சனிபெயர்ச்சி சிம்மம் ராசி 2020 – 2023
சனி கடக ராசிக்கு எப்படி அவயோகியோ அது போலவே இந்த ராசிக்கும்.
சனி உங்கள் ராசிக்கு கெடுதல் தரும் கிரகம், அவரின் பார்வையும் கெடுதலை தரும்.
சனி உங்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனில் நீசம் மற்றும் குரு இனைவு, பார்வையில் இருக்க வேண்டும்.
கோச்சாரா பலனில் #சனிக்கு தான் முதல் நிலையாக பலனை தரும்(நல்ல_கெட்ட) நிலை தரப்பட்டுள்ளது.
நன்றாக ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் நீங்கள்.
ஆறாம் இடம் என்பது #கடன்நோய்_எதிரி என்று மனித வாழ்க்கைக்கு ஒத்து வராத அமைப்பை தருவதாகும், அதே சமயம் புதிய வேலையில் சேருவதற்கும் இந்த இடம் தான் ஒத்துழைப்பு தரும்.
அதே சமயம் சனி ஆறாம் இடத்தில் வருவது #கடன்நோய்பகையைஅழித்தால் என்றும் சொல்ல பட்டுள்ளது, ஏன்?
ஒரு பாப கிரகமான சனி கெட்ட இடத்தில் வருவதால் நல்லது நடக்கும் என்பதாலே.
சரி இப்போது சனி ஆறில் வருவது நல்லதா_கெட்டதா என்று பார்த்தால் உங்கள் ஒரு #ராசிமட்டும் விதிவிலக்கு.
ஆறாமிட கெட்ட பலனை தான் முதலில் செய்வார், அதே சமயம் பாப கிரகம் ஆறில் இருப்பது நல்ல விஷயமாகவும் சொல்லப்படுவதால், ஏதேனும் ஒரு கெட்ட விஷயத்தை அழித்தும் விடுவார்.
வாங்க , விரிவான பலனாக பார்ப்போம்.
சனி ஆறில் ஆட்சி பெற்று உங்கள் ராசிக்கு 8,12,3 ஆகிய பார்வை மூலம் பலனை தருவார்.
சனி ஆறில் இருப்பது, நல்ல விஷயமாக வேலை இல்லாதவருக்கு வேலை கிடைக்கும், அடிமை வேலையில் இருப்பவர்களுக்கு அதை விட மேம்பட்ட வேலை கிடைக்கும்.
அடுத்து.
இனி வரும் மூன்று ஆண்டுகளுக்கு
கடன் நோய் எதிரி , என்ற மூன்று முக்கிய விஷயத்தில் ஏதேனும் ஒன்றை அழித்து மற்றொன்று கூடவே இருக்கும் நிலை உருவாகும்.
எப்படி என்றால், தற்போது கடனாளியாக இருப்பீர்கள் அல்லது வரபோகும் ஆண்டுகளில் கடனை வாங்குவீர்கள்..எனவே கடன் கடந்து போன காலங்களில் வாங்கி இருந்தால் வர போகும் காலங்களில் அடைப்பதற்கு தான் சரியாக இருக்கும், இதை தான் வேறு விதமாக #சனி ஆறில் வந்ததால் கடனை அழித்து விட்டார் என்று கூறுவது.
உங்களில் பலர் இனி தான் கடன் வாங்கி விட்டு அதே கடனை அடைக்கவும் செய்வீர்கள்.
அதே சமயம் கடன் வாங்கி சொத்து வாங்குவது, நல்ல காரியம் செய்வதும் இந்த காலகட்டமே.
சரி இப்போது கடன் வாங்கவும் இல்லை, வாங்கும் நிலையிலும் இல்லை (பேங்கில் பணம் உள்ளது) என்றால் உடல் உபாதை உள்ளவர்களுக்கு நோய் தாக்கும் கூடும் அதன் மூலம் பணம் செலவு செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொள்வீர்கள்.
அடுத்து,மேற் சொன்ன எதுவும் இல்லை என்ற நிலையில் இருந்தால் #பிடிக்காத வேலைக்கு மாறுவது, அல்லது இருக்கும் வேலையில் பிடிக்காத நபர்கள் சேர்ந்து(எதிரி போல) இருப்பது, அக்கம்_பக்கம் உள்ள நபர்களில் ஏதேனும் ஒருவர் உங்களுக்கு எதிரியாக போவார் அல்லது தெரியவரும்.
ஏன் உங்கள் வீட்டில் கூட எதிரி இருக்கலாம், மேற் சொன்ன அத்தகைய எதிரியை ஒழித்துக்கட்ட பண செலவோ அல்லது கடனோ வாங்கும் நிலை வரும், இல்லை அவரை ஜெயிக்க வம்பு, வழக்கு, கோர்ட் கேஸ்,பஞ்சாயத்து என்று வர போகும் மூன்று ஆண்டுகள் நகரும்.
ஏதேனும் ஒரு சிறு #வாய்க்கால்_வரப்பு தகராறில் ஆரம்பித்து ஏக்கர் கணக்கில் பிரச்சினை ஆகும், கவனம்.
எனவே, வரபோகும் மூன்று ஆண்டுகளுக்கு கடனோ,எதிரியோ, நோயோ ஏதேனும் ஒன்றை அழித்து ஒன்றை கூடுதலாக பெறும் ஆண்டுகளாக அமையும்.
உங்கள் ராசியாதிபதி நட்சத்திரம் #உத்திராடத்தில் 22-01-2021 இருக்கும் காலத்தில் #மணஅழுத்தம் ஏதேனும் ஒரு விஷயத்தை நினைத்து கவலை கொள்ளும், ஆனால் வெளியே சொல்ல மாட்டீர்கள், இந்த காலகட்டத்தில் நிர்பந்தத்தின் காரணமாக சில பிடிக்காத செயலை செய்ய நேரிடும்.
ஒரு சொத்து வாங்க உங்களின் மற்றொரு சொத்துக்களை இழந்து தான் ஆக வேண்டும், என்ற நிலை வரும்.
வாழ்க்கை துனைக்கு கடனோ,ஆரோக்கிய குறைபாடு அல்லது #ஆழம் தெரியாமல் காலை விடுவதால் வீண் விரையமோ அவருக்கு நடக்கும்.
அடுத்து. 8ம் வீட்டை தனது மூன்றாம் பார்வையால் பார்க்க போவது அசிங்கம், வழக்கு, தலைகுனிவு,நீங்கள் சற்றும் யோசிக்காமல் செய்யும் செயலால் திடிர் இழப்பு ஏற்படும், கவனம். தூர இட நகர்வு உண்டு வேலை விஷயமாக.
ஷேர் மார்கெட் கை கொடுப்பது போல தோன்றினாலும் அதிக முதலீடு பார்த்து செய்யுங்கள்.
அடுத்து. 12ம் வீட்டை நேர் பார்வையால் பார்ப்பது செலவு மட்டும் கணக்கு பார்த்து செய்யுங்கள் போதும்
அடுத்து. 3ம் வீட்டை பத்தாம் பார்வையால் பார்ப்பது நீங்கள் எடுக்கும் முயற்சி ஒரே தடவையில் வெற்றி பெருவது இயலாது, இரண்டு. மூன்று தடவை மேற்கொள்ள நேரிடும், குறுகிய தூர பயனம் மூலம் நன்மை கிடைக்க தாமதமாகும்.
வீடு, வாகனம், சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் செலவு சிறிய அளவில் ஆரம்பித்து பெரிய அளவில் முடியும், ,
பலர் கடன் வாங்கி அல்லது இருக்கும் பணத்தை இழந்து #சுய தொழில் ஆரம்பிக்க போகிறீர்கள்.
இனி மணம் தெளிவு பெற்று இப்படி தான் செய்ய வேண்டும் என்ற என்னம் வரும். நீங்கள் #பெண்களாக இருக்கும் பட்சத்தில் மேற் சொன்ன செயல்பாடுகள் #பிள்ளைகளுக்காக செய்வீர்கள்.
புத்திரபாக்கியம் தடை விலகி #கரு தங்கும்.
பரிகாரம்_ உங்கள் இஷ்ட தெய்வத்தை தொடர்ந்து வழிபாடு செய்யுங்கள் போதும்
சிம்மம்_தாங்கும்
Comments are closed.