சனிபெயர்ச்சி ரிஷபம் ராசி (அஷ்டம சனி முடிந்தது) 2020 – 2023

7,586

இது வரை பல பிரச்சினைக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டு உள்ளீர்கள், அசிங்கம், அவமானம், வீண் இழப்பு, தலை குனிவு, பஞ்சாயத்து, எந்த பக்கம் போனாலும் முட்டு கட்டை, பணம் இல்லை, எல்லாவற்றுக்கும் மேலாக வேலை சரியாக இல்லை.

இனி அந்த பிரச்சினை மெல்ல மெல்ல மாறுகிறது, புயல் அடித்து இயல்பு நிலை திரும்பும் அமைப்பாக இருக்கும் #புது_ஆண்டு .உறுதியாக தான்.

ஏன், ஒன்பதில் ஆட்சியாகியும் உங்கள் ராசிக்கு உண்டான 11, 3, 6 ஆகிய இடங்களை பார்வை மூலமும் பலன் தருவார்.

சனி உங்கள் ராசிக்கு (பாக்கியாதிபதியும் கர்மாதிபதி பாதகாதிபதியாகவும்) செயல்படுவார்.

இந்த முறை #பாக்கியாதிபதி மற்றும் #பாதகாதிபதியாகவும் செயல்படுவார்

அதென்னங்க இரண்டு நிலை என்றால்.

பாக்கியாதிபதி_நல்ல விஷயத்தை நடத்தி காட்டுவார் .

பாதகாதிபதி_நல்லது என நீங்கள் அவசரப்பட்டு செய்யும் காரியத்தில் பிரச்சினையும் தருவார்.

இனி, பலனுக்கு வருவோம்.

நீங்கள் நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.

general ஆக

ஒன்பதில் #குரு_நீசமாக இருந்தாலும் நல்ல பலனை எப்படியாவது தருவார்

அதே #சனி_உச்சம் ஆனாலும் நல்ல எளிமையான ,அதிர்ஷ்டமான பலனை தாமத படுத்தி விடுவார்

இதுதான் இயற்கை சுபர் மற்றும் பாப கிரகங்களுக்கு உள்ள வித்தியாசம்.

அடுத்த குரு பெயர்ச்சி வரும் வரை இங்கு ஆட்சியாகி இருக்கும் சனி #பாபத்துவம் என்ற நிலையில் தான் இருப்பார்.

இனி தூர இடத்தில் இருந்து வேலை அமைப்பு கிடைக்கும்.

பணம் வருவதை நீங்கள் உணர நிச்சயம் முடியும்.

குடும்ப பிரச்சினை தீருகிறது,சமரசம், சுமூகமான நிலை உண்டு.

மணக்கஷ்டம்_பணக்கஷ்டம் இல்லை.

வேலை வாய்ப்பு நிச்சயமாக பாக்கியாதிபதியான சனி அமைத்து தருவார், சந்தேகம் வேண்டாம்.

நல்ல காரியங்களை நிறை வேற்ற முடியும்.

சொந்த தொழில் செய்ய நினைப்பவர்கள் ஆரம்பிக்கலாம் இனி,தடையும் விலகுகிறது, அதற்கு உண்டான நல்ல விஷயம் அடுத்த ஆண்டு முதல் நடக்கும்.

அரசு வேலை வாய்ப்பு (முயற்சி மற்றும் விரும்பியவர்களுக்கு) கிடைக்கும் ஒரு ஆண்டுக்குள்.

இது போன்ற நல்ல விஷயங்களை தருவார் என்ன slow ஆக தான் தருவார். அதே வேலை கடந்த கால கஷ்டத்தை நீங்கள் நினைத்து பார்த்து தான் எதையும் செய்ய வேண்டும்.

உடனே நல்லது நடக்க வேண்டும் என்றோ, ஊர் உலகத்திடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்றோ அவசரப்பட்டு எதையும் செய்ய வேண்டாம், அதில் நீங்கள் கெட்ட பெயர் தான் எடுப்பீர்கள்.

உத்திராடம் நட்சத்திரம் 22-01-2021 வரை உங்கள் #சுகாதிபதி நட்சத்திரத்தில் இருக்க போவதால், ஆரோக்கியம் மேம்படும் அதே சமயம் உங்கள் #வீட்டில் குடும்பம் மற்றும் வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதிர்ப்பு, பகை இருக்கும்.

11ம் இடத்தை மூன்றாம் பார்வை மூலம் பார்ப்பதால், முதல் திருமணம் நிலைக்காதவர்களுக்கு #இரண்டாம் திருமண வாய்ப்பு வந்து நடக்கும் .

எதிலும் லாபம் கிடைக்கும் இடத்தை சனி பார்பதால் சற்று தாமத பட்டுதான் கிடைக்கும், ஆனால் கிடைக்காமல் போகாது, நிச்சயம் கிடைக்கும்.

மூத்த சகோதரர்களுக்கு அதிர்ஷ்ட குறைவான காலமாகவும், ஆரோக்கிய குறையும் வரும், உங்கள் #அன்னன்_அக்கா அவர்களை கவனமாக எதையும் செய்ய சொல்லுங்கள்.

3ம் வீட்டை தனது நேர் பார்வையால் பார்த்து பலனை என்னவாக தருவார் என்றால், உங்கள் முயற்சியோ_தைரியமோ இப்போது குறையும், அஷ்டம சனி நேரத்தில் கூட இருந்த தைரியம் இப்போது இருக்காது, பக்கத்தில் இருப்பவர்கள் உங்களை குழப்பி விடுவார்கள்.

நீ எதற்கும் ஆகாதவன், அதிர்ஷ்டம் இல்லாதவன், பெரிய விஷயத்தை உன்னால் சாதிக்க இயலாது என்று அடிக்கடி கூறி #தைரியத்தை குறைப்பார்கள்.

உங்கள் சுய முயற்சி பலிக்கும்,அடுத்தவரை சார்ந்து,நம்பி செய்யும் முயற்சி பலிக்க கால தாமதமாகும்.

இளைய சகோதரசகோதரிதாய் பக்கத்தில் இருப்பவர்கள் மற்றும் குறுகிய தூர பயனம் பக்கத்து வீட்டு காரர்கள் உங்களுக்கு இப்போது பகையாகவோ அல்லது அவர்கள் உங்கள் முயற்சிக்கு ஏற்றவாறு நடக்கமாட்டார்கள். எனவே அவர்களை நம்பி காலம் தாழ்த்தாமல் உங்கள் சுய முயற்சியில் முன்னேறுங்கள்.

important

6ம் வீட்டை பத்தாம் பார்வையால் பார்ப்பது மிக முக்கியமான யோகம்.

கடன் குறையும் அல்லது அடைபடும்

Promotion (or) transfer கிடைக்கும் கன்பார்ம்.
அடிமை வேலை மாறி நல்ல வேலைக்கு செல்ல போறீங்க அல்லது வேலை விஷயத்தில் நல்ல மாற்றம் வரும்.

Job work, service work செய்பவர்களுக்கு நல்ல ஏற்றமான காலம் கட்டம் இதுவே, பயன்படுத்தி கொள்ளுங்கள்.

வீடு வாங்குவது சம்பந்தப்பட்ட விஷயங்கள் இனி மூன்று ஆண்டுகள் சாதகமாக உள்ளது, சொந்த வீடு இல்லாதவர்கள் அல்லது புது வீடு கட்ட நினைப்பவர்கள் இனி வரும் மூன்று ஆண்டுகளில் நிறை வேற்ற முடியும்.

குறிப்பிட்ட பலனாக இனி #கடன் வாங்குவது இயலாது,மாறாக கடனை திருப்பி அடைக்க முடியும்.

பரிகாரம்_தேவையில்லை நீங்கள் செய்ததே போதும்(கஷ்டம் விலகியது).

ரிஷபம்உலகம் தெரியும் இனி.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More