2017 சனிபெயர்ச்சியும் 12 லக்னங்களும்

சனிபெயர்ச்சி பலன் 2017

குறிப்பு:

 

1 சனி கான்செப்ட்ஸ் லக்ன சுபர் மற்றும் அசுபர் வகையில் சுப அசுப பலன்கள் நிகழும்.

2.12 லக்ன லக்னாதிபதிகளுக்கு நண்பர், பகைவர், சமமானவர் என்ற முறையில் நிகழும்.

சனிபெயர்ச்சி பலன்:

சனி கான்செப்ட்ஸ் அஷ்டமசனி, அர்தாஷ்டமசனி, கண்டகசனி, மற்றும் 7.5 சனி போன்றவை 12 பாவத்துக்கும் பொதுவான ஒரே விளைவை தராது.

 

1 மகரம் கும்பம் ரிஷிபம் துலாம் லக்ன அன்பர்கள்.

மகரம் கும்பம் ரிஷிபம் துலாம் லக்ன அன்பர்கள் மற்றும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சதிரங்களை ஜென்ம நட்சத்திரமாக கொண்ட அன்பர்கள் சனி கான்செப்ட்ஸ்  ஐ கண்டு பயம் கொள்ளவே வேண்டாம்.

மேற்கொண்டு மேலே குறிபிட்ட லக்னம் மற்றும் நட்சத்திர அன்பர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் ஜோதிடர்கள் சனி கான்செப்ட்ஸ் ஐ காரணம் கூறினால் நன்றாக திசா புத்தி மற்றும் சார பலன் கணிக்கும் ஜோதிடரை அணுகவும்.

சிறுவிளக்கம்:

1 சனி + சுக்ரன் நட்பு ( நாடியில் இந்த சேர்கை கோடிஸ்வர யோகம் )

2. சனி ( விதி மற்றும் தொழில் காரகர் ) + சுக்ரன் ( பணம் மற்றும் ஐஸ்வர்யதிற்கு காரகர் )

  1. மகரலக்னம்: சுக்ரன் 5 10 ஆம் பாவாதிபதி, லக்ன நண்பர், திரிகொனகேந்திராதிபதி, லக்ன யோகாதிபதி சுக்ரன் ஆவார்.
  2. கும்பலக்னம்: சுக்ரன் 4 9 ஆம் பாவாதிபதி, லக்ன நண்பர், கேந்திரதிரிகொனாதிபதி, லக்ன யோகாதிபதி சுக்ரன் ஆவார்.
  3. ரிஷிபலக்னம்: சனி 9 10 ஆம் பாவாதிபதி, லக்ன நண்பர், திரிகொனகேந்திராதிபதி, லக்ன யோகாதிபதி சனி ஆவார்.
  4. துலாலக்னம்: சனி 4 5 ஆம் பாவாதிபதி, லக்ன நண்பர், கேந்திரதிரிகொனாதிபதி, லக்ன யோகாதிபதி சனி ஆவார்.

 

சனி நட்சத்திரங்கள்:

பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகும்.

 

குறிப்பு:

ராசியை வைத்து பலன் கேட்பதை கைவிடவும். உதாரணம் கும்பலக்னம் கடகராசி சனி கான்செப்ட்ஸ் என்ன செய்யும்? லக்னம் என்பது ஜாதகர் மற்றும் ஜாதகி எதையும் அனுபவிக்கும் யோகத்தை குறிக்கும். ராசி என்பது எதிர்பார்ப்பு மட்டுமே லக்னமே அனுபவிக்கும் யோகத்தை கொண்டது. யோக கொடுப்பினை லக்னத்துக்கு வேண்டுமா? ராசிக்கு வேண்டுமா? எல்லோருக்கும் பில்கேட்ஸ் ஆகணும்னு ஆசைதான் ஆனால் அனுபவிக்கும் யோகம் அதாவது விதிகொடுபினை லக்ன பாவம் என்னும் சட்டியில் இருக்க வேண்டும். எதிர்பார்ப்புக்கு கொடுப்பினை தேவையில்லை.

உதாரணம்:

தற்போது ரிஷிப லக்னம் அஷ்டமசனி நடப்பு மற்றும் மகரலக்னம் 7.5 சனி நடப்பு. சனி கான்செப்ட்ஸ் நம்ப வேண்டாம் பயம் கொள்ள வேண்டாம். திசா புத்தி சாரம் ஆராயவும்.

கோட்சார பொதுபலன்:

குரு சனி மற்றும் ராகு கேது கிரகங்களின் கொட்சாரங்களை வைத்து ஒரே மாதிரியான பெயர்ச்சி பலன்கள் குரப்படுகிறது. உலகில் உள்ள எத்தனையோ கோடி ராசி அ லக்ன அன்பர்கள் அனைவர்க்கும் ஒரே மாதிரியான கெடுதி மற்றும் நற்பலனா நடக்கிறது? மாற்றம் மட்டுமே மாற்றம் இல்லாதது சந்திரன் நிலை இல்லாதவர் சந்திரனை வைத்தே திசா புத்தி என்னும் ஜோதிட கதாநாயகன் வெவேறு கதா பாத்திரத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிகொள்கிறார். ஆக மாற்றத்திற்கு காரணம் ஒவ்வொருவருக்கும் வெவேறு திசா, புத்தி, அந்தரம் மற்றும் சூட்சமம் நடந்து கொண்டிருக்கும்.

குறிப்பு: திசா புத்தி வரையே போக வேண்டாம், சனி கான்செப்ட்ஸ் 12 லக்னங்களுகும் பொதுவானவை அல்ல.

2 மேஷம் கடகம் சிம்மம் விருசிகம் லக்ன அன்பர்கள்.

மேஷம் கடகம் சிம்மம் விருசிக லக்ன அன்பர்கள் சனி காசெப்த்ஸ் நடப்பு காலத்தில் சற்று  கவனம் செலுத்தலாம் மேலும் திசா புத்தி சாரம் கெட்டு இருந்தால் மேலும் கவனம் செலுத்தலாம்.

சனி பகைவர்கள்: சூரியன் சந்திரன் செவ்வாய்.

3 மீனம் மிதுனம் கன்னி தனுஷு லக்ன அன்பர்கள்.

மீனம் மிதுனம் கன்னி தனுஷு லக்ன அன்பர்கள் திசா புத்தி சாரம் கெட்டு இருந்தால் மட்டும் சனி கண்செப்ட்ச்யில் கவனம் செலுத்தலாம்.

சனிக்கு சமமானவர்கள்: குரு புதன்.

தேவையற்ற பயம் சனி கான்செப்ட்ஸ்.

சனி பகவான் லக்ன சுபர் அ லக்ன அசுபர் என்ற வகையிலும் மேலும் 12 லக்ன லக்னாதிபதிகளுகும் நண்பர் பகைவர் மற்றும் சமமானவர்  என்ற முறையில்தான்  பலன் தருவார். திசா புத்தி சாரம் நன்றாக இருந்தால் கோட்சார கான்செப்ட்ஸ் எல்லாம் கண்டுகவே வேண்டாம். ஜோதிடத்தில் சனி குரு ஒரு positive கிரகங்கள் ஆகும். அவருக்கு நிறைய வேலை இருக்கு ஒவ்வொருதரையும் துலவி துலவி அடிக்கணும்னு அவருக்கு அவசியம் இல்லை. அது அவர் வேலையும் இல்லை. திசா புத்தி கணிக்க தெரியாத அ தவறியவர்களால் தவறாக சித்தரிகப்படவர் சனி பகவான்.

திலா ஹோமம் அ எள்ளு ஹோமம்

பித்ருதொசம், களத்திரதோஷம், புனர்புதோசம் 5000 ஆயரம் அ 10000 ஆயிரம் என பரிகாரம் என்ற பெயரில் இழக்க வேண்டாம் சிம்பிள் ஆக ராமேஸ்வரம் சென்று சிம்பிள் ஆக ஆண்களுக்கு கருப்பு எள்ளும், பெண்களுக்கு வெள்ளை எள்ளும் என அக்னி திர்த்த கடலில் நாமே திதி, தர்ப்பணம் வகையிலும் களத்திரதோஷம் மற்றும் புனர்பூதொசம் கழித்தல் வகையிலும் செய்து விட்டு திரும்பலாம். களத்திரதோஷம் மற்றும் புனர்பூதொசம் சம்பந்தமாக அடுத்த கட்ட process ஜோதிட வகுப்பு பதிவுகளில் காணலாம்.

பாரம்பரியம் ஜோதிட வகுப்பு முதல்நிலை பதிவுகளில் தோஷங்கள் சம்பந்தமான பகுதி பதிவுகளில் விளக்கங்கள் பெறலாம்.

குறிப்பு: பரிகாரம் என்னும் கண்செப்ட்ஸ் சாமியால் உருவாக்கப்பட்டவைகள் அல்ல, ஒரு சில ஆசாமிகளால் உருவாகக்ப்பட்டவை. கிரக அதிதேவதைகளும், கிரக கதிர்விச்சு விழும் ஆலயங்களும், மற்றும் புராதன சிறப்பு மிக்க ஆலயங்களுமே பெரியோர்களின் கண்டுபிடிப்பு மற்றும் முன்னோர்கள் பரிந்துரைத்த பரிகாரங்கள் ஆகும்.

அனைவர்க்கும் பகிரவும் பலரும் பயன் பெறலாம்.

பாரம்பரியம் + நாடி + கேபி நிபுணன் சி,காளிதாஸ்.

Blog at WordPress.com.

%d bloggers like this: