சனி பெயர்ச்சி பலன்கள் 2020 - 2023 கும்பம் ராசி by ஜோதிடர் விஸ்வநாதன் | Sani Peyarchi 2020 to 2023 Kumbha Rasi by Astro Viswanathan

கும்ப ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023

நீர் நிறைந்த கும்பத்தை சின்னமாக கொண்ட கும்ப ராசி நேயர்கள், மரியாதையை ரொம்பவே எதிர்பார்ப்பவர்கள். ஏன்னா ?? அதன் சின்னம் கும்பம்.. நாம பேப்பரில பார்த்திருப்போம் பெரிய தலைவருக்கு பூரண கும்ப மரியாதை தரப்பட்டது என்று பேப்பரில், டிவியில் நாம் பார்த்திருப்போம் ..கேட்டிருப்போம். நீர் நிறைந்த கும்பம் என்பதால் இவர்கள் ரொம்பவும் அடக்கமான வர்கள்..
ரொம்பவே விஷயம் தெரிந்தவர்கள்… இவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்தால் நாம் ஏமாந்து தான் போவோம்.

“நிறைகுடம் நீர் தளும்பல் இல் “என்பது கும்ப ராசிகாரர்களுக்கு ரொம்பவே பொருந்தும்.
இவர்களுக்கு இயல்பாகவே ஜோதிடத்தில் நாட்டம் உண்டு. சனி ஆன்மிக கிரகம் என்பதால் ஆன்மீக எண்ணங்கள் மிக அதிகமாக இருக்கும்.
இவர்களுக்கு கருப்பு நிறம் ரொம்ப அதிகமாக பிடிக்கும்.. கும்பத்தின் அதிபதி சனி என்பதால் இவர்களும் கடுமையாக உழைத்து பிழைப்பார்கள்..

சனி கும்பத்துக்கு கொடுப்பதை போல கும்பத்திற்கு அவ்வளவுக்காக தரமாட்டார்.ஏன் அப்படின்னா…?கும்பத்துக்கு இரண்டாம் இடத்துக்கு ஆதிபத்தியம் பெறும் சனி, கும்பத்திற்கு பன்னிரண்டாம் இடமான விரையாதிபத்தியம் பெற்று விடுவார்.
எனவே கும்ப ராசிக்காரர்கள் மிகுந்த செலவாளிகள்…பொதுவாகவே சனியின் லக்ன, ராசியில் பிறந்தவர்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள்..
ஏன்னா சனியின் உடைய ராசி… அதுவும் பாவராசி.. (சுய ஜாதகத்தில் லக்ன ராசியுடன் சனி பாவத்தன்மை பெற்று சம்பந்தப்படும்போது இந்த பலன் மிகச்சரியாக பொருந்தும்)

கும்ப ராசிக்காரர்களின் உழைப்பு அவர்களுக்கு பயன்படாது.. அடுத்தவர்களுக்குத்தான் அதிகமாக பயன்படும். கும்ப ராசியில் பிறந்தவர்கள் இளமையில் கஷ்டப்பட்டு ,பின் கடுமையாக உழைத்து,சுய முயற்சியால் முன்னேறிவிடுவார்கள். குப்பையில் பிறந்து மத்திம வயதுக்கு மேல் உழைப்பால்,சுய முயற்சியால், கோபுரத்துக்கு உயர்வார்கள்..நல்லா கவனிங்க…. உழைப்பால்…

கும்ப ராசிக்காரர்கள் யாரையும் நம்ப மாட்டார்கள்.. தன்னையே நம்பாத இவர்கள் மற்றவர்களை எப்படி நம்புவார்கள்??? பெருந்தன்மை எல்லாம் இருக்கவே இருக்காது..கிலோ என்ன விலை என்று கேட்பார்கள்.. எல்லாவற்றிலும் சுயநலம், சுயநலம் மட்டுமே மிஞ்சியிருக்கும்.. கடவுளிடம் வேண்டும் போது கூட தான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்பவர்கள்.

இதெல்லாம் பொதுப் பலன்கள் மட்டுமே.. உங்களின் சுயஜாதகப்படி கிரகங்கள் இணைவு சேர்க்கையை பொறுத்து பலன்கள் வேறுபடும். சனி பன்னிரண்டாமிடத்தில் வருவது விரயச்சனி என்று அழைக்கப்படும். கும்ப ராசி நேயர்களுக்கு ஏழரைச் சனி தொடங்கிவிட்டது ..

வருஷாதி நூல் என்ன சொல்லுது அப்படின்னா “பன்னிரண்டு, ஒன்பது, பத்து, ஏழும்,பகரைந்து, நாலிலெட்டில் சனியனே இருந்தால்
சஞ்சலம் ,துக்கம் உண்டாகும்..முனிவனால், மூர்க்கரோடு,
மூண்டிடும் கலகத்தாலும் மனோவிசாரத்தினாலோ மறுநகரம் ஓடுவாரே”

சனி மேற்சொன்ன இடங்களில் சஞ்சாரம் செய்யும் போது குறிப்பாக பன்னிரண்டாம் பாவம், ராசி எனும் ஜென்மத்தில் சஞ்சாரம் செய்யும் போது ம் இரண்டில் சஞ்சாரம் செய்யும் போதும், ஏழரைச்சனி என்று அழைக்கப்படும் அந்த காலத்தில் சனியின் முக்கிய காரகத்துவமான கவலை எனப்படும் மனச்சஞ்சலம் இருந்தே தீரும்..

ஏழரைச்சனி காலத்தில் பகைவர் துன்பம்,கடன் துன்பம் போன்றவற்றால் தொல்லையும், தேவையில்லாத இடமாற்றம் ஏற்பட்டு அதனால் தொல்லைகளும் கஷ்டமும் கண்டிப்பாக 30 வயதுக்கு அருகில் இருப்பவர்களுக்கும், 30_முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கே சோதனைகள் அதிகமாக இருக்கும்.
40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் சுற்று எனும் பொங்குசனி என்பதால் பாதிப்புகள் அதிகம் இருக்காது..

உங்களுக்கு ஏழரைச்சனியின் கதாநாயகன் உங்கள் ராசிநாதன் என்பதால் , அவரால் பெரிய அளவில் தொல்லைகள் உங்களுக்கு இருக்காது.
உங்கள் ராசிநாதன் சனிபகவானே விரயஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் அதுவே சரராசி என்பதால் , பன்னிரண்டாம் இடம் சுபத்தன்மை அடைவதால்,
வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டு வேலை கிடைத்து விடும்.இது ரொம்ப ரொம்ப முக்கியமான பலன்..

அடுத்து உங்களுக்கு இன்னும் ஒரு பதினொன்று மாதங்களுக்கு குருபலன் இருப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியால் வரக்கூடிய பாதிப்புகள் தெரியாது.குரு பகவான் உங்களுக்கு வரக்கூடிய அத்தனை பிரச்சினைகளையும், தொல்லைகளையும் விலக்கிக்கொண்டு உள்ளார்.அதாவது சனியால் உங்களுக்கு அதிகமான விரயங்கள் இருக்கும்.. குரு பகவான் உங்களுக்கு நல்ல லாபத்தையும் ,தன வரவுகளையும் தந்து கொண்டுள்ளார்.. எனவே வருமானத்தை கொடுத்து விரயத்தையும் கொடுப்பார். வருமானமும் வரும்.விரையமும் வரும்.

ஆனால் அடுத்த வருடம் விரையம் மட்டுமே இருக்கும்.. அடுத்த வருடம் ஏழரைச்சனி யின் பாதிப்பு உங்களுக்கு தெரிய ஆரம்பிக்கும்.. இன்னும் பதினொன்று மாதங்களுக்கு திருமணம், காதுகுத்து, வளைகாப்பு, புதுவீடு கிரக பிரவேசம், போன்ற சுபகாரியங்கள் , வீட்டில் இனிதே நடைபெறும்.அதற்கெல்லாம் தடையே இல்லை.

சனிபகவானின் மூன்றாம் பார்வை இரண்டாம் இடத்திற்கு விழுவதால் வார்த்தைகளில் கவனம் தேவை. முக்கியமாக மேலதிகாரி பற்றி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது ரொம்ப ரொம்ப நல்லது.. உங்களுக்கு வீண்பழி உண்டாகும்… ஊழ்வினையின் காரணமாக செய்யாத குற்றத்திற்கு தண்டனை கிடைக்கும்.. எனவே அக்கௌன்ட் டிபார்ட்மெண்டில் இருப்பவர்கள் கணக்கு வழக்குகளில் ரொம்ப கரெக்டாக இருக்கனும்.விதிகளுக்கு உட்பட்டு, சட்டத்திற்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும்.. சட்டத்திற்கு எதிராக, விதிகளுக்கு முரணாக நடந்து கொள்ளவே கூடாது. அடுத்த வருடம் நீங்கள் ரொம்ப ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..

யார் என்ன சொன்னாலும் இந்த காதில வாங்கி இந்த காதில விட்றோனும்..வாயை ஊமையாக வைத்து கொள்ள வேண்டும்..ஆறாமிடத்தை சனி பார்ப்பதால் நோய் தொல்லைகள் இருக்காது.ஆனால் கடன் இருக்கும்.
அதிகமான விரையங்களை கொடுத்து அதன் மூலம் பற்றாக்குறையை ஏற்படுத்தி அதன் மூலமாக கடனை தருவார்.. எனவே பட்ஜெட் போட்டு, வருமானத்துக்குள் செலவு செய்து செய்து கடன் பிரச்சினையை தவிர்த்துக் கொள்ளலாம்..

எல்லா வேலைகளிலும் தடங்கல் இருக்கும். கடுமையான இழுபறிக்கு பின்னரே அந்த வேலை நடந்து முடியும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மாணவர்கள் திரும்பத் திரும்பப் படித்து மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும் ..படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.. கும்ப ராசியை சேர்ந்த குழந்தைகளுக்கு குறும்பு,சேட்டை, பிடிவாதம் இந்த காலகட்டத்தில் அதிகமாக இருக்கும்.

விவசாயிகளுக்கு இந்த வருடம் நல்ல மகசூல், தண்ணீர் வசதி அனைத்தும் கிடைத்து மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
அரசியல்வாதிகள் இந்த வருடம் முழுவதும் வட்டம், மாவட்டம்,எம்.எல்.ஏ ,,
எம்.பி. மந்திரி போன்ற முக்கிய பதவிகளை அடைவார்கள்… ஆனால் அடுத்த வருடம் முதல் சரிவுகள் ஆரம்பிக்கும். ஏழரைச்சனி காலத்தில் புதிய தொழில் முயற்சிகளோ, வியாபாரத்தை விரிவுபடுத்துவது, அதிகமாக மூலதனம் போட்டு தொழில் செய்வது போன்றவற்றை அறவே தவிர்ப்பது நல்லது..இருப்பதையாவது காப்பாற்றி கொள்ள முடியும்..
அடுத்தவர்களுக்கு ஜாமீன் போடுவது, வாக்குறுதி அளிப்பது போன்றவற்றை முடிந்த அளவு தவிர்த்து கொள்ள வேண்டும்.. வியாபாரத்தில் இப்போது உள்ள நிலையையே தொடர்ந்து செய்து வர உத்தமம்.. இக்காலத்தில் யாரையும் நம்ப வேண்டாம்… விலையுயர்ந்த பொருட்களை ரொம்ப கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.. திருட்டு போகும்.. அடுத்த வருடம் முதல் மது,, மாது போன்ற கெட்ட பழக்கங்கள் வந்துசேரும் என்பதால், கெட்ட நண்பர்கள் சேர்க்கை வரும் என்பதாலும் அதன் மூலமாக, அந்த நண்பர்கள் மூலமாக எதிர்காலத்தில் தொல்லைகள் இருக்கும் என்பதால் ரொம்ப கவனமாக இருப்பது ரொம்ப முக்கியம்…

பொதுவாக இந்த கோட்சார பலனையும், தசாபுத்தி பலனையும் இணைத்து தான் பலன் சொல்ல முடியும்.. உங்களுக்கு தசாபுத்தி அமைப்புக்கள் மிக நன்றாக இருந்தால் கோட்சார அமைப்புக்கள் பெரிய கெடுதல்களை செய்யாது. தசாபுத்தி அமைப்புக்கள் மோசமாக இருந்து கோட்சாரம் நன்றாக இருந்தால் கெடுபலன்கள் குறைத்து நடக்கும்.சமாளித்து கொள்ளலாம்.
இரண்டும் மிக மோசமாக இருந்தால் கெடுபலன்கள் அதிகமாக இருக்கும்..

உதாரணமாக குருபகவான் கோட்சாரத்தில் வலுவாக நான்காம் இடத்தைப் பார்ப்பதாக வைத்து கொள்வோம்.தசாபுக்தி அமைப்பில் சுக்கிரன் தசை, புக்தி அல்லது நான்காம் இடம், நான்காம் அதிபதியோடு சம்பந்தப்பட்ட தசாபுத்திகள் நடக்கும் போது வீடு கட்ட கூடிய யோகம் உண்டாகும்.. அந்த குருபகவான் பார்க்க கூடிய ஒரு வருட காலத்தில் அந்தவீடு எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் சீக்கிரத்தில் கட்டி முடிக்கப்படும். இப்படித்தான் கோட்சார பலனையும், தசாபுத்தி பலனையும் இணைத்து பலன் சொல்ல வேண்டும்

அடுத்த வருடம் முதல் ஏழரைச்சனியின் பாதிப்பு உங்களுக்கு தெரிய ஆரம்பிக்கும்.. இன்னும் ஒரு பத்து மாதங்களுக்கு குரு பலத்தால் வரக்கூடிய அத்துணை பிரச்சினைகளையும் சமாளித்து விடுவீர்கள்..பேராசைப்படாமல், அகலக்கால் வைக்காமல் , விதிகளுக்கு உட்பட்டு நடந்தால், நேர்மையாக நடந்தால் இந்த ஏழரைச்சனியால் உங்களுக்கு பெரிய தொல்லைகள் எதுவும் இருக்காது..

Blog at WordPress.com.

%d