சனிபெயர்ச்சி தனுசு ராசி 2020 – 2023

2,658

சனி உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் ஆட்சி பெற்று 4, 8, 11 ஆகிய இடங்களை பார்வை மூலம் பார்த்து பலனை தருவார்.

வாக்குசனி, என்ன செய்யும் என்றால் உளறல் பேச்சால் வில்லங்கம் வரும், அதனால் பேச்சு வார்த்தையில் கவனம் அதிகம் தேவை, அவ்வளவு தான்.

சனி தான் உங்கள் ராசிக்கு, பணத்தை தரவேண்டும், குடும்பத்தை தரவேண்டும், பேச்சால் சாதனையை தரவேண்டும், ஆரம்ப கல்வியை தரவேண்டும், முயற்சியை தரவேண்டும், தைரியத்தை தரவேண்டும், புகழை தரவேண்டும் குறுகிய தூர பயனம் மூலம் நன்மையை தரவேண்டும்.

இது போன்ற நல்ல விஷயங்களை உங்கள் ராசிக்கு #இனி தருவார்.

என்ன அவரை போலவே slow ஆக தான் தருவார், ஆனால் நிச்சயம் தருவார்.

சனி 2ல் ஆட்சி ஆவது தற்போது உள்ள உங்கள் பிரச்சினைக்கு உன்மையாக நல்ல அமைப்பு.

கடந்த காலங்களில் தேவையே இல்லாமல் #பணத்தை நீங்களே முன்நின்று இழந்து இருப்பீர்கள், இப்போது நினைத்து பார்த்தீர்களேயானால் அந்த மாதிரி செய்து இருக்க கூடாது என பலரும் வருத்தபட்டு கொண்டு உள்ளீர்கள்.

அடுத்து ஆண்டு முதல் #இரண்டாம் இடமும் அதன் அதிபதியும் #நேர்வலிமை பெற்று இருப்பதால், முதலில் #பொய்யை பொருந்த #சொல்லி பணத்தை பெற்று கொள்வீர்கள். (அல்லது) உன்மை பேசும் இடத்தில் உன்மையும், பொய் பேசும் இடத்தில் பொய்யை பேசி #காரியத்தை முடித்து கொள்வீர்கள், (காரணம் நீங்கள் வாங்கிய #அடி அப்படி) கனிசமான முறையில் #பணம் வந்து கொண்டு இருக்கும். ஒரே அடியோடு நிற்காது, பணத்தில் கவலை வேண்டாம்.

பேச்சால் பிழைப்பவர்களுக்கு இனி மேன்மையான காலமாக அமையும், பாருங்கள்.

குடும்ப பிரச்சினை தீருகிறது,,,அதுவும் உங்கள் #வாய் சாமர்த்தியம் மூலம்.

குடும்பத்தில் பிரிவினை வருவதற்கு வாய்ப்பில்லை, அதே சமயம் குடும்ப உறுப்பினர்கள் உங்களை புரிந்து கொள்ள சில மாதங்களாகும், உடனடியாக நடக்காது.

தேவையுள்ள, உங்களால் செய்து தர கூடிய வாக்குறுதியை மற்றவர்களுக்கு தந்து நிறை வேற்ற முடியும்.

ஆரம்ப கல்வி தடுமாற்றம் இனி நல்ல முறையில் இயங்கும்.

சனி உங்கள் பாக்கியாதிபதி நட்சத்திரமான #உத்திராடத்தில் இருக்க போவதால் (22-01-2021) நீங்கள் என்ன தான் மற்றவர்களுக்காக ஒடி ஒடி உதைத்தாலும் #கெட்ட பெயர் எடுக்கும் காலமாகவே அமையும்.

மனதிருப்தி அவ்வளவு சீக்கிரம் வராது எதிலும்.

குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை கிடைக்கும், அவர்கள் மூலம் பணமும் கிடைக்க பெறும்.

புத்திரபாக்கியம் தடை விலகி வாரிசு உறுவாகி குடும்ப நபர்களில் என்னிக்கை கூடும்.

திருமண பிரச்சினை தலை தூக்காது, அடுத்து…சனி 4ம் இடத்தை 3ம் பார்வையால் பார்ப்பது, வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் குழப்பம் தீர்ந்து வீடு மாற்றமோ , அல்லது பழையதாக உள்ள வீட்டை புதுப்பிப்பது போன்ற வேலை நடக்கும்.

புதிய வீடு கட்டும் பணி மட்டும் தாமதமாக தான் நடக்கும். எந்த விஷயத்திலும் சுகமாக இருக்க இயலாது, உழைக்கும் படியான நிலை இனி கூடும்.

தாயார் விஷயத்தில் மட்டும் உங்களுக்கு நன்மை தருவதாக இருக்காது ஒரு ஆண்டுக்கு, இடை நிலை கல்வியில் சோம்பேறி தனம் வரும்.

இனி நீங்கள் எடுக்கும் முயற்சி முதல் தடவையில் தோற்று #இரண்டாம் முயற்சி நீங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதல் நன்மையுடன் கிடைக்கும், உறுதியாக.

தைரியத்தை வரவழைத்து, #தாழ்வுமனப்பான்மையை விரட்டும் காலமாக அமையும்.

அதே சமயம் அசையும், அசையா சொத்து, வண்டி,வாகனம்,கால்நடைகள், வீடு இவற்றில் ஏதேனும் ஒன்றில் #லாபகரமான நிகழ்வுகள் நடக்கும் உங்களுக்கு.

வாகன செலவு வரும், #ரொம்ப_பழைய வாகனத்தை விற்று புதுசாக மாற்றிவிடுங்கள்.

அவ்வளவு ஏன்? பகையாளி சொத்து,லாபம்,வெற்றி கூட பாதிப்பு அடைந்து உங்களுக்கு சாதகமாக மாறும்.

எதிரி உங்கள் மீது தொடுத்த வழக்கு இழக்குமே தவிர அவர் வெற்றி பெற இயலாது.

அடுத்து, சனி 8ம் இடத்தை நேர் பார்வையால் பார்க்க போவது, அசிங்கம், அவமானத்தை துடைத்து எரிந்து உள்ளூரில் கால் ஊன்ற முடியும்.

அயல் நாட்டு வாழ்க்கையை விரும்ப மாட்டீர்கள்,,சொந்த ஊருக்கு வர போறிங்க.

பலரும் பல பிரச்சினைக்காக தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு உள்ளீர்கள்,

இனி பழைய மாதிரி துனிச்சலாக #இதோநான் மீண்டும்வந்து விட்டேன் என உங்கள் ஏரியாவில் தலை காட்டுவீர்கள். .

தூர இட நகர்வு மூலம் நன்மை கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தவர்கள் இனி இருப்பதில் எப்படி பிழைக்க முடியும் என்று வாழ தொடங்கி விடுவீர்கள்.

வழக்கு சாதகம் ஆகும், அதே சமயம் கொடுத்த பணம் வர வாய்ப்பு இல்லை, அல்லது முழுவதுமாக வராது. அடுத்து. சனி 11ம் இடத்தை 10ம் பார்வையால் பார்க்க போவதால் .

வேலை பிரச்சினை தீருகிறது, சம்பள உயர்வு எப்படியாவது கிடைத்து விடும்.

வேலையே இல்லாமல் இருந்தவருக்கு சம்பளம் குறைவு தான் என்றாலும் நிச்சயம் வேலை கிடைக்கும்,

நான் சொல்வது என்ன என்றால் நீங்கள் முதலீல் சேருங்கள், பிறகு சில மாதம் கழித்து பணம் கூடுதலாக, இதைவிட வேலை விஷயத்தில் மேம்பட்ட நிலையில் இருப்பீர்கள்.

அரசு வேலைவாய்ப்பு எதிர் பார்த்தவர்களுக்கு #பிப்ரவரி பிறகு அதற்கு உண்டான சூழ்நிலை வருகிறது, கிடைக்கும்.

important கடன் அடைபட துவங்கும்.

இரண்டாம் திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சி ஒரு ஆண்டுக்கு ஒத்து வராது. எதிலும் லாபம் என்ற ஒன்று உடனடியாக நடைபெறாது. .

தற்போது உங்களுடன் (#மகரம் மிதுனம் கும்பம் துலாம் )
இந்த ராசிகள் இருக்குமேயானால் நன்மை நடப்பது கால தாமதமாக தான் உணருவீர்கள்.

பரிகாரமாக உடல் ஊனமுற்றவர்கள், அனாதைகளுக்கு உதவி செய்யுங்கள், போதும்.

மற்றபடி கெடுதல் விலகி. நல்லது நடக்க ஆரம்பிக்கும்.

தனுசு புதியபாதை.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More