சனிபெயர்ச்சி பலன்கள் 2017 பதிவு 2
2017 சனிபெயர்ச்சியும் நடப்பு திசா புத்தியும் பதிவு 2
உட்சிஷ்ட மஹாகணபதி துணை:
2017 சனிபெயர்ச்சி தொடர்ச்சி:
பதிவு 2
தலைப்பு:
சனிபெயர்ச்சியும் நடப்பு திசா புத்தியும்
ஜோதிட பலன் கணிப்பில் திசா புத்தி மட்றும் சாரம் 80% முதன்மை ஆகும்.
சனி பெயர்ச்சி சென்ற பதிவு ஒரு பார்வை:
சென்ற பதிவில் குரு சனி ராகு கேது போன்ற கோட்சார ( பெயர்ச்சி ) கிரகங்களை மட்டும் வைத்து பலன் கூறினால் ஜோதிடம் என்பது கடல் அல்ல, அது குட்டையை விட சிறியது என்றும், மேலும் பலன் கணிப்பில் திசா புத்தி மற்றும் சாரம் போன்றவையே 80% பலனை நிர்ணயம் செய்கிறது என்றும், மேலும் கிரக கோட்சாரம் ( பெயர்ச்சி ) போன்றவை 20% பலன் மட்டுமே நிர்ணயம் செய்கிறது என்றும், மேலும் பராசாரர் ஜோதிட முறையில் சந்திரனை வைத்து மட்டும் வைத்து கிரக கோட்சார ( பெயர்ச்சி ) பலன் நிர்ணயிப்பது நடைமுறையில் அந்த 20% கிரக கோட்சார ( பெயர்ச்சி ) பலனும் பலனளிபதிலை எனவும், நாடி ஜோதிட முறையில் அணைத்து கிரகங்களை வைத்து கோட்சார பலன் நிர்ணயம் செய்வது நடைமுறையில் ஒத்து வருகிறது எனவும், மேலும் பராசாரர் ஜோதிட முறையிலும் சனி லக்னம் பொருத்தும், லக்னாதிபதி பொருத்தும், லக்ன சுபர் அசுபர் என்பதை பொருத்தும், நடப்பு திசா புத்தி போருதுமே பலன் அந்த குறைந்த பட்ச கோட்சார பலனையும் தருவார் எனவும், மேலும் பராசாரர் ஜோதிட பரிணாமங்களும் ( கேபி முதல்நிலை கிருஷ்ணமூர்த்தி பதாதி கேபி இரண்டாம் நிலை கேபி அட்வான்ஸ் ) திசா புத்தியையே மையமாக கொண்டு ஜோதிட பலன் கனிகபடுகிறது என்றும், மேலும் கேபி கிரக கோட்சார ( பெயர்ச்சி ) முறைகள் நடப்பு புத்தி நாதனின் உப சாராதிபதி நட்சத்திரங்கள் மேல் சஞ்சாரம் செய்வதை பொருத்தும் ( நட்சத்திர முறையில் கோட்சார பலன் ) பல நடைமுறை உண்மை விசயங்களை பதிவிட்டு நடப்பு திசா புத்தி சாரம் போன்றவை தான் ஜோதிட பலன் கணிப்பில் முதன்மை என்று பதிவு வெளியிடேன்.
திசா புத்தி பலன் ( பராசாரர் முறை ஜோதிடம் )
( உதாரனம்: 12 ஆம் பாவம் பனிரெண்டாம் பாவம் பல காரகதுவன்களை கொண்டுள்ளது உதாரணத்திற்கு “ விரயம் “ காரகத்துவம் மட்டும் )
1 ) திசா அ புத்தி நாதனின் சாரநாதன் ( நட்சதிராதிபதி ) 12 ஆம் பாவத்தில் அமர்வு என்றால், விரயம் என்பது தவிர்க்க இயலாத ஒன்று. மேலும் ஜோதிட பலன் கணிப்பில் ஒரு பாவம் இயங்கும் பொழுது மற்ற 11 பாவங்களும் இயங்கும் என்பது அடிப்படை ஜோதிட பலன் கணிப்பு விதி ஆகும். அந்த விதத்தில் 12 இன திரிகொனமான 4 மற்றும் 8 ஆம் பாவங்களும் இயங்குகிறது என்பது அடிப்படை ஜோதிட பலன் கணிப்பு விதி ஆகும்.
2 ) 4 ஆம் பாவம் வண்டி வாகனங்கள், வீடு, நிலம், புலம், வீட்டு உபயோக பொருட்கள் போன்ற சொத்து பத்தை குறிக்கும். 8 ஆம் பாவம் பேங்க் லோன் அ அடுத்தவர் தனம் போன்றவற்றை குறிக்கும். இங்கு 12 பனிரெண்டாம் பாவம் இயங்குவதால் “ விரயம் + சொத்து பத்து லாஸ் + அடுத்தவரிடம் இழப்பு “ என்பது நிர்ணயிக்கபட்ட ஒன்று, மதி ( திசா புத்தி சாரம் ) வழியே மாற்று வழி காண்பதே ஜோதிடம் மற்றும் ஜோதிடர் வேலை ஆகும்
( அடுத்து கிரக சேர்க்கைகள் ( நாடி ) + பரிணாமங்கள் ( கேபி ) வரை வேண்டாம். basic பராசாரர் மற்றும் சாரநாதன் அமர்வு வரை நிற்போம் )
3) ( 4 )சொத்து பத்து வகையில் விரயம் செய்யலாம், ( 8 ) அதற்கு அடுத்தவரிடம் include பேங்க் லோன் கடன் பெறலாம், ( 12 ) வட்டி வாசி என்று கட்டி அதாவது விரயம் நிகழ்த்தி சுப செலவாக மாற்றலாம்.
4) மேற்சொன்ன பலன் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று ஆனால் சந்திரனை மட்டும் வைத்து பெயர்ச்சி பலனை நிர்ணயம் செய்யும் பராசாரர் கிரக கோட்சார முறையில் சனி இந்த ராசிக்கு இங்க வந்துடாரு ( உதாரணத்துக்கு மீன ராசின்னு வசிக்கலாம் கோட்சார சனி தனுஷு 10 தொழில் பாவத்தில் மேற்சொன்ன அமைப்பில் சாரநாதன் 12 யில் அமர்வு என்றால் பலன்? ) சனி பகவான் 10 தொழில் பாவத்தில் கோட்டு கோட்டு நு கொட்ட போகுது என்ற பலன் ( ஆனால் திசா புத்தி நாதர்களின் சாரநாதன் 12 யில் அமர்ந்து கொட்டு கொட்டுன்னு கொட்டிக்கிட்டு இருப்பார் ) மேலும் இந்த ராசிக்கு இங்க வந்துடாரு இது சுப்பர் அது சுப்பர், அந்த ராசிக்கு அசுப நிகழ்வு ஆ ஊ அதெல்லாம் கிடையாது.
விரயமென்றால் விரயம் தான், மதி வழியே மாற்று வழி பலன் அமைத்து கொள்ள வேண்டியது தான் ஒரே வழி. இந்த கோட்சார ( பெயர்ச்சி ) கான்செப்ட்ஸ் எல்லாம் சும்மா திசா புத்தி சார பலன் கணிக்க தவறியவர்களின் போலி சமாளிப்பு யுத்திக்கு பாவம் சனி பகவான் மாட்டிகிட்டார். ஜோதிடத்தில் குரு மற்றும் சனி பகவான்கள் இருவரும் அருமையான positive கிரகங்கள் ஆகும். குருவை விட சனி பகவான் அருமையான positive கிரகம் ஆகும், சில கெட்ட ஆசாமிகளாலே சனி சாமி கெட்டவர் என போலி பிரசாரம் செய்யபடுகிறார்ஆனால், சனி சாமி நல்ல சாமிதான்.
சனிபெயர்ச்சி தேவையற்ற பயத்தை தவிர்பீர். கோவிலுக்கு பக்தியோடு போகணும் பயத்தோடு போக தேவையில்லை.
ஷேர் செய்யவும் பலரும் பயன் பெறட்டும்.
குறிப்பு:
சனிபெயர்ச்சி ஜோதிட பதிவு 3 யில் மேலும் சனிபெயர்ச்சி பாரம்பரியம் கோட்சார பலனும் vs நாடி கோட்சார பலனும் அதாவது சந்திரனும் ( ராசி ) யும் vs காலபுருஷ தத்துவ ( நாடி ) மும் என்ற தலைப்பில் மேலும் விளக்கம் பெறலாம்.
பாரம்பரியம் + நாடி + கேபி நிபுணன் சி,காளிதாஸ்.
( தற்சமயம் சனிபகவான் பிரதிநிதி )
Comments are closed.