நிகழும் மங்களகரமான தமிழ் விகாரி வருடம் ,தை மாதம் 10ம் தேதியும்,ஆங்கில வருடம் ஜனவரி மாதம் 24 .1. 2020 ம் தேதி காலை 9.57 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு திருக்கணிதப்படி பெயர்ச்சி ஆகிறார்.
29 .4 .2022. காலை 7.53 மணி வரை மகரராசியில் தங்கியிருந்து தன்னுடைய பணிகளை கவனிக்க இருக்கிறார்.
இக்காலகட்டங்களில் மீன ராசிக்கு என்ன மாதிரியான நல்ல, தீய பலன்களை கொடுப்பார் என, வாருங்கள் விரிவாக பார்ப்போம்.
மீன ராசிக்கு சனிபகவான் தற்போது
10ம் இடத்தில் இருந்து 11ம் இடமான லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார்.
11ம் இடத்தில் தன் சொந்த வீட்டில் ,ஆட்சி ஆகும் சனி , அங்கு உத்திராடம் ,திருவோணம் ,அவிட்டம் நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்வார்.
அது போல் சனி தன்னுடைய 3 பார்வையாக -1ஆம் இடத்தையும் ,7-ஆம் பார்வையாக 5-ஆம் இடத்தையும் 10ம்ஆம் பார்வையால் 8ம்இடத்தையும் பார்ப்பார்.
இந்த சனிப்பெயர்ச்சியால் மிக அதிகமான நன்மைகளை அடைய போகும் ராசிகளில் மீன ராசியும் ஒரு ராசி என்றால் அது மிகையில்லை.
காரணம் சனி பகவான் தனக்கு பிடித்தமான லாப ஸ்தானமான 11-ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார் .இது மிக நல்ல அமைப்பு.
கடந்த காலங்களில் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் இருந்தபோது தொழிலில் கடுமையான தேக்க நிலையை கொடுத்திருப்பார் . வேலையில் பிரச்சனை, நிம்மதி இல்லாத நிலை என பலவற்றையும் கடந்து வந்திருப்பார்கள் இந்த மீன ராசிக்காரர்கள்.
கடந்த காலகட்டங்களில் உங்கள் தொழிலில் எந்த அளவு கடினமாக உழைத்தீர்களோ அதற்கேற்ற கூலியைக் கொடுக்க தயாராகி விட்டார் சனி பகவான்.
ம்ம்ம் என்ஜாய்.
புதிய தொழில் முதலீடுகள் தாராளமாக செய்யலாம் .தொழிலை விரிவுபடுத்தலாம். வியாபாரம் பெருகும் லாபம் கூடும் .அது எந்தத் துறையாக இருந்தாலும்.
நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பதவி உயர்வு, போனஸ், இன்கிரிமெண்ட் ஆகியவை கிடைக்கப் பெறும்.
படித்து முடித்த மாணவர்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப உடனே வேலை கிடைக்கும்.
வேலையில் நிம்மதியான சூழ்நிலை நிலவும்.
சிலருக்கு அரசு வேலை அமையும் வாய்ப்பு உண்டு.
மாணவர்கள் சிறப்பாக , கடினமாக உழைத்து படித்திருந்தால் மாநில அளவில் ரேங்க் பெறும் நிலையும் ஏற்படும்.
விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.
நீண்ட காலமாக திருமணம் தடைப்பட்ட வர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் அமையும்.
குழந்தை பாக்கியமும் உடனடியாக கிடைக்கும்.
சிலருக்கு சொந்தமாக வீடு கட்டும் யோகமும் ,வண்டி வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும்.
உற்றார் உறவினர்கள் உதவுவார்கள்.
மருத்துவ செலவுகள் மட்டுப்படும்.
காதல் கனியும் .கனவுகள் மெய்ப்படும்
கடன்கள் கறையும். கந்துவட்டிக் கொடுமை கட்டுப்படும்.
பொருளாதார முன்னேற்றம் எப்படிப்பார்த்தாலும் உண்டு.
உங்கள் எதிர்கால கனவுகளை நனவாக்க, திட்டங்கள் வகுத்து செயல்பட்டால் அது வெற்றியில் முடியும்.
பங்கு சந்தை லாபம் தரும்.
பகையாளிகள் நண்பர்களாக மாறுவர்.
பூர்வீக சொத்துக்கள் கிடைக்கப்பெறும். புண்ணிய தலங்கள் செல்லும் யோகமும் உண்டு.
பூரிப்பான ,புன்னகையா வாழ்க்கை அமையப் போகிறது.
புது விடியலும் பிறந்துவிட்டது.
புத்துணர்ச்சியோடு செயல்படுங்கள். பொற்காலத்தை அனுபவிக்க ஆயத்தமாகுங்கள்.
எண்ணங்கள் ஏற்றம் பெறும். எண்ணியது கைகூடும்.
உங்கள் ஜாதகத்தில் தசா புக்திகள், சாதகமாக இருந்தால் ,கும்பிடபோன தெய்வம் குறுக்கே வரும்.
சனி மகர ராசியில் நுழையும் போது சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் நட்சத்திரத்தில் நுழையும்.
சூரியனின் நட்சத்திரத்தில் 22. 1. 2021 வரை இருக்கும்.
இந்த காலகட்டங்களில் தந்தை, மகன் உறவு பாதிக்கக்கூடும். 23. 1. 21 முதல் சந்திரனின் நட்சத்திரமான திருவோணத்தில் பயணிப்பதால் எல்லா விஷயங்களிலும் ஓரளவு அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் சுணக்கம் ஏற்படும்.டென்சன் உண்டு. 18. 2 .2022 வரை திருவோண நட்சத்திரத்தில் சனி சஞ்சரிப்பார்.
சந்திரனின் நட்சத்திரத்தை கடந்து,சனி பெயர்ச்சி ஆகும்வரை செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் பொழுது கணவன்-மனைவி கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம் கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை.
சனியின் வக்ர காலங்கள்:
11.5 2020 முதல் 29.9.2020 வரையிலும் 23.5.2021 முதல் 11.10.2021 வரையிலும் சனி வக்ரமாக இருப்பதால் இந்த காலகட்டங்களில் எச்சரிக்கை தேவை.
குறிப்பாக தொழில் மற்றும் உடல் நலம் மேம்படும்.
சனிப்பெயர்ச்சி ஆகும் நேரத்திலேயே சனிபகவான் அஸ்தமனத்தில் இருப்பதால் (சூரியனுக்கு முன்,பின் 15 டிகிரி) சனியின் அஸ்தமனம் முடியும் நாளான 30.1.20 அன்று கிட்டத்தட்ட ஆறு நாட்கள் கழித்து மேற்சொன்ன பலன்கள் நடக்க ஆரம்பிக்கும்.
சனியின் அஸ்தமன காலகட்டங்கள் :
7.1. 2021 முதல் 10. 2 .2021 வரை.
19.1.2022 முதல் 21.2.2022 வரை
சனி அஸ்தமனமாகும் காலகட்டங்களில் புதிய கடன்கள் வாங்க வேண்டாம்.
கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை.
சிலருக்கு உடல் நலம் பாதிக்கப்படலாம் என்பதால் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். அதே நேரத்தில் உங்கள் சுய ஜாதக அமைப்பே முழுமையாக பேசும் என்பதால் உங்கள் சுய ஜாதகத்தை ஒருமுறை பரிசீலனை செய்து அதற்கேற்றபடி முடிவு எடுத்துக் கொள்வது நல்லது.
பரிகாரம்:
உங்கள் குலதெய்வத்தை மாதமொருமுறை வழிபட்டு வரவும் .வீட்டில் தினசரி வழிபாடுகளை எப்பொழுதும் போல் மேற்கொள்வது நல்லது.
பிரதோஷ வழிபாடு பெருமை சேர்க்கும்.
ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யவும்.
இந்தப் பதிவு பிடித்திருந்தால் பலரும் பயனடைய பதிவை ஷேர் செய்யுங்கள்.
ஓம் நமசிவாய