ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகள் மேலாக #பணவரவு சரியாக இல்லை, வந்தாலும் நிற்க மாட்டேன்குது.
இதில் அஷ்டம சனி வேறையா, என்று நீங்கள் கவலை பட கூடாது. ஏனெனில் உங்கள் ராசியை இது நாள் வரை #சனி பார்த்து கொடுத்தார், அதனால் தான் உங்களுக்கு தூக்கம் கூட சரியாக இருந்து இருக்க வாய்ப்பு இல்லாமல் இருக்கும் பல பேருக்கு.
ஆனால் இந்த முறை #அஷ்டம சனியாக இருந்தாலும் ஒருவருடத்துக்கு #குரு பார்வையில் நீங்கள் இருக்க போகிறது, அதனால் பணமும் வரும், நிற்கும்.
பணம் வந்து கொண்டு இருந்தாலே ஒரளவுக்கு பிரச்சினையை சமாளிக்க ஆரம்பித்து விடலாம்.
அடுத்த ஆண்டு #குரு பெயர்ச்சி ஆனபிறகும் சனியை சுபத்துவ படுத்தி #அஷ்டம சனியாக இருக்கும் சனியை #இஷ்ட சனியாக மாற்றிவிடுவார், குரு.
எனவே,அஷ்டம சனி காலங்களில் பண வரவு மட்டும் எப்படியாவது வந்து கொண்டு இருக்கும், என்ன ஒன்று நீங்களே எதையாவது கெடுத்து கொண்டால் மட்டுமே பின்னடைவு ஏற்படும்,. .
இயற்கை புத்திசாலியான நீங்கள் நன்றாக ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக அஷ்டம சனி காலங்களில் எந்த ராசியாக இருந்தாலும் #குடும்பம்வேலைஅதிர்ஷ்டம் கிடைக்காது,நன்றாக இருக்காது, அதனால் வளர்ச்சி தடையாகி சனி விலகிய பின்பு தான் கிடைக்கும். ..
ஆகையால் அபார வளர்ச்சிக்கு ஆசை பட்டு இருப்பதை மட்டும் இழந்து விடாதீர்கள், இருப்பதை நகர்த்தினால் மட்டும் போதுமானது,
பேராசைபெரும்நஷ்டம் இப்போது நடக்கும், கவனம்.
சரி இனி பலனை பார்ப்போம்.
புதிதாக தெரியாத அறிமுகம் இல்லாத ஒன்றை இனி வரும் மூன்று ஆண்டுகளுக்கு தள்ளி வைப்பது நல்லது.
சனி எட்டாம் இடமான மகரத்தில் ஆட்சி பெற்று 10,2,5 ஆகிய இடங்களை பார்வை மூலம் பார்த்து பலனை தருவார்.
எட்டில் இருப்பதால்
நல்லது என நினைத்து செய்யும் காரியம் கெட்டதாக முடியும்.
காதல் செய்பவர்களுக்கு அல்லது காதல் திருமணம் செய்ய போகிறவர்கள் அல்லது கடந்த போன சில வாரங்களில் காதல் திருமணம் செய்தவர்களுக்கு #புதிய எதிர்மறையான காலமாக அமையும், நம்பியவர் ஏமாற்றுவார், அதனால் தலைகுனிவு ஊரார்கள் மத்தியில் நிகழும்.
தொழிலில் முதலீடு போட்டு லாபம் வரும் என நினைக்க வேண்டாம், வரவுக்கு ஏற்ற முதலீடு போடுங்கள் போதும்.
பலர் இனி தூர இடம் போவீர்கள்.
உங்கள் முயற்சி பலிக்கும் #சூரியன் நட்சத்திரமான #உத்திராடம் நட்சத்திரத்தில் சனி 22-01-2021 வரை நகர்வு உண்டு என்பதால் எந்த ஒரு எளிதான செயலும் கஷ்ட பட்டு தான் நடக்கும், கிடைக்கும். .
சனி_இங்கு இருந்து 10ம் இடத்தை மூன்றாம் பார்வை மூலம் பார்ப்பதால் வேலை பிரச்சினை தலை தூக்கும்,மேலதிகாரிகள் ஒத்துழைப்பு தருவது கடினம், பல்லை கடித்து கொண்டு தான் ஓட்ட இயலும்,புதிய வேலை எதிர்பார்த்து இருக்கும் வேலையை விட நேரிடும்.
வெளி நாட்டு வேலைக்கு பணம் தந்து நீங்கள் போக வேண்டாம்.
ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம், காலை வாரி விட்டு விடுவார்கள். சுய தொழில் செய்பவர்கள் தொழிலாளியை பகைத்து கொள்ள வேண்டாம், அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுங்கள்.
உங்களுக்கு மேனேஜர் போஸ்டிங்க், தலைவர் பதவி, நல்ல சம்பள வேலை வாங்கி தருவதாக யார் சொன்னாலும் நம்பி இருக்கும் வேலையை நீங்கள் விட வேண்டாம், அத்தனையும் ஏமாற்று வேலையாக தான் நடக்கும்.
அடுத்து, 2ம் வீட்டை நேர் பார்வையால் பார்க்க போவதால், பணம் கிடைக்கும் ஆனால் குடும்ப ஒற்றுமை உங்கள் வாயால் கெடும், அல்லது குடும்பத்தை விட்டு நீங்கள் சில காலம் பிரிந்து வாழ நேரிடும்.
பணத்தை கண்ட படி செலவு செய்ய வேண்டாம், உங்கள் பேச்சு மூலம் கலவரம் தான் நடக்கும், பார்த்து கவனமாகக் பேசுங்கள். ஆரம்ப கல்வி படிப்பு படிப்பவர்கள் படிப்பு மன்டையில் ஏறாது, சோம்பேறி தனமாகவும், சில பாடங்களிலும் fail ஆகவும் வாய்ப்பு உண்டு.
Cellphone, bike, இரவு நேர பயனம் இதன் மூலம் நல்ல பலனை எதிர்பார்க்க இயலாது, இவற்றை தேவைக்கு மட்டும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
இனி நீங்கள் #பொய் பேச நேரிடும், அல்லது நீங்கள் பேசுவதை மற்றவர்கள் #பொய் என நம்புவார்கள்.
அடுத்து ,சனி 5ம் வீட்டை பார்ப்பது ஒரு அவயோகமே இந்த காலகட்டத்தில்.
புத்திர பாக்கியம் தாமதமாக தான் கிடைக்கும், பிள்ளைகள் விஷயத்திலும் சீக்கிரம் நல்ல நிலையை எதிர்பார்க்க இயலாது.
உங்கள் வீட்டில் உள்ள வயதுக்கு வந்த (ஆண்,பெண்) பிள்ளைகளை தீவிரமாக கண்காணிக்கும் காலமாக அமையும், நீங்கள் எதிர்பார்த்ததை அவர்கள் செய்ய மாட்டார்கள், நினைக்காத ஒன்றை அவர்கள் செய்து விடுவார்கள்.
விலை உயர்ந்த பொருட்களை அவர்களை நம்பி வாங்கி கொடுக்க வேண்டாம், (android cell phone எக்காரணம் கொண்டும் அவர்களிடம் இருந்தால் தடம் மாற வாய்ப்பு உண்டு)
மது,மாது,சூது இவற்றை தள்ளி வைப்பது உங்களுக்கு நல்லது.
நல்லபடியாக சிந்திக்க இயலாது, நீங்கள் நினைப்பது பல நேரங்களில் தவறாகவே முடியும், உங்கள் நலம் விரும்பியை கேட்டு முடிவு செய்யுங்கள்.
மணம் ஒரு நிலையில் இருக்காது, #குல தெய்வ வழிபாடு மட்டுமே உங்களை காப்பாற்றும், கெட்ட எண்ணங்கள் உங்களுக்கு வரும், அவல ஆசை , அதிக ஆசை வரும். சில காலம் தள்ளி வையுங்கள்.
சிறு பிரச்சினை மூலம் பெரிய பின்னடைவை சந்தித்து மன்டை வெடிக்கும் அளவுக்கு ஏற்படுத்தி கொள்ள வேண்டாம், சின்ன சின்ன பிரச்சினையை அடியோடு வெட்டி விடுங்கள்.
திருமணம் 10 பொருத்தத்தை மட்டும் நம்பி செய்யாதீர்கள், இருவர் ஜாதக பொருத்தம் உள்ளதா என பார்த்து கேட்டு செய்யுங்கள். .
இனி நீங்கள் சந்திக்கப்போகும் அனைத்து நபர்களையும் #நல்லவர் என மட்டும் நம்ப வேண்டாம்.
important
உங்களை சேர்ந்தவர்கள் #கடகம்மகரம்கும்பம்_துலாம் இந்த ராசிகளில் இருந்தால் பிரச்சினை கூடுமே தவிர அவர்களுடன் நீங்கள் பிரச்சினையில் ஈடு பட வேண்டாம், நல்ல பலனை எதிர்பார்க்க முடியாது.
பரிகாரம்
1)ஒவ்வொரு சனிக்கிழமை மாலை(சாயந்திரம்)வீட்டில் இருந்து #நல்லஎன்ணையை எடுத்து சென்று #பழமையான காலபைரவருக்கு தீபம் ஏற்றுங்கள்.
2)வயது முதிர்ந்த மனிதருக்கு உதவி செய்யவும், சனிக்கிழமை நாளில்.
3)சபரிமலைக்கு வழிபாடு மேற்கொள்ளுங்கள்.
4)வாய் மற்றும் பேசும் வார்த்தையை கட்டுப்படுத்தி யோசித்து பேச வேண்டும்.
5)கருப்பு, மற்றும் நீலம் நிறங்களை தவிர்த்து விட்டு அந்த நிறங்களை பயன்படுத்தும் நபர்களுக்கு அந்த பொருட்களை தானமாக கொடுங்கள்.
6)வாழ்க்கை என்றால் என்ன என்று உணர போகும் காலம் இனி, ஆகையால் வாழ்க்கையில் அடிபட்டவர்களை பார்த்து வாழுங்கள், அவர்கள் பேச்சை #காது கொடுத்து கேளுங்கள்.
மிதுனம்_கவனம்