சனி பெயர்ச்சி பலன்கள் 2017 - 2020 | Sani Peyarchi 2017 Mesha Rasi

சனி பெயர்ச்சி பலன்கள் மேஷ ராசி 2017 – 2020 | Sani Peyarchi Palangal

சனி பெயர்ச்சி பலன்கள் மேஷ ராசி 2017 – 2020

==========

திருக்கணிதப்படி :

==================

கடந்த தை மாதம் 13 (26.01.2017) வியாழக்கிழமை இரவு 7:31 க்கு ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து அதிசாரமாக பெயர்ச்சி ஆகி தனுசு ராசிக்கு சென்றார் பின் வக்கிர கதியில் வந்து ஆனி 6 ( 20.06.2017 ) செவ்வாய்கிழமை மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்தார்

தற்போது மீண்டும் ஐப்பசி 9 (26.10.2017) வியாழக்கிழமை பிற்பகல் 3:28 க்கு நேர்கதியில் விருச்சிக ராசியில் முழுவதுமாக பெயர்ச்சியாகி தனுசுக்கு வந்து விட்டார்.

வாக்கியப்படி :

============

வரும் மார்கழி 4 (19.12.2017) செவ்வாய்க்கிழமை 8:52 நாழிகை அளவில் ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்

இதுவரை கடந்த இரண்டரரை வருட காலத்தில் உங்கள் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து வைத்திய செலவு, தொழில் பிரச்சினை, துக்க செய்திகள், விபத்து, கண்டம், அறுவை சிகிச்சை, நெருங்கிய உறவினர் மரண செய்தி, தன நஷ்டம், வம்பு வழக்கு, களவு, மனைவி மக்கள் பகை இப்படி பல வகையில் பிரச்சினைகளை சந்தித்து இருப்பீர்கள்

இனி இந்த பிரச்சினைகள் எல்லாம் மறையும் காலம் சனிபகாவன் அடுத்து உங்கள் பாக்கிய ஸ்தானம் எனப்படும் ஒன்பாதமிடத்துக்கு பெயர்ச்சியாகி 3,7,10 ஆம் பார்வையாக 11, 3, 6 ஆகிய இடங்களை பார்க்க உள்ளது

அட்டம சனியில் பட்ட அவஸ்தைகள் அனைத்தும் குறையும் காலம். வருமானம் தேவைக்கேற்ப வந்து உதவும். தெய்வீக வழிபாடு,தானதருமங்கள், ஆன்மீக முயற்சிகளுக்கு உகந்த காலம், தூர தேச பயணம் உண்டாகும், ஒப்பந்த தொழிலில் மேன்மை தரும், லாபங்கள் உண்டாக்கும் காலம், திருமணம் மற்றும் சுப காரியம் தடை நீங்கி கூடிவரும் காலம், திருப்பணி , யாத்திரை செல்ல வாய்ப்பு உண்டாகும், தகப்பானாருக்கும், பிறந்த விட்டீர்க்கும் சில தொல்லைகள் உண்டாகும், பூர்வீகத்தில் சொத்து பகை ஏற்படும்

உடல் ஆரோக்கியம் :

====================

இது வரை கடந்த இரண்டரை ஆண்டில் சந்திந்து வந்த உடல்நல பிரச்சினைகள் மன நல பிரச்சினைகள் சரியாகும் முழுவதும் உடல்நலம் தேறும். அறுவை சிகிச்சைகள் பலன் தரும், நீண்டகாலம் மருத்துவமனையில் தங்கி இருந்தவர்கள் வீடு திருப்பும் காலம், நீண்ட நாள் நோய் பிரச்சினைகளும் தீர்வு கிட்டும், தூக்கமின்னைமையால் அவதி பட்டவர்கள் நல்ல உறக்கம் ஏற்படும், மர்ம ஸ்தானத்தில் இருந்த நோய்கள் நீங்கும்

உத்தியோகம் / வருமானம் :

==========================

புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும், வேலை மாற்றம் சம்பள உயர்வுடன் அமையும், வேலை செய்யுமிடத்தில் சம்பள உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிட்டும், கௌரவ பதவிகள் வந்து சேரும், பாக்கி சம்பளம் வந்து சேரும், புதிய பொறுப்புகள் வந்து சேரும் காலம், உயர் அதிகாரி / முதலாளி / கீழ் பணியாளர்கள் உதவியும் ஒத்துழைப்பும் கிட்டும், புத்தி யுக்தி கையாண்டு பணியில் வெற்றி பெற்று நல்ல நிலை, கவுரவம், பணமுடிப்பு, ஊக்க தொகை கிடைக்கும். பதவி மூப்பு அடிப்படையில் நல்ல நிலையில் இடமாற்றம் உண்டாகும். சொந்த ஊருக்கு இடமாற்றம் கிட்டும், அரசு வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்து ப்ளாக் மார்க் எல்லாம் மறையும் காலம் ஆதரவும் கிட்டும் பணி பதவி உயர்வும் கிட்டும், ஒப்பந்த அடிப்படையில் பணி செய்தவர்கள் நிரந்திர பணியாக மாறும் காலம் மொத்தத்தில் சுபமான பலன் தரும் காலம்

தொழில் / வியாபாரம் / வருமானம் :

========================

இதுவரை தொழில்/வியாபாரத்தில் இருந்துவந்த மந்த நிலை/ முடக்கம் மாறும் வேகம் பெறும், வருமானங்கள் உயரும் காலம், புதிய வழிகளில் வருமானம், தொழில் விரிவாக்கம் மூலம் நல்ல வருமானம் உயரும் காலம், பாக்கிகள் வசூல் ஆகும், கடன் அடையும் காலம், புதிய தொழில் நன்மை தரும், தொழில் / வியாபாரம் மாற்றம் செய்ய நினைத்து கொண்டு இருப்பவர்களுக்கும் இது உகந்த காலமாக அமையும் நல்ல பல மாற்றங்கள் சந்தித்து மகிழ்ச்சியாக இருக்கும் காலமாக அமையும்

பெண்கள் :

========

இளம்பெண்களுக்கு தடைப்பட்டு கொண்டிருந்த திருமணம் கைகூடி வரும் விவாகம் நடைபெறும், விவாகரத்து பிரச்சினைகள் தீரும், மர்ம ஸ்தானத்தில் இருத்த நோய்கள் மருத்துவம் மூலம் கட்டுக்குள் வரும் தீர்வும் கிட்டும் இல்லற உறவும் செழிக்கும், புதிய வேலை / தொழில் வாய்ப்புகள் கிட்டும், கடன் பிரச்சினைகள் தீர்வுக்கு வரும், புதிய தாலி மாற்றி கொள்ளும் வாய்ப்புகள் வரும், பிரிந்திருந்த கணவன் ஒன்று சேரும் காலம், பிரிவினைகள் நீங்கி சுகம் ஏற்படும் காலம்

அரசியல்வாதிகள் :

================

அருமையான கால கட்டம், புதிய பதவி கிட்டும், புதிய கட்சி பொறுப்புகள் வந்து சேரும், தலைவரின் / மேல் மட்ட தலைவரின் அன்பு ஆதரவுகள் கிடைக்கும், பணவரவு / பண புழக்கம் அதிகரிக்கும். நண்மையான காலமாக இருக்கும் பயன் படுத்தி கொள்வது சிறப்பை தரும்

விவசாயிகள் :

===========

விவாசாயம் செழிக்கும் காலம், வாங்கிய கடன் முழவதும் அடையும், பணபயிரில் லாபம் அதிகம் கிட்டும், பருப்பு, பயறு வகை பயிர்கள் செழிக்கும்,

உயர்ரக நெல் வகை விளைச்சல் அதிகரிக்கும் நல்ல விலைக்கு விற்கும் லாபமும் அதிகாரிக்கும், மஞ்சள் உற்பத்தி அதிகம் இருக்கும்

மாணவ மாணவியர்கள் :

======================

இதுவரை படிப்பில் இருந்து வந்த சுணக்கம் மாறும் படிப்பில் ஆர்வம் உண்டாகும் வரும் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடையும் காலமாக இருக்கும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் காலம் எனவே கவனமுடன் படித்தால் நல்ல உயர்ந்த மதிப்பெண்கள் பெரும் காலம். உயர்கல்வி படிக்க வாய்ப்புகள் கிட்டும் நல்ல மதிப்பெண்ணும் கிட்டும்

கலைஞர்கள் :

============

இதுவரை உங்கள் துறையில் நஷ்டத்தை சந்திந்து வந்து இருப்பீர்கள் சிலருக்கு வாய்ப்பே கிடைக்காமல் அலைச்சல், மன உளைச்சல் உண்டாகியிருக்கும் இனி அந்த நிலைமாறும். எல்லாம் நல்ல படியாக நண்மையாக நடைபெறும் காலம்

மேற்குறிப்பிட்ட பலன்கள் மற்ற கிரக பெயர்ச்சிகள், உங்கள் ஜனன ஜாதகத்தின் வலு மற்றும் தசா புத்திகள் பொருத்து மாற்றங்கள் உண்டாக்கும்.

எனவே அருகிலுள்ள ஜோதிடரை அல்லது என்னை கலந்து ஆலோசித்து முடிவுகள் எடுப்பது சிறப்பை தரும்

நன்றி

வாழ்க வளநலமுடன்

 

Blog at WordPress.com.

%d