சனிபெயர்ச்சி மேஷம் ராசி (கர்ம சனி) 2020 – 2023

5,170

இந்த முறை #கர்ம சனியாக ஆட்சி வலுவுடன் பலனை தருவார், அதென்னங்க கர்ம சனி.

பொதுவாக பத்தாம் இடம் #கர்ம ஸ்தானம் என்று கூற படுகின்றது ஜோதிடத்தில், இந்த இடத்தில் சனி வருவதால் அந்த பெயர் சனிக்கு.

மேலும் கர்ம காரகன் சனி ஆவார், அவரே உங்களுக்கு கர்மாதிபதியாகவும் இருப்பார், இரண்டு ராசிக்கு மட்டும் இந்த அமைப்பு, அதாவது காரக கிரகமே இடத்தின் அதிபதியாக வருவது (மேஷம், ரிஷபம்).

இங்கு வந்து ஆட்சி பெற்று 12, 4, 7 ஆகிய இடங்களை பார்வை மூலம் பலனை தருவார்.

12 விரைய ஸ்தானம்
4. சுக ஸ்தானம்
7. களத்திர ஸ்தானம்

நன்றாக ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.

ஜோதிடத்தில் #சுபர்கள் பார்வை அந்த இடத்தை வளர்ச்சி பெற வைக்கும், #பாபர்கள் பார்வை வளர்ச்சியை தடுக்கும்.

இந்த முறை (தொழில், வேலை == கர்மம் ) தரும் பத்தாம் இட அதிபதி ஆட்சி வலு பெறுவது நன்மையான விஷயம் தான், னால் சனி மட்டும் இங்கே இருப்பது நல்ல நிலை அல்ல, தன் இஷ்டத்துக்கு தான் வேலையை தருவார்.

அதெப்படி தொழிலை அமைத்து தருவார், வேலையை வாய்ப்பு ஏற்படுத்தி தருவார். ஆனால் நல்ல மேம்பட்ட நிலையை அடைய முடியாது, வேலையில் கூடுதல் #நேரம் உழைக்க வேண்டியது வரும், வருமானம் அதாவது சம்பளம் லேட் ஆக தான் வரும்.

ஆனால் பார்க்கும் வேலை நிச்சயமாக விட்டு விட்டு போகும் நிலை வராது. வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நிச்சயம் உடலால் உழைக்க கூடிய வேலை கிடைக்கும்.

இந்த காலகட்டத்தில் அதாவது #சனி பெயர்ச்சி மூலம் #சொகுசு வேலை பார்க்க முடியாது, ஒடி ஒடி உழைத்து தான் பணத்தை பார்க்க முடியும்.

மூன்று ஆண்டுகள் இருந்தாலும் ஒரு வருட அதாவது 22-01-2021 இந்த காலகட்டம் வரை #பஞ்சமாதிபதி நட்சத்திரத்தில் (உத்திராடம்) இருப்பதால் அதிர்ஷ்ட குறைவு நிலை இருக்கும்.

பண முதலீடு அதிகம் கூடாது
லாட்டரி, ஸ்பெகுலேஷன், ஷேர் மார்கெட் மூலம் பணம் ஈட்டும் நபர்கள் எப்போதும் அதிர்ஷ்டம் இருக்காது என்று இப்போது உணருவீர்கள்.

கமிட்மெண்டுக்கு தகுந்த படி தான் வேலையோ, தொழிலோ நடத்த வேண்டும். இல்லை , #பத்தில் சனி #வேலையில் பிச்சை என்ற நிலை தான் கிடைக்கும்.

தெரியாத வேலையில் சேர வேண்டாம். அப்படி சேர்ந்தால் #அப்ரண்டிஸ் சம்பளம் தான் கிடைக்கும்.

இந்த பெயர்ச்சி காலகட்டத்தில்
#கர்ம சனி உங்கள் வீட்டில் ரொம்ப வயதான நபர்களுக்கு #காரியம் செய்யும் நிலை வரும் (எல்லோருக்கும் அல்ல), அதாவது படுத்த படுக்கையாக ஆயுள் காலம் முடியும் நேரம் நெருங்கிய நபர்கள் இருந்தால் மட்டுமே.

12ம் இடத்தை பார்ப்பதால்,,வீண் விரையம் இருக்காது, அடுத்து ஏதாவது எதையாவது நீங்கள் (விரையம்) இழந்தீர்களேயானால் அது #ஒன்று நீங்கள் ஏற்கனவே பட்ட கடனுக்கானதாகவோ அல்லது #சில காலம் கழித்து அதைவிட கூடுதலாக வருவதற்காகவே இப்போது இழந்து விட்டோம் என நினைக்க வேண்டும் ,,,,ஏன் #கர்ம காரகன் பார்வை அப்படி.

வெளி நாடு, வெளி மாநில வேலைக்கு செல்வோர், அல்லது இருப்பவர்களுக்கு அடுத்த ஆண்டு #குரு பெயர்ச்சி வரும் வரை வேலையில் கஷ்டபட்டு, சகித்து கொண்டு, நிர்பந்தத்தின் அடிப்படையில் தான் செய்ய முடியும்.

4ம் இடத்தை பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் கவனம், தாய் உடலமைப்பு கவனிக்க வேண்டும், சொத்து வில்லங்கம் வரும், documents கரெக்டாக வைத்து கொள்ளுங்கள்,,,,சுகம் கிடைப்பது கடினம், வீட்டு வேலைகள் நடக்கும், கல்வி மந்த நிலை உண்டு, பெண்களே காதல் வேண்டாம், அதன் பெயரில் நீங்களே உங்களுக்கு கலங்கத்தை ஏற்படுத்தி கொள்வீர்கள். தாயாருக்கு கெட்ட பெயர் வாங்கி தருவீர்கள் உங்கள் நடத்தை மற்றும் நடவடிக்கை மூலம்.

விலங்குகளை நம்பி வாழ்வோர் அதனை நன்றாக பராமரிக்க வேண்டும்,,,,இல்லை நஷ்டம் தான்.

7ம் இடத்தை பார்ப்பதால் களத்திர வாழ்வில் பிரச்சினை ஆரம்பிக்கும், புதிய திருமணம் செய்ய இருப்பவர்கள் அடுத்த ஆண்டு #குரு பெயர்ச்சி பிறகு செய்யுங்கள் (இது என்னுடைய தனிபட்ட கருத்து).

வரன் அமையும் இடத்தை நன்றாக விசாரிக்க வேண்டும், இளம் வயது திருமணம் கவனம், கூட்டு தொழில் வேண்டாம்,,தனித்து பாருங்கள்

முகம் தெரியாத நபர்களை தொழில், வேலை விஷயத்தில் நம்ப வேண்டாம்.

#important
உங்களுடன் தற்போது #மகரம்_மிதுனம்_கடகம்_கும்பம்_துலாம் இந்த ராசி நபர்கள் இருந்தால் மேற் சொன்ன சாதகமற்ற பலன் கூடும்.

பரிகாரம்

சபரிமலை வழிபாடு

கூலி தொழிலாளி, சலவை தொழிலாளி,துப்புரவு தொழிலாளி இது போன்றவர்களுக்கு #சனிக்கிழமை, #சனி ஹோரையில் அவர்களுக்கு விருப்பமானதை பொது இடத்தில் கொடுங்கள்

#தொழில்_வேலையில் அகலகால் மற்றவர்களை நம்பி இறங்க கூடாது.

#மேஷம்_கஷ்டத்தில்_இஷ்டம்(கர்மம்)

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More