சனி உங்கள் ராசியிலே ஆட்சி பெற்று 3, 7, 10 ஆகிய இடங்களை பார்வை மூலம் பார்த்து பலனை தருவார்.
சனி தான் உங்கள் ராசிக்கு அதிபதி, ஏற்கனவே ஒரு வழியாக விரைய சனி முடிந்து தற்போது #ஜென்ம சனி காலத்தில் இருக்க போகிறீர்கள்.
சனி மேலும் உங்கள் ராசிக்கு #அஷ்டமாதிபதியான சூரியனின் நட்சத்திரமான #உத்திராடத்தில் (22-01-2021) ஒரு ஆண்டு நகர்வு இருக்கும்.
சனி உங்கள் #தன்னம்பிக்கைக்கு காரணமாக உள்ளவர்.
சனி மேலும் உங்கள் ராசிக்கு #பணம்குடும்பம் வாக்கு இவற்றிற்கு காரணம்.
தற்போது #சனியானவர் பணம், குடும்பம், வாக்கு இந்த இடத்திற்கு மறைந்து தான் தற்போது ஜென்ம சனியாக இருப்பார்.
பொதுவாக #கோச்சாராத்தில் சனி தனது ராசியில் அமரும் போது அந்த ராசிக்காரர்களுக்கு #அசட்டு தனமான நம்பிக்கை வரும், நிச்சயமாக.
மேலும் நீங்கள் பொறுமையாக தான் எதையும் செய்வீர்கள் மற்றும் நிதானமாக தான் நடக்கும் உங்களுக்கு எதுவானாலும்.
ஆகையால், சனி முடியாதளவிற்கு கை தூக்கி விட தான் பார்ப்பாரே தவிர #விருச்சிகம் போல பாழும் கிணற்றில் தள்ளி விட மாட்டார்.
அதே சமயம் அஷ்டமாதிபதி நட்சத்திரத்தில் இருக்கும் வரை நல்ல பலனையும் தரமாட்டார், அதனை விட்டு விலகி அடுத்த ஆண்டு #குரு பெயர்ச்சி பிறகு குருவுடன் சேர்ந்த பிறகு தான் நீங்கள் எந்த துறையில் உள்ளீர்களோ அதில் வளர்ச்சி அடைய முடியும்.
சரி அதுவரை என்ன செய்வது?
தற்போது என்ன செய்றீங்களோ, எதில்,எந்த மாதிரியான வேலையில் உள்ளீர்களோ அதனை நகர்த்தினால் போதும், முற்றிலும் எதிர்மறை கிரகமான #சனி உங்கள் ராசியில் ஆட்சியாவது, பின்னாளில் நன்மையான நிகழ்வுகள் நடந்ததாலும் தற்போது #குழப்பமான மனநிலை வரும், அவரவர் #ஜென்ம நட்சத்திரத்தில் சனி வரும் போது, இதில் #உத்திராட நட்சத்திர #இளம் வயது #மகரராசிக்காரர்களுக்கு சற்று கடினமான காலம் தான்.
important, நடு வயதில் உள்ளவர்கள் யாரும் #பொங்கு சனி என்று நம்பி இருக்கும் பணத்தை இழக்க வேண்டாம். பிரச்சினை தான் பொங்கும்.
பலர் சொந்த தொழில் தொடங்கும் #ஆசையை துவங்கி வைப்பார் சனி, தெரிந்த தொழில் என்றால் தனியாக செய்யலாம், ஆனால் அபரிதமான பண வரவுக்கு #ஜென்ம சனி முடிய வேண்டும். .
பார்ட்னர் தொழில் ஒத்து வராது.
சொந்த தொழில் தொடங்க ஆசை இல்லாமல் சம்பளம் வாங்கும் தொழிலில் இருப்பவர்கள், பலருக்கும் இருக்கும் வேலையில் கடினமான போக்கு தான் இருக்கும், அதனால் வேறு நிறுவனமோ அல்லது மற்றவர்களை நம்பி இறங்கவோ கூடாது.
கடன் வாங்கி இருப்பீர்கள் அல்லது கடன் வாங்கும் சூழ்நிலையில் இருப்பீர்கள், கடனை வாங்கி அதிக முதலீடு செய்துவிட்டு பெரிய லாபத்தை எதிர்பார்க்க நினைதாதால் பிரச்சினை தான், கடன் சாப்பிட்டு விட்டு அன்றாட வாழ்க்கையை நடத்தினாலே போதும்.
தாழ்வு மனப்பான்மை ஆரம்பிக்கும்.
தற்போது உங்களை #கோடீஸ்வரனாக மாற்றுகிறேன் என சொல்பவர்கள் மூன்று ஆண்டுகள் கழித்து #நீ யார் என்பார்கள்.
உறவுகளை நம்ப கூடாது.
நம்பியவர் துரோகியாக மாறுவார்.
குடும்பத்தில் மூன்றாம் நபரால் குழப்பம் வரும்.
காதல் தேவையில்லை, திருமண வாய்ப்பு ஜாதகத்தில் இருந்தால் செய்து கொள்ளுங்கள்.
10பொருத்தம் மட்டும் நம்பி திருமணம் செய்ய கூடாது, #பெற்றோர்களே. (அது தான் ஜென்ம சனி பிரச்சினைக்கு உரியது).
பலருக்கும் #சாரய_போதை பழக்கம் ஆரம்பம் ஆகும், ஏற்கனவே உள்ளவர்களுக்கு கூடுதலாக குடிக்க வாய்ப்பு வரும் (நன்பர்கள் பழக்கம் அப்படி இருந்தால் இப்படி நடக்கும்)
இளம் வயதில் உள்ளவர்களுக்கு #நீங்கள் இதுவரை இதுதான் சரி என்று நம்பிய முக்கியமான விஷயம் #ஜென்ம சனி முடிந்த பிறகு #மாற்றமாக தெரியும்.
பெற்றோர் பேச்சு ஏற்க இயலாது, படிப்பு மந்தமாக தான் போகும், கடந்த ஆண்டு எடுத்த மார்க் இப்போது குறையும்.
பிடிக்காத படிப்பை #கல்லூரியில் தேர்வு செய்ய வேண்டாம், #அரியர் தான் கிடைக்கும்.
கல்லூரி,பள்ளி செல்லும் #பெண் மீது #பெற்றோர்களுக்கு ஒரு கண் பார்வை தேவை, தடம் மாறுவார்கள் (எல்லோரும் அல்ல).
பணத்தை எக்காரணம் கொண்டும் ,
தெரியாத செயலுக்கு
தெரியாத நபருக்கு
ஏஜெண்டுகளிடமோ, கொடுக்க வேண்டாம்.
அதிக பணம் கட்டி #ஏஜெண்டுகள் மூலம் அயல் நாடு செல்வது தேவையில்லை. நஷ்டம் உண்டு.
அடுத்து, சனி 3ம் இடத்தை மூன்றாம் பார்வையால் பார்க்க போவது உங்கள் முயற்சி பல தடவை முயன்றால் தான் #வெற்றி கிடைக்கும், ஒரு முயற்சியால் வெற்றி கிடைக்காது, அதில் நல்லதும் நடக்காது.
வீட்டில்,பக்கத்து வீட்டு நபர்களுடன் ரொம்ப அன்யோன்யம் இருக்க இயலாது.
ஜாமின் போடுவது,தலையிடுவது, உங்கள் documents வைத்து மற்றவர்களுக்கு பணம் வாங்கி தருவது கடும் பிரச்சினை தான். (இதில் சிலருக்கு இந்த விஷயத்தில் அனுபவம் வந்து இருக்கும்)
தற்போது உங்கள் ஆவணங்களை கூட சரிபார்த்து கொள்ளுங்கள், குறுகிய தூர பயனம் உங்களுக்கு சலிப்பை தருவதாக இருக்கும்.
இந்த காலகட்டத்தில் அதிக உடலுழைப்பு இருக்கும் அல்லது வேலையை விட்டு விட்டு வீட்டிலும் இல்லாமல் வெளியேவும் இல்லாமல் காலத்தை கடத்துவீர்கள்.
யார் மீதும் வழக்கு தொடுக்க வேண்டாம், உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வராது, வாய்தா அதிகரிக்கும்.
அடுத்து, சனி 7ம் வீட்டை நேர் பார்வையால் பார்க்க போவது கனவன்-மனைவி இடையே சிறு பிரச்சினையில் ஆரம்பிக்கும் விஷயம் பெரிய அளவில் போகும், காதல் இப்போது கசக்கும்.
நன்பர்கள் ஏமாற்றம் தருவார்கள், கூட்டு தொழில் செய்ய இயலாது.
வியாபார பொருட்கள் விற்பது #குதிரை கொம்பாக இருக்கும்.
அடுத்த, 10ம் வீட்டை பத்தாம் பார்வையால் பார்க்க போவது
டெஸ்ட்_அடித்து வெளிநாட்டு வாழ்க்கையை புதிதாக கிளம்பும் நபர்கள் ஏஜெண்டுகள் மூலம் போக வேண்டாம்.
தெரியாத வேலைக்கு போக கூடாது. சம்பள உயர்வுக்கு கிடைக்கும் என்று வேறு நிறுவனங்கள் மாற கூடாது.
எந்த வேலை வந்தாலும் சேர பாருங்கள். ஏனெனில் சனியின் வேலை பெரிய விஷயத்திற்கு ஆசை பட வைத்து இருப்பதை இழக்க வைப்பது தான்.
தொழில் ஆரம்பித்தாலும், முன்னேற்றம் லேட் ஆகும்,
முக்கியமாக, இந்த சனி பெயர்ச்சி மூலம் பின்னாளில் சாதிப்பதற்கு அச்சாரமாக ஏதோ ஒன்றை உங்களுக்கு ஏற்றவாறு அமைத்து கொள்வீர்கள்,
அதற்கு உங்கள் பொறுமை துனை நிற்கும்.
தற்போது, உங்களுடன் #மிதுனம் கடகம் துலாம் கும்பம்
இந்த ராசிக்காரர்கள் இருந்தால் நன்மை தாமதமாக தான் நடக்கும், கிடைக்கும்.
பரிகாரம்
சனிக்கிழமை தோறும் #காலபைரவருக்கு நல்ல என்னை தீபம் ஏற்றுங்கள் (வீட்டில் இருந்து எடுத்து போக வேண்டும்).
வயதானவர்கள் யாராக இருந்தாலும் உதவியோ,சாப்பாடோ வாங்கி உங்கள் கையால் கொடுங்கள்
மாற்று திறனாளிக்கு அவர் பயன்படுத்தும் பொருட்களை வாங்கி கொடுங்கள்.
அமாவாசை விரதத்தை தொடர்ந்து செய்யவும்.
ஐயப்பனுக்கு மாலை அணிவித்து சென்று வழாபாடு செய்யுங்கள்.
மாலை அணிவித்தவருக்கு வேஷ்டி, துண்டு,மாலை வாங்கி கொடுங்கள் #எட்டு பேருக்கு .
சனிக்கிழமை காக்கைக்கு எள் கலந்த உணவுகளை கொடுங்கள்.
சனிபகவானை #ஜென்ம சனி பிரச்சினைக்காக எங்கேயும் எப்போதும் கும்பிடவோ, வழிபடவோ கூடாது.
மகரம் சமாளிக்கலாம்