சனிப்பெயர்ச்சி 2020

4,822

2020 இல் சனிப்பெயர்ச்சி வாக்கியப்படி 26 டிசம்பர் 2020
திருக்கணிதப்படி 24 ஜனவரி 2020.

கோச்சார அடிப்படையிலான கிரக பெயர்ச்சிகளில் சனி பெயர்ச்சி என்பது மிக ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பெயர்ச்சியாக கருதப்படுகிறது.

ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் கிரகம் எது என பார்த்தால் சனிபகவானே முதலிடம் பெறுகிறது.

ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கி வாசம் செய்யும் கிரகம் சனி பகவான் ஒருவர் மட்டுமேயாகும்.

ஒரு ராசியில் சந்திரனுக்கு அதாவது ராசிக்கு நான்காம் இடத்தில் சனிபகவான் வருங்காலம் அர்த்தாஷ்டமச் சனி என்று அழைக்கப்படுகிறது.

அர்த்தாஷ்டமச் சனி

ராசிக்கு 4-ஆம் இடம் என்பது சுகஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது தன் சுகம், தாய் சுகம், கல்வியால் சுகம், வண்டி வாகன சுகம், வீட்டில் சுகம், மற்றும் களவியல் சுகம் போன்றவற்றைக் குறிக்கும் ஸ்தானம் என்பதால் இந்த இடங்களில் சனி பகவான் அமரும் காலங்களில் மேற்கண்ட வகையான பாதிப்புகளை சாவதற்கு தர வாய்ப்புண்டு.

கண்டச்சனி

ஒரு ராசியில் சந்திரனுக்கு ஏழாமிடத்தில் சனிபகவான் வரும் காலம் கண்டச்சனி என்றழைக்கப்படுகிறது.

பொதுவாக கண்டச்சனி யானது ஒருவருக்கு தண்டச் செலவுகளை தரும் என்பது ஒரு சொல்லோடை ஆகும்.

ராசிக்கு ஏழாம் இடம் என்பது தனது வாழ்க்கைத் துணையையும், நட்பு நிலையையும், தனது வாழ்க்கைத் துணையோடு அனுபவிக்கக்கூடிய இன்ப சுகத்தையும் ஆராய்ந்து அறியக்கூடிய பாவம் ஆகும்.

எனவே ஏழாம் இடத்தில் சனி இருக்கும் காலங்கள் இந்த வகையில் தேவையில்லா செலவுகள் தரக் கூடிய வாய்ப்பு உண்டு .

ஏழரைச் சனி

ஒரு ஜாதகத்தில் ராசிக்கு அதாவது சந்திரன் இருக்கும் இடத்திற்கு பன்னிரண்டாம் வீட்டில் சனி பகவான் தேர்ச்சி அடைந்தால் அப்பொழுது அந்த ராசிக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது என்று அர்த்தம் ஆகும்.

ராசிக்கு 12-ஆம் இடம் “விரய ஸ்தானம்” என்பதால் அந்த இடத்தில் அவரும் சனியை “விரயச்சனி “என்று அழைக்கிறோம்.

இக்காலங்களில் ஜாதகருக்கு தேவையில்லாத வீண், விரயச் செலவுகளை தரக் கூடிய வாய்ப்பு உண்டு. இந்த வீண் விரயச் செலவுகளை சுப செலவுகளாக மாற்றிக்கொள்ள ஒருசிலர் வீடு கட்டுதல், பெண்ணிற்கு திருமணம் செய்தல். போன்ற சுப விஷயங்களில் ஈடுபட்டு சுப விரயமாக மாற்றிக் கொள்ளலாம்.

பிறகு ராசியிலேயே அதாவது சந்திரன் இருக்கும் வீட்டிலேயே சனி பகவான் இடம்பெயர்ந்து வந்த அமர்வதை “ஜென்மச்சனி” என்றழைக்கிறோம் .

ஒரு ஜாதகரை வழிநடத்தக்கூடிய கேப்டனாக விளங்க கூடியவர் உயிர் என்றழைக்கப்படும் லக்கனமும், உடல் என்று அழைக்கப்படும் ராசியுமே ஆகும்.

இந்த மதி என்றழைக்கப்படும் ராசியில் சனிபகவான் வரும்பொழுது இது ஜாதகரை தேவையில்லாமல் குழப்பங்களைத் தந்து சாதகர் சார்ந்த விஷயங்களில் மனக் குழப்பங்களைத் தந்து விளைவிக்கும்.

சந்திரன் இருக்கும் இடத்திற்கு இரண்டாமிடத்தில் சனிபகவான் வரும் காலம் “பாதச் சனி” என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டாம் இடம் தனம், வாக்கு, கல்வி, குடும்பம் மற்றும் நேத்திரம் போன்ற விஷயங்களை குறிக்கும் இரண்டாம் இடத்திற்கு வரும் பொழுது இது சார்ந்த விஷயங்களில் ஒரு சில கஷ்டங்களை தர வாய்ப்புண்டு.

ஒரு மனிதனுக்கு ஏழரைச்சனி யானது மூன்று முறை சுற்றி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

ஒருவர் பிறந்தவுடன் முதன்முதலாக வரக்கூடிய ஏழரைச் சனியை
“மங்கு சனி “என்றும், இரண்டாவது சுற்று வரக்கூடிய ஏழரைச் சனியை “பொங்கு சனி” என்றும், மூன்றாவது சுற்று வரக்கூடிய ஏழரைச் சனியை “மங்கு சனி” என்றும் அழைக்கிறோம்.

ஒருவருக்கு ஏழரைச்சனி வந்தால் அதற்காக பயப்படத் தேவையில்லை. ஏழரைச் சனி என்பது ஏழழரை ஆண்டுகளும் ஒருவருக்கு துன்பங்களையே தந்து விடுவதில்லை.

ஒருசிலருக்கு ஏழரைச் சனி காலங்களில் தான் வாழ்வின் உயர்ந்த நிலையை நோக்கி இட்டுச் சென்றுள்ளது .

ஏழரைச்சனியானது முதல் மூன்றரை ஆண்டுகள் மட்டுமே கஷ்டங்களை தந்து பிறகு அடுத்த மூன்றரை ஆண்டுகள் அந்த கஷ்ட அனுபவத்தினை வாழ்க்கையில் பயன்படுத்தி முன்னேற வழிவகுக்கும்.

பொதுவாக ஏழரை சனி போன்ற கோச்சார காலங்களில் ஒருவருக்கு நல்ல திசை அமைப்பு இருந்தால் ஏழரைச்சனி தரக்கூடிய கஷ்டங்களை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கோச்சார காலங்களில் ஏழரைச் சனியும் நடைபெறும் திசையும் உகந்ததாக அமையாத பட்சத்தில் மட்டுமே ஏழரைச்சனி மிகுந்த கஷ்டங்களை தருவதற்கு வாய்ப்பு உண்டு.

ஏழரைச்சனியானது சனிக்கு பகை கிரகமான செவ்வாயின் வீடுகளான மேஷம், விருச்சிகம் மற்றும் சூரியனுடைய வீடுகளான சிம்மம் இதுபோன்ற ராசிகளுக்கு அதிக கஷ்டங்களை தருவதை நான் அனுபவப்பூர்வமாக பார்த்துள்ளேன்.

இதேபோல ஏழரைச் சனி நடைபெறும் காலங்களில் சந்திர தசை, ராகு தசை நடப்பில் இருப்பின் ஜாதகர் மிகுந்த இன்னல்களை அனுபவிக்க நேரிடலாம்.

அஷ்டம சனி

சந்திரன் இருக்கும் இடத்திற்கு எட்டாம் இடத்தில் சனி வரும் காலம் அஷ்டமச் சனி என்று அழைக்கப்படுகிறது அஷ்டமச்சனி காலத்தில் ஆடு, மாடு விரயம், விவசாயத்தில் நஷ்டம், கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை, சிறை செல்லல் மற்றும் ஆயுள் பங்கம் போன்றவை தரலாம்.

சனி பகவானின் வேறு பெயர்கள்
மந்தன், மகேசன், ரவிபுத்ரன்,
நொண்டி, முடவன், ஜடாதரன் மற்றும் ஆயுள் காரகன்.

சனி பகவானுக்கு நட்பு கிரகங்கள்
புதன், சுக்கிரன், ராகு மற்றும் கேது
சமம்-குரு
பகை கிரகம்-சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய்

சனிபகவான் ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத அலி கிரகமாகும்.

வாகனம்: காக்கை,எருமை
பாஷை: அந்நிய பாஷை
உலோகம்: இரும்பு
வஸ்திரம் ; கருப்பு
நிறம்: கருமை
திசை: மேற்கு
தேவதை : எமன்,சாஸ்தா
சமித்து : வண்டி
தானியம்; எள்
புஷ்பம்: கருங்குவளை
சுவை: கசப்பு

சனி பகவான் சூரியன் பகவானின் மைந்தன் ஆவார். பொதுவாக தந்தை மகனுக்கும் இடையே ஒற்றுமை இருக்கும் ஆனால் சூரியனும் சனியும் ஜென்ம பகைவர்கள்ஆவார்.

பூசம்,அனுஷம், உத்திரட்டாதி சனிபகவான் நட்சத்திரம்

சனி திசை 19 ஆண்டுகள்.

சனி பன்னிரண்டு ராசிகளையும் ஒருமுறை சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகிறது.

சனிபகவான் ஸ்தோத்திர பிரியர் ஆவார். சனி பகவான் தரும் இன்னல்களில் இருந்து விடுபட சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து சனிபகவான் சந்நிதியில் இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, எள் அன்னம் நைவேத்தியம் வைத்து வழிபடலாம்.

சனி கவசம்,சனி அஷ்டோத்திரம் பாராயணம் செய்து மனமுருக சொல்லலாம்.

ஏழைகளுக்கு அல்லது பிராமணர்களுக்கு எள் அன்னம் , கருப்பு வஸ்திரம் தானம் செய்யலாம்.

சனி பகவானை நேருக்கு நேர் நின்று வழிபட்டாமல் பக்கவாட்டில் நின்று வழிபடலாம்.

திருநாளன்று சென்று நளதீர்தத்தில் நீராடி மேற்கண்டவாறு வழிபடலாம். இங்கு உள்ள தர்பணேஷ்வரர், அம்பாள் மற்றும் சனிபகவானை மும் வழிபடலாம்.

சனி தோஷம் போக்க காக்கைக்கு தினந்தோறும் அன்னம் வைத்தல், உளுந்து தானியத்தை தானம் செய்வது, கோவில்களில் நவகிரகங்களை 9 முறை சுற்றி வருதல், நீலக்கல் மோதிரம் அணிதல் போன்ற வகைகளில் ஏழரைச்சனி தோஷத்தை போக்கலாம்.

சனிக்கிழமை அதிகாலை எழுந்து சுந்தர காண்டம் பாராயணம் செய்தல்.

சனி பகவான் தரும் அதிக இன்னல்களில் இருந்து விடுபட கருப்பு தோல் நீக்காத முழு உளுந்தினை தலையாணைக்கு அடியில் வைத்து படுத்திருந்து, மறுநாள் காலை நதியில் நீராடி சனிபகவானை 108 முறை வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறை வலம்ம் வந்தவுடன் ஒரு கருப்பு முழு உளுந்தை இடவேண்டும். சனி தோஷம் போக்க முழு உளுந்து தானம் செய்தல் சிறந்தது ஆகும்.

சனி பகவான் கேந்திர ஸ்தானமான 1 4 7 10 இடங்களில் உச்சம் ஆட்சி போன்ற நிலைகளில் பலம்பெற்று இருக்கும்பொழுது சச யோகத்தை ஜாதகருக்கு தருகிறது.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More