கன்னி ராசிக்காரர்கள் புதனை ராசிநாதனாக கொண்டவர்கள்… எனவே புதனின் குணங்கள் இவர்களுக்கும் இருக்கும்… எனவே இவர்களும் புத்திசாலிகள் …புத்தியை பயன்படுத்தி பிழைக்க கூடியவர்கள்.. இவர்களுக்கு அறிவே மூலதனம் ..இவர்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் காட்சி அளிப்பார்கள் சுருண்ட முடி உடையவர்கள்…
நகைச்சுவை உணர்வு மேலோங்கி இருக்கும் கன்னி ராசிக்காரர்கள்,, கிண்டல் கேலி நையாண்டி செய்வதிலும் வல்லவர்கள்.. இவர்கள் எல்லோரையும் அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா என்று முறை வைத்து அழைத்து மனப்பூர்வமாக பாசத்துடன் இருப்பார்கள். மிதுன ராசியில் பிறந்தவர்கள் ஒருமாதிரியானவர்கள். எப்படியும் வாழலாம் என்ற கொள்கையுடையவர்கள்…. ஆனால் கன்னி ராசியில் பிறந்தவர்கள் நேர்வழியில் நியாயமான வழியில் சம்பாதிப்பவர்கள் ஆக இருப்பார்கள்.
கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு கன்னி லக்னமாகவும் அமைந்து விட்டால்
மிக நளினமான ,அழகாக, சுருண்ட முடியுடன்,பிறரை கவர்ந்திழுக்கும் பேரழகுடன் காண்பவரை கவர்ந்து இழுப்பார்கள்.. இவர்களுக்கு பேச்சுதான் மூலதனம். . உலக விஷயங்களை தன்னுடைய விரல்நுனியில் (பிங்கர் டிப்ஸில்) வைத்திருப்பவர்கள் கன்னி ராசியினர்.. இவர்களின் விகடமான, நகைச்சுவை கலந்த பேச்சை ரசித்து கேட்பதற்காகவே பத்து பேர் இவர்கள் பின்னால் சுற்றுவார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
புகழ்பெற்ற வக்கீல்கள், ஜோதிடர்கள் பட்டிமன்ற பேச்சாளர்கள், நகைச்சுவையாளர்கள், புதனுடைய ஆதிக்கம் மிகுந்தவர்கள்.. புதன் ஜாதகத்தில் தனித்து இருக்கவேண்டும் அல்லது சுபர்களோடு சேர்ந்து இருக்கவேண்டும்..பாவிகளோடு சேர்ந்தால் தானும் பாவியாகிவிடுவார்..
இதுவரை நான்காம் இடத்தில் அர்த்தாஷ்டம சனியாக இருந்து வந்த சனிபகவான் 24…1…2020 முதல் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்திற்கு செல்ல போகின்றார்.. இதுவரை நான்காம் இடத்தில் அர்த்தாஷ்டம சனியாக இருந்து உங்களுக்கு தொல்லைகளையும், கஷ்டங்களையும் கொடுத்து வந்த சனிபகவான், இனி ஐந்தாமிடத்திற்கு மாறுவது முன்பு இருந்த நிலையை காட்டிலும் நல்ல நிலை என்றே சொல்லலாம்.
கடந்த காலங்களில் சனி நான்கில் இருந்து தாய் ஸ்தானத்தை கெடுத்தார்.சுகத்தை கெடுத்தார்.. வாகனம் ,வீடு இவைகளின் மூலமாக செலவுகளையும் நஷ்டங்களையும் தந்தார்.கடந்த இரண்டரை ஆண்டுகளாக தொழில் ஸ்தானத்தை பார்த்து தொழிலை கெடுத்தார். தொழில்,வேலை, வியாபாரம் போன்றவற்றில் அரிட்டம், துன்பம்,தொல்லை இவற்றை தந்து வந்தார்.
அதுமட்டுமின்றி உங்கள் ராசிக்கு நான்கில் இருந்து பத்தாம் பார்வையால் உங்கள் ராசியை பார்த்து தன்னம்பிக்கை இன்மை,தாழ்வு மனப்பான்மை, நோய் தொல்லை போன்றவைகளை சனி உங்களுக்கு போதும் போதுமுங்கற அளவுக்கு தந்தார். சனி பத்தாம் பார்வையால் ராசியை பார்த்து கொண்டிருந்த நேரத்தில் செவ்வாயும் கும்பத்தில் , மீனத்தில், மிதுனத்தில் இருந்து கன்னி ராசியை செவ்வாய் ,,8, 7, 4 ம் பார்வையாக பார்த்த சமயத்தில் , செவ்வாய் சனியுடன் இணைந்த காலத்தில் கன்னி ராசிக்காரர்கள் ரொம்பவும் பெரிதும் சிரமப்பட்டார் கள்.. சிலருக்கு தொழிலில் பிரச்சினை.. சிலருக்கு அந்த காலத்தில் வேலையே போய் ரொம்ப சிரமப்பட்டார்கள்..சிலர் ,வம்பு ,வழக்கு யுத்தம் என்று சனி செவ்வாய் இருவரும் ராசியை பார்த்த அந்த காலங்களில் அவர்கள் பட்ட பாடு சொல்லி மாளாது.
இப்போது சனி ஐந்தாமிடம் சென்று விடுவதால் தொழில் ஸ்தானம் சனியின் பார்வையில் இருந்து தப்பித்து விட்டது.
ராசியும் சனியின் பார்வையில் இருந்து தப்பித்து விட்டது.. இப்போது குருவின் பார்வை பத்தாம் இடத்திற்கு கிடைப்பதால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைத்து விடும்.. தொழில், வியாபாரம் போன்றவற்றில் லாபமேன்மைகளும், முன்னேற்றங்களும் கிடைத்து விடும்…உங்களுக்கு ஒரு தன்னம்பிக்கை கிடைத்து விடும்.. புதிய முயற்சிகளில், வெற்றி கிட்டும்..
ஐந்தாம் இடத்திற்கு வரும் ,ஐந்தாம் இடத்தில் ஆட்சி பெறும் சனி உங்களுக்கு என்ன மாதிரியான பலாபலன்களை தருவார்.??.. பொதுவாக சனி ஐந்தில் இருப்பதே தவறு …பாவகிரகங்கள் திரிகோணங்களுக்கு செல்லக்கூடாது.. அதுவும் ஆட்சி பெறுவது ரொம்ப ரொம்ப தவறு …பாவகிரகங்கள் ஆட்சி உச்சம் பெறக்கூடாது என்று அடிக்கடி எழுதுகிறோம் இல்லையா??
ஐந்தாம் இடத்தில் ஆட்சி பெறும் சனியால் ,உங்களுக்கு குழந்தைகள் வழியில் தொல்லைகளை தரும்…. குழந்தைகள் உங்கள் சொல்படி கேட்க மாட்டார்கள்… குழந்தைகள் படிக்கும் சமயத்தில் இந்த டாக்டர் படிப்பு, சிஏ படிப்பு ஐஏஎஸ் படிப்பு இந்த மாதிரியான படிப்பு படிக்கும் காலத்தில் குழந்தைகள் தேர்ச்சி பெறுவதில் அவர்களை காட்டிலும் நீங்கள் தான் அதிக மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்..
பொதுவாக இந்த சனிப் பெயர்ச்சியில் சிம்மம் ,விருச்சிகம் ,மீனம் ராசிக்காரர்கள் மிக மிக மிக நல்ல யோகமானபலன்களையும், ரிஷபம் ,கன்னி, மேசம் ராசிக்காரர்கள் மத்திம பலன்களையும் அடைவார்கள்…
ஆனால் நிச்சயமாக கடந்த காலத்தை விட மேலான நல்ல பலன்களை அடைவார்கள்..
ஐந்தாம் இடத்து சனியால் குலதெய்வ வழிபாடு தடைபடும்.. குழந்தைகளால் ஏதாவது மனக்கவலைகள் இருந்து கொண்டிருக்கும் …இது அடுத்த வருடம் குரு பகவான் மகரத்துக்குள் வரும் வரை இருக்கும் ..குருபகவான் மகரத்துக்குள் வந்து விட்டால் எல்லா பிரச்சனையும் சரியாகிவிடும்.. சிலருக்கு பூர்வத்தில் இருக்க முடியாது.. பூர்வீக சொத்தில் வில்லங்கங்கள் ,பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும்.. ஐந்தாமிடம் அதிர்ஷ்டத்தை பற்றி குறிப்பதால் அதிர்ஷ்ட குறைவுகளும் ஏற்படும்…
லாட்டரி சீட்டு, ஷேர் மார்க்கெட், சூதாட்டம் போன்ற விஷயங்களில் இந்த வருடம் ஒதுங்கியிருப்பது நல்லது. சனி ஐந்தாம் இடத்தில் இருந்து ஏழாம் இடத்தை பார்ப்பதால் கணவன் மனைவி யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது உத்தமம்.. இந்த பலன்கள் எல்லாம் குருபகவான் மகரத்துக்குள் வரும் வரைதான் …குரு மகர ராசிக்குள் பிரவேசித்த உடன் பணப் புழக்கம் மிக நன்றாக இருக்கும்.. குழந்தைகள் வழியில் மென்மேலும் நன்மைகளையும்,முன்னேற்றங்களை காண முடியும்.. சொந்த வீடு கனவு நனவாக கூடிய காலம் ரொம்ப பக்கத்துல தான் இருக்குது..
லாபம் மேன்மைகளை அடைய முடியும் திருமணம் போன்ற விஷயங்கள் குடும்பத்தில் சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும்.. கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும் ..கூட்டுத் தொழில் சிறக்கும்.. பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கங்கள் விலகும்.. உங்கள் மதிப்பு மரியாதை அந்தஸ்து , செல்வாக்கு உயரும்.. 2020 நவம்பர் மாதத்தில் இருந்து குருபகவானின் அருளால் சனி நல்லவராகி,, சனியும், குருவும் இருவரும் நல்ல பலன்களை தரத்தொடங்கி விடுவார்கள்.. நல்ல யோகமான, அதிர்ஷ்டமான பலன்களை அடைய இருக்கிறீர்கள்.எதிர்காலம் மிக சிறப்பாக இருக்கிறது.. அடுத்துவரும் 2020.9.23 முதல் ராகு கேதுக்களும் பெயர்ச்சியாகி கேது மூன்றில் இருந்து மிக நல்ல சகாயங்களை தரத்தொடங்கி விடுவார்கள்..
எனவே உங்களுக்கு இந்த அர்த்தாஷ்டம சனியில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைத்து விட்டது..வேலை, தொழில் வியாபாரம் போன்றவற்றில் இருந்த இடர்பாடுகளும், சங்கடங்களும் தீர்ந்துவிட்டது.பெண்களுக்கு வேலைப்பளு குறையும்.. அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் பதவிகளை பெறுவார்கள்.. விவசாயிகள் ஓரளவுக்கு மகசூலை அடைந்து முன்னேற்றங்களை அடைவர்.மாணவர்கள் நன்கு தேர்ச்சி பெறுவர். பரிகாரமாக உங்கள் ராசிநாதனான புதனை வலுப்படுத்தக்கூடிய பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள்..மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று அங்கு ஒரு இரண்டரை மணி நேரம் தங்கி விட்டு வருவது பரிகாரம் ஆகும்.. திருவெண்காடு சென்று அங்கு சூரிய சந்திர,அக்னி தீர்த்தத்தில் நீராடி அங்கும் குறைந்த பட்சம் ஒன்றரை மணி நேரம் தங்கி விட்டு வருவது பரிகாரம் ஆகும்…