தனுசு ராசி, ராசி கட்டத்தில் ஒன்பதாவது ராசி. இதன் அதிபதி குரு பகவான்.இதன் சின்னம் பாதி மனித முகமும், பாதி குதிரை உடலும் கொண்டு, கையில் வில் அம்பை ஏந்தியிருப்பது இருப்பது இதன் சின்னமாகும் .. உங்கள் ராசியின் ராசி நாதன் குரு பகவான் என்பதால், குருபகவான் ஒரு பிராமண கிரகம் என்பதால் ,தனுசு ராசியில் பிறந்தவர்கள் யாரையும் கெடுக்க மாட்டார்கள். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர்கள்… பிறருக்கு உதவி செய்யும் குணம் கொண்டவர்கள்… வில்லிலிருந்து புறப்படும் அம்பு எப்படி இலக்கை போய் சரியாகஅடையுமோ?? அதுபோல ,இவர்கள் எடுத்த காரியத்தை முடித்து விட்டுத்தான் வேறு ஜோலி பார்ப்பார்கள்.
சுறுசுறுப்பு மிக்கவர்கள் ..குதிரையின் கம்பீரத்தை கொண்டவர்கள்.. தனது மதிப்பு மரியாதை ,அந்தஸ்துக்கு பாதிப்பு வரக் கூடிய எந்த ஒரு இழிவான செயலையும் இந்த தனுசு ராசிக்காரர்கள் செய்ய மாட்டார்கள் …இவர்களுக்கு பணம் வேண்டுமா ?புகழ் வேண்டுமா? என்று கேட்டால் புகழ் வேண்டும் என்பவர்கள் இந்த தனுசு ராசிக்காரர்கள்.
ஆன்மீக எண்ணம் கொண்டவர்கள் .. ராசிநாதன் குரு என்பதால் அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்வதில் வல்லவர்கள்.. இவரிடம் நிறைய பேர் வந்து ஆலோசனை கேட்டபடி இருப்பார்கள் .. எப்போதும் நேர்மையாக வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.. சுய கௌரவம் மிக்கவர்கள். பெரியவர்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் ஒழுக்கம் கொண்டவர்கள்..
இப்படிப்பட்ட குணங்களைக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு 24,. 1 ,.2020 அன்று நடந்த சனிப்பெயர்ச்சி என்ன மாதிரியான பலாபலன்களை செய்யப் போகுது என்று பார்த்தோமானால் இதுவரை கடந்த ஐந்து வருடங்களாக ஏழரைச் சனியால் தனுசு ராசிக்காரர்கள் படாதபாடு பட்டார்கள். 2015 ,16, 17 இந்த காலகட்டத்தில் ஏகப்பட்ட விரயங்களை பற்றாக்குறையை ஏற்படுத்தி 2017, 18, 19 இந்த காலகட்டத்தில் அதன் மூலம் கடுமையான மன அழுத்தத்தை, மன சஞ்சலத்தை தனுசு ராசியினர் அனுபவித்து வந்தனர்.
ஒவ்வொருத்தருக்கும் அவரவரின் விரலுக்கேத்த வீக்கம் இருந்தது.. குழந்தைகளுக்கு படிக்கிற வயசுல கல்வியில் தடை, முட்டுக்கட்டை, கல்வியில் ஆர்வம் இன்மை, மதிப்பெண் குறைவு போன்ற பலன்களும், 25 வயதுக்குட்பட்ட ஆண் பெண் இருபாலருக்கும், திருமணம் சார்ந்த பிரச்சனைகளையும், திருமண தாமதம் காதல் தோல்வி, போன்ற பிரச்சினைகளை கொடுத்து அதன் மூலமாக நெருக்கடிகளையும் ,மன சஞ்சலத்தையும் தந்தார்.. 30 வயதுக்கு மேல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தொழில் ,ஜீவனம் வேலை, வியாபாரம் போன்றவற்றில் பற்றாக்குறையை கொடுத்து ,கடனை ஏற்படுத்தி, அதன் மூலமாக மன அழுத்தம் மன சஞ்சலங்களை சனி தந்தார்.. வயதானவர்களுக்கு நோய் தொந்தரவுகளை கொடுத்து, அதன் மூலமாக மருத்துவ செலவை கொடுத்து, அதன் மூலமாக சேமிப்பு கரைந்து ,அதன் மூலமாக மன அழுத்தத்தை கொடுத்தார்.. ஆக மொத்தம் 2017, 18, 19 இந்த காலங்களில் கடுமையான மன அழுத்தம்.. காரணம் மட்டும் வேறு வேறு.. மன அழுத்தம் வரணும் அவ்வளவுதான்…
இதற்கெல்லாம் என்ன காரணம்?? உங்கள் ராசியில் ஜென்ம சனியாக, சனி சஞ்சாரம் செய்துவந்தார்.. மனது ,ராசி முழுவதும் இருட்டாகி விட்டது.. போதாக்குறைக்கு கேது வேறு ராசியில் இருந்தார். ராசிக்கு ஏழில் ராகு. ராசி முழுவதும் பாவ கிரகங்களால் சூழப்பட்டு சுயமுன்னேற்றம் தடைபெற்றது .எடுத்த காரியங்கள் கடும் அலைக்கழிப்பின்பேரில் நடைபெற்றது. பற்றாக்குறை ஏற்பட்டது. வருமானம் வருவதற்கு முன்னாடியே செலவு காத்துக்கொண்டு இருந்தது.. வரக்கூடிய வருமானம் எல்லாம் வட்டி கட்டவே, கடன் அடைக்கவே சரியாக இருந்தது.
இதெல்லாம் கடந்த காலம் ..எதிர்காலம் எப்படி இருக்கிறது? உங்களுக்கு ஜென்மச் சனி முடிந்துவிட்டது. அதுவே உங்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம்.. ஜென்ம சனி முடிந்து பாதசனி தொடங்கிவிட்டது ..அது போக்கு சனியாக, குடும்ப சனியாக பாதச் சனியாக மாறி பலவீனமடைந்து விட்டது.
உங்களுக்கு உங்கள் ராசிநாதனான குரு பகவான் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து நல்ல பலன்களைத் தந்து கொண்டிருக்கிறார் ராசிநாதன் ராசியில் ஆட்சி பெற்று உங்களுக்கு தன்னம்பிக்கையும் ,புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் அளித்துக் கொண்டிருக்கிறார்.. நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை இப்போது உங்களுக்கு வந்துவிட்டது .. ராசிநாதனின் ஆட்சி பலத்தால் நீங்கள் எதையும் சமாளித்து விடுவீர்கள்.
குருபகவானின் பொன்னொலி பார்வை 5, 7 ,9 போன்ற இடங்களில் விழுவதால் பணம் வந்துவிடும்.. பண வரவுகளில் தடை ஏதுமில்லை.. லட்சுமி ஸ்தானங்கள், திரிகோண ஸ்தானங்கள் வலுவாக உள்ளது. ராகு கேதுக்களும் குருவின் கட்டுப்பாட்டுக்குள் கெடுதல் செய்ய முடியாத அமைப்பில் உள்ளார்கள்..
ஜென்மத்தில் இருந்து சனி விலகி, இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பலத்துடன் சொந்த வீட்டில் வலுவாக சஞ்சாரம் செய்கிறார்.. இந்த காலங்களில் நாவடக்கம் தேவை “யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்ற தெய்வப்புலவர் வாக்கின் படி பேச்சில் நிதானம் தேவை. இல்லாவிட்டால் உங்கள் பேச்சு மாறாத,என்றுமே ஆறாத வடுவை(தழும்பை? உண்டாக்கிவிடும் உங்கள் பேச்சே உங்களுக்கு எதிரியாகும்.. ஏன்னா நாக்குல சனி அமர்ந்து உள்ளார்.. வாக்கு தவற வைப்பார். நாணயம் கெடும்..
ஆனால் இதெல்லாம் நவம்பர் மாசம் வரைக்கும் தான். அதற்கு அப்புறம் குரு பெயர்ச்சியாகி, சனியுடன் சேர்ந்து மேற்கண்ட அத்தனை விஷயங்களிலும் பலன்களை தலைகீழாக மாற்றுவார். இந்த வருடம் குருபகவான் ஆட்சி பலத்துடனும் அடுத்த வருடம் குரு பகவான் நீச்சபங்க ராஜயோக பலத்துடன் சஞ்சாரம் செய்வது ரொம்ப ரொம்ப நல்லது. உங்களுக்கு ஒரு பலம் கிடைத்துவிட்டது.
இரண்டாம் இடத்தில் உள்ள சனி எட்டாம் இடத்தை வலுவாக பார்ப்பதால், எட்டாம் இடத்தில் உள்ள கெட்ட விஷயங்கள் இனி நடக்காது ..முக்கியமாக கண்டங்கள் இருக்காது.. அவமானம் ,அசிங்கங்கள் இருக்காது. நவம்பர் மாதம் வரை தாயின் உடல்நிலையில் கவனம் தேவைப்படும்…
வருமானம் வந்தாலும் உடனுக்குடனே செலவாகிவிடும். குருபகவானின் அனுகிரகத்தால் ஏதாவது ஒரு வகையில் பணம் வந்து விடும். வருமானத்தை கொடுத்து விரையத்தை கொடுப்பார்.
இதுவரை வருமானமே இல்லாமல் விரையம் ஆகிக்கொண்டு இருந்தது.. இப்போது வருமானமும் வருகிறது விரயமும் வருகிறது.. அது ஒன்னும் பிரச்சனை இல்ல. உங்களுக்கு கஷ்ட காலம் எல்லாம் விலக போகுது …20. நவம்பர். 2020 க்கு பிறகு குருபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் வந்து மிகமிக நல்ல பலன்களை வாரி வழங்கபோகின்றார். போதாக்குறைக்கு 23 .9 .2020 இந்த காலகட்டத்தில் ராகு கேதுக்களும் பெயர்ச்சியாகி அந்த ராகு கேதுக்கள் உங்கள் ராசிக்கு 6 ,12ல் மறைந்து,” கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் “என்ற அமைப்பில் மிக மிக மேலான அருமையான யோக பலன்களை செய்ய காத்திருக்கின்றனர்.
கொடியவர்கள் 3, 6, 12 ல்மறைந்து பலனை தரவேண்டும் என்ற விதிப்படி, ராகு மற்றும் கேது உங்களுக்கு மிகமிக நல்ல பலன்களை தருவார்கள் ஒரு கெட்ட கிரகம் நமக்கு கெடுதல் பண்ண முடியாத ஒரு அமைப்பில் இருந்தாலே அது நமக்கு யோகம் தான் ..இதுவரை சர்ப்ப தோஷத்தை அளித்துவந்த ராகு கேதுக்கள் இனி அஷ்டலக்ஷ்மி யோகத்தை தருவார்கள்..
குரு பகவான் ஏழை பார்ப்பதால் இதுவரை திருமணம் ஆகாத தனுசு ராசிக்காரர்களுக்கு திருமணம் இனிதே நடந்துவிடும்.. குருபகவான் ஐந்தை பார்ப்பதால் புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைத்துவிடும்.. இதுவரை நோய் தொல்லைகளால் கஷ்டப்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு ராசிநாதனின் ஆட்சி பலத்தால் நோய் தொல்லைகள் விலகிவிடும் .பணவரவுகள் நன்றாக இருக்கும். கடன் பிரச்சனைகளை எளிதாக சமாளிக்க முடியும்.
உங்களுக்கு அலைச்சல்கள் தீரும் ..குடும்ப ஒற்றுமை ஏற்படும்.. தொழில் வியாபாரம் வேலை போன்றவற்றில் இருந்த சுணக்கங்கள் நீங்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும்.
இந்த வருடமும் அடுத்த வருடமும் குருபகவான் ஆட்சி பலம், மற்றும் “நீசபங்க ராஜயோகத்தால் பெறக்கூடிய பலத்தின் காரணமாக உங்கள் ராசிநாதன் இன்னும் இரண்டு வருடங்களுக்கு வலுவாக இருப்பதால் இந்த குடும்ப சனி, பாதச்சனி ,எனப்படும் இந்தப் போக்கு சனியை நீங்கள் எளிதாக சமாளித்து விடுவீர்கள்.எதிர்காலம் மிக நன்றாகவே உள்ளது. கடன், நோய், எதிரி, வம்பு வழக்கு எல்லாவற்றையும் உங்களால் ஈசியாக சமாளிக்க முடியும்