சனிபெயர்ச்சி துலாம் ராசி (அர்த்தாஷ்டம சனி) 2020 – 2023
சனி உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் ஆட்சி பெற்று 6,10,1 ஆகிய இடங்களை பார்வை மூலம் பார்த்து பலனை தருவார்
சனி 4ல் ஆட்சி பெறுவதால். முதலில், வீடு மாறுதல் நடக்கும் அல்லது நடந்து இருக்கும் சிலருக்கு.
புதிய வீடு பலருக்கும் அமையும், அதே சமயம் இருக்கும் வீட்டில் பழுதுகளை சரி செய்து alter செய்வது நடக்கும்.
அசையும், அசையா சொத்து இப்போது வாங்கி கொள்வீர்கள்(பழையதாக இருந்தால் பெட்டர்).
தாய் உடல் நிலையில் கவனம் செலுத்தும் பட்சத்தில் ஆரோக்கிய குறை நிவர்த்தி ஆகும்.
கல்வி தடை இருக்காது ஆனால் படித்து மனதில் நிறுத்தி கொள்வது மட்டும் உடனடியாக ஏறாது.
திருமணம் செய்ய இயலாமல் இருந்தவர்களுக்கு அதற்கு உண்டான சூழ்நிலை அமைந்து நடக்கும்.
கால்நடைகள், பண்னை தொழில் செய்பவர்கள் அல்லது சுயமாக செய்ய நினைப்பவர்கள் தாராளமாக ஆரம்பிக்கலாம், நல்லது கிடைக்கும்.
நன்பர்களே இந்த சனி பெயர்ச்சி மூலம் புதியதாக வாங்கும் #அசையும்_அசையா சொத்து seconds ஆக இருந்தால் நல்லது அல்லது புதியதாக இருந்தால் seconds ஆக மாறிவிடும்.
அர்தாஷ்டம சனியால் என்ன கெடுபலன் என்று பார்த்தால் #சுகமாக நீங்கள் இருக்க இயலாது, அதே சமயம் வேலையில் அதிக நேரம் உழைக்க வேண்டியது வரும்.
அடுத்து சனி 6ம் வீட்டை 3ம் பார்வையால் பார்ப்பது ஒரு யோகம்.
மேற் கூறிய வற்றில் ஏதேனும் ஒரு விஷயத்தில் கடனை வாங்கி இருப்பீர்கள் அல்லது வாங்க போகிறார்கள்,
அப்படி இருக்க #வாங்கிய_வாங்கும் கடனை இந்த மூன்று ஆண்டுகளில் அடைத்து விடுவீர்கள், அது தான் முக்கியம்,
அல்லது இதுவரை கடனால் கஷ்டத்தை மட்டும் அனுபவித்து கொண்டு இருந்தீர்களேயானால் இனி வரும் அடுத்த அடுத்த ஆண்டுகளில் #கடனை அடைக்க தான் முடியும். #கடன் வாங்க இயலாது.
உடல் உபாதை தீருகிறது, எதிரியை ஒரு கை பார்க்க முடியும், அவரை ஜெயிக்க முடியும்.
பலர் இப்போது இனி #சுய_தொழில் செய்ய போறீங்க.
அடிமை வேலையை இனி விரும்ப மாட்டாதீர்கள்.
அதேசமயம் practical லில் வெற்றி பெறுவீர்கள், theory யில் பாஸ் ஆவது சற்று கடினமாக இருக்கும் (பரிட்சை, போட்டி,பந்தயம்).
அடுத்து, சனி 10ம் வீட்டை நேர் பார்வையால் பார்க்க போவது.
பல தொழில் செய்பவர்களுக்கு சிரமமாக இருக்கும், தொழிலை விரிவுபடுத்த கூடாது.
அடுத்தவரிடம் கைகட்டி சம்பளம் வாங்கும் வேலை செய்பவர்களுக்கு சக வேலைக்காரர்கள் பிரச்சினையோ, அல்லது மேலதிகாரிகள் தொந்தரவு ஆரம்பிக்கும்.
சாப்பாடு தான் நேரத்திற்கு சாப்பிட இயலாது, அல்லது செரிமானம் ஆகாத உணவை சாப்பிடுவீங்க இந்த காலகட்டத்தில்.
நிம்மதியாக வேலை செய்ய விட மாட்டார்கள்.
அடுத்து, சனி உங்கள் #ராசியை பார்க்க இருப்பதால்.
இல்லாத ஒன்றை இருப்பதாகவும் இருக்கும் ஒன்றை இல்லாததாகவும் நினைத்து கொள்வீர்கள்.
அதாவது #எதிர்மறை எண்ணம் வரும் என சொல்கிறேன்.
இனி நீங்கள் பிடிக்கும் #முயலுக்கு மூன்று கால் என சொல்வீங்க, நம்புவீங்க.
பிடிவாதம் கூடும், உடலமைப்பு #வயதான தோற்றத்தில் காணப்படும்.
தாழ்வு மணப்பான்மை வரும் , கவனம் எதிலும் ஒரு பய உணர்வு கூடவே இருக்கும், வரும்.
important
பல விஷயங்களில் நீங்கள் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி, அடுத்தவர்களும் உங்களை குழப்பி பெரிய achievements அடைய போராட வேண்டி வரும்.
இனி எதையும் வியாபார நோக்கில் உங்கள் வாழ்க்கை பாதை, பயனம் அமையும்.
மனிதாபிமானத்திற்கு இடம் இருக்காது உங்களிடம்.
தேவையற்ற காதல் உருவாகும், இளம் வயது பெண்களே தடம் மாற வாய்ப்பு அதிகம் வரும் கவனம்.
உங்களுடன் தற்போது
மிதுனம் கடகம் மகரம் கும்பம் இந்த ராசிக்காரர்கள் இருந்தால்(குடும்ப உறுப்பினர்கள்) நன்மை நடப்பதை தாமதமாக தான் உணருவீர்கள்.
பரிகாரம்_துணிந்து செயல்பட்டு ஜெயிக்க போவதால் குல தெய்வ வழிபாடு மட்டும் செய்யுங்கள் போதும்
துலாம்_சலாம்.
Comments are closed.