்ப்பு குறைவு.

வேலை மாற்றம் உண்டு என்பதால் #ஏஜெண்டுகள் மூலம் பணம் கட்டி அயல் நாடு செல்வோர் கவனம்.

ஸ்பெகுலேஷன், ஷேர் மார்கெட் மூலம் பணம் பெற ஆசைபடும் நபர்கள் அதிக முதலீடு தேவையில்லை.

அதே சமயம் சுய ஆரம்பித்து விடலாம்,,,அதன் மூலம் வளர்ச்சி உண்டு.

பிள்ளைகள் விஷயத்தில் நன்மை இல்லை. புத்திரபாக்கியம் தாமதமாகும், அல்லது கரு கலைந்து மறு கரு தங்கும் நிலை உருவாகும்.

பிள்ளைகள் சோம்பேறி தனமாக இருப்பார்கள். அதிர்ஷ்டம் தற்போது உடனடியாக நடைபெறாது என்பதால் உடல் உழைப்பின் மூலம் தான் எதையும் செய்ய இயலும்.

important

நோய் பிரச்சினை கட்டுக்குள் வரும், கடன் பிரச்சினை தீரும், எதிரியை சமாளிக்க இயலும். போட்டி, பரிட்சை, பந்தயத்தில் ஜெயிக்க முடியும்.

தேவையான கடன் மட்டுமே இனி வரும் காலங்களில் இருக்கும் அதையும் அடைத்து விடுவீர்கள்.

இனி வரும் காலங்களில் நேர்மைக்கு இடம் இல்லை #குறுக்கு வழிக்கு தான் உலகம் உள்ளது என உங்கள் மனம் சொல்லும், விரும்பும்.

#அடுத்து. 7ம் வீட்டை மூன்றாம் பார்வையால் பார்க்க போவதால் #வாழ்க்கை துணை விஷயத்தில் பிரச்சினை உருவாகும் அவரை பிரிவது, சன்டை போடுவது, அவரை நினைத்து கவலை கொள்வது, நீங்கள் என்ன நல்லது செய்தாலும் அவரின் பார்வையில் தவறாகவே தெரிவது இது போன்ற விஷயங்கள் தான் நடக்கும்.

சிறிய பிரச்சினையில் தான் ஆரம்பிக்கும், ஆனால் ஊதி ஊதி பெரிய அளவில் மாறிவிடும், கவனம்.

கூட்டு தொழிலில் சரியான பார்ட்னரை தேர்வு செய்யுங்கள் எதையும் #எழுத்து பூர்வமாக செய்யுங்கள், வாய் வார்த்தை வேலைக்கு ஆகாது.

நன்பர்கள் மூலம் உங்களுக்கு #ஞானோதயம் வரும்.

#அடுத்து. 11ம் வீட்டை தனது நேர் பார்வையால் பார்க்க போவது தூர இட நகர்வு விஷயத்தில் விசாரணை தேவை. செலவு தேவையானதை மட்டும் செய்யுங்கள்.

எந்த ஒரு செயலை திரும்ப திரும்ப செய்ய நேரிடும் எதிர்பார்த்த லாபம் கிடைக்க தாமதமாகும் இரண்டாம் திருமணம் வில்லங்கம் தரும், மூத்த சகோதரர் விஷயம் நல்ல படியாக அமையாது, வழக்கு சாதகமாக வராது(வாய்தா மட்டும் கூடும்) அதிக அலைச்சல் உண்டு, பணம் சேர்ப்பது மட்டும் #குதிரை கொம்பாக இருக்கும்.

#அடுத்து. 2ம் வீட்டை தனது பத்தாம் பார்வையால் பார்ப்பது குடும்ப உறுப்பினர்கள் மூலம் விரிசல்கள் அல்லது உங்களுக்கு ஒத்துழைப்பு தராத நிலை, அல்லது அவர்களை விட்டு நீங்கள் விலகுவது போன்ற நிகழ்வுகள் நடக்கும்.

நீங்கள் பேசுவதை மற்றவர்கள் தவறாக எடுத்து கொள்வார்கள், ஆகையால் முடிந்த வரை உள்ளதை மட்டும் கூறுங்கள் போதும், ஆனால் அது மட்டும் அவ்வளவு சீக்கிரம் நடக்காது.

பேச்சு வார்த்தை மூலம் #பொழப்பு நடத்துவோர் வார்த்தை சரிவர இருக்காது, உளரல் வரும் அல்லது பேச வேண்டிய நேரத்தில் பேச மாட்டீர்கள்.

ஆரம்ப கல்வி உள்ளவர்களுக்கு பாடம், கல்வி விஷயத்தில் நல்ல பலன் ஒரு வருடத்திற்கு சொல்ல இயலவில்லை

முக்கியமாக வக்கில் தொழில், தரகு வேலை இவர்களுக்கு ஏற்றமான காலம் இது தான்

உங்களுடன் தற்போது #மிதுனம்கடகம் மகரம் துலாம் கும்பம் இந்த ராசி காரர்கள் இருப்பார்களேயானால் நீங்கள் நன்மையை (அனைத்திலும்) உணர லேட் ஆகும்.

பரிகாரம்

வயதானவர்கள்
உடல் ஊனமுற்றவர்கள்
ஆதரவு அற்றவர்கள்
அடிப்படை வேலை செய்யும் கூலி தொழிலாளி
இரும்பு வேலை தொழிலாளி இவர்களுக்கு இயன்றதை செய்யுங்கள்.

இறை வழிபாடாகா

குலதெய்வம்
கால பைரவர்
ஐயப்பன்
ஐயனார்
பெருமாள் இவர்களை சனிக்கிழமை வழிபாடு செய்யுங்கள்

கன்னி_ரன்னிங்

Blog at WordPress.com.

%d bloggers like this: