சனி பெயர்ச்சி பலன்கள் 2020 - 2023 மேஷம் ராசி by ஜோதிடர் விஸ்வநாதன் | Sani Peyarchi 2020 to 2023 Mesham Rasi by Astro Viswanathan

மேஷம் ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023

வேகமும் ,சுறுசுறுப்பும், நேரம் தவறாமையும் ,கடமையே கண்ணாக கொண்ட மேஷ ராசி நேயர்களே உங்களுக்கு இதுவரையிலும் ஒன்பதாம் இடத்தில் இருந்து வந்த சனி பகவான் இந்த வருடம் 24 1 2020 அன்று உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

இது வரையிலும் உங்கள் ராசிக்கு 9-ம் இடமான தனுசு ராசியில் சாதகமற்ற பலன்களை தந்து வந்த சனீஸ்வர பகவான் இந்த வருடம் முதல் அவருடைய சொந்த ராசியான மகர ராசியில் ஆட்சி பலம் பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளார்..

பொதுவாக சொந்த வீட்டில் உள்ள சனிபகவான் ஆட்சி பலம் பெறுவது உங்களுக்கு ஒரு பலம்ஆகும்.. மேஷ ராசிக்கு சனி 10, 11 ம் பாவகங்களுக்கு ஆதிபத்தியம் பெறுவார் ..3, 6, 10, 11 பாவங்கள் உபஜெய ஸ்தானத்தில் வரும் .. ஒரு உப ஜெய ஸ்தானாதிபதி ,இன்னொரு உபஜெய ஸ்தானத்தில் இருப்பது யோகமாகும்.

அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு அதாவது மேஷ ராசியினருக்கு இந்த வருடம் முழுவதும் “தர்மகர்மாதிபதி யோகம் “என்ற ஒரு யோகம் செயல்பட இருக்கிறது.. ஒன்பதுக்கு உடையவன் ஒன்பதிலும் , பத்துக்குடையவன் பத்திலும் ஆட்சி பெற்றிருப்பது தர்மகர்மாதிபதி யோகம் ஆகும் …

நவம்பர் 5 ஆம் தேதியிலிருந்து குரு பகவான் உங்களுடைய ராசிக்கு ஒன்பதில் ஆட்சி பெற்று பாக்கியாதிபதி பாக்கியத்தில் இருக்கிறார்.. இன்னும் பத்து தினங்களில் பத்துக்குடையவனான சனீஸ்வர பகவானும் பத்தாம் இடத்தில் ஆட்சி பலம் பெறுவது உங்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாகும்.

பாக்யாதிபதி குருபகவான் ஒன்பதில் ஆட்சி பெற்று உங்கள் ராசியை மன்னவன் ,பொன்னவன் என்று வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பது உங்களுக்கு ஒரு பலம் கிடைத்து விடுகிறது.. உங்களுக்கு ஒரு சுய பலத்தை குருபகவான் தந்துவிடுகிறார். உங்களுக்கு ஒரு வெயிட் கெடைச்சு போச்சு..

குருபகவான் ஒன்பதாம் இடத்தில் மூலத்திரிகோண அமைப்பில் இருந்து, ஐந்தாம் இடத்தை வலுவாக பார்த்து, ஒன்று,ஐந்து, ஒன்பது போன்ற திரிகோண ஸ்தானங்கள் வலுப்பெறுவதால் உங்களுக்கு இந்த வருடம் முழுவதும் தன விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.. பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும்.. தேவைக்கு உங்களுக்கு பணம் கிடைத்து விடும்.. பணம் பல வழிகளில் வந்து உங்கள் பையை நிரப்பும்…

தர்மகர்மாதிபதி யோகம் உங்களை சமுதாயத்தில்பெரிய அந்தஸ்தில் உயர்த்தும் …உங்களுக்கு சமுதாயத்தில் மதிப்பு மரியாதை அந்தஸ்து கௌரவம் அனைத்தும் கிடைக்கும்… நீங்கள் சமூக சேவையில் ஈடுபட்டு உங்களுக்கு பேரும் புகழும் கிடைக்கும்.. தர்மகர்மாதிபதி யோகம் நல்ல செல்வாக்குடன் பேரும் புகழையும் பெற்றுத் தரும்..

உங்களுக்கு ஒரு தன்னம்பிக்கை ஏற்படும் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள்.. தெய்வ அனுகூலம் உண்டாகும்.. ஒருசிலருக்கு திடீரென்று ஆன்மீகத்தில் பெரிதும் ஆர்வம் ஈடுபட்டு தெய்வ காரியங்கள் ஆன்மீக பயணங்கள், கோவில் கட்டுவது போன்ற திருப்பணிகள் போன்ற காரியங்களளை செய்ய வைக்கும். அதுவும் பாதையாத்திரை செல்வதில் உங்களுக்கு ஆர்வம் ஏற்படும் ..ஏன் என்றால் சனி நான்கை பார்ப்பதால் பாதயாத்திரையாக கால்நடையாக சென்று தெய்வ தரிசனம் செய்ய ஆர்வம் ஏற்படும்..

இந்த வருடம் ராகு-கேது க்களும் உங்களுடைய ராசிக்கு 3 ,9 போன்ற சாதகமான, சகாய பாக்கியஸ்தானத்தில், சஞ்சாரம் செய்வது உங்களுக்கு யோக பலனைக் விருத்தி செய்யக்கூடிய நல்ல அமைப்பாகும். ராகு கேதுக்கள் 23.9 .2020 வரை உங்களுடைய ராசிக்கு சகாய பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதும் ஒரு நல்ல அமைப்பாகும்..

மேஷ ராசியினருக்கு ஏழரைச்சனி, அஷ்டமச்சனி ,போன்ற சாதகமற்ற அமைப்புகள் இன்னும் ஐந்து வருடங்களுக்கு இல்லாதபடியாகையால் இன்னும் ஒரு ஐந்து வருடங்களுக்கு நீங்கள், அதாவது மேஷ ராசியினர் நன்றாகவே இருப்பீர்கள்.

அடுத்த வருடமும் உங்களுக்கு “தர்மகர்மாதிபதி யோகம்” செயல்பட இருக்கிறது.. எப்படி என்று கேட்டால் அடுத்த வருடம் குரு மகரத்துக்குள் வந்துவிடுவார் …ஒன்பதுக்குரியவரும் பத்துக்குரியவரும் மகரத்தில் ஒன்றாக இணைந்து தர்மகர்மாதிபதி யோகம் என்ற மிகச்சிறப்பான யோகத்தை , முதல் தரமான யோகத்தை தருவார்கள்…

அடுத்த வருடம் குரு மகரத்தில் வந்து நீசம் பெற்று விடுவார்.. அங்கு ஏற்கனவே சனீஸ்வர பகவான் ஆட்சி பலம் பெற்று பலமாக சஞ்சரிக்கிறார் ‌.எனவே குருபகவானுக்கு” நீசபங்க ராஜயோகம்” என்ற பெரிய யோகம் ஏற்படுகிறது நீசபங்க ராஜயோகம் என்ற அமைப்பால் பாக்கியஸ்தானம் மிக அதிக வலுப்பெற்று மிகப்பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகளும் குழந்தை பாக்கியம் செல்வ செழிப்பும் ஆன்மீக முன்னேற்றங்களும் தெய்வ அனுகூலமும் தாய்-தந்தை உதவிகளும் அரசாங்க உதவியும் பெரிய மனிதனுடைய சப்போர்ட்டும் உங்களுக்கு கிடைக்கப் பெறும் அரசியல்வாதிகள் மிக மேலான பதவியை அடைவார்கள் மாணவர்கள் நன்கு படித்து தேர்ச்சி பெறுவர்

விவசாயிகள் நல்ல மகசூலை அடைவார்கள் ..குழந்தைகளால் உங்களுக்கு முன்னேற்றமும் ,பேரும் புகழும் கிடைக்கப்பெறும்.. குழந்தைகளைப் பற்றிய நல்ல செய்திகள் உங்களுக்கு கிடைக்கப்பெறும். சிலருக்கு ஆண் குழந்தை யோகமும், பணி செய்யும் இடங்களில் சம்பள உயர்வு, பதவி உயர்வும், விரும்பிய இடங்களுக்கு இடமாற்றமும், அந்த மாற்றத்தினால் நல்ல முன்னேற்றமும் மேஷ ராசியினருக்கு கிடைக்கப் பெறும்..

மேஷ ராசியினருக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும் ..சுபகாரியங்கள் உண்டாகும்.. பெரிய மனிதர்களுடைய, தொடர்பும் , நட்பும், சப்போர்ட்டும் கிடைக்கப்பெறும் ..திருமணம் ஆகாத ஆண் பெண் இருபாலருக்கும் திருமணம் இனிதே நடைபெறும் ..திருமணம் ஆன தம்பதிகளுக்கு வளைகாப்பு என்னும் சீர் நடைபெறும்… ஆண் குழந்தை எனும் புத்திர பாக்கியம் ஏற்படும்… குரு பலத்தால் ,சனி பலத்தால், ராகு கேது பலத்தால் கல்யாணம், காதுகுத்து, சீமந்தம், வளைகாப்பு போன்ற சுபகாரியங்கள் வீட்டில் அடுத்தடுத்து நடைபெறும்.

ஒரு சிலருக்கு சனி பத்தாம் இடத்தில் ஆட்சி பலம் பெறுவதால் வேலையில் அலைச்சல், அலைக்கழிப்புகள் கண்டிப்பாக இருக்கும்.. இருந்தாலும் உங்களுக்கு திரிகோண ஸ்தானங்கள் வலுவாக இருப்பதாலும் ,குரு ஆட்சி பெற்று இருப்பதாலும் ,பாக்கியாதிபதி பாக்கியத்திலும் இருப்பதால் உங்களால் எதையும் சமாளிக்க முடியும் .. என்பதால் வேலை இல்லாதவர்களுக்கு எப்படியும் வேலை கிடைத்து விடும். வேலையில் மட்டும் அலைச்சல் அலைக்கழிப்புக்கள்… நிச்சயம் இருந்தே தீரும்..

சனி பத்தாம் இடத்தில் இருந்து நான்கை பார்ப்பதால் ,தாயாருக்கு சில அசௌகரியங்கள் இருக்கும் ..தாயாருக்கு தொல்லைகள் இருக்கும் ..வண்டி வாகன வகையில் செலவுகள் இருக்கும் ..ஆடு மாடு போன்ற நாலுகால் பொருள்கள் லாபத்தை தராது..

சனி 10 இல் ஆட்சிபெற்று பன்னிரண்டாம் பாவத்தை வலுவாக பார்ப்பதால், விரயங்கள் இருக்காது.தெண்டச்செலவுகள் இருக்காது.. உபரிப்பணம் மிச்சமாகும். சேமிக்க முடியும்.. சனி வலுவாக ஏழாம் இடத்தை பார்த்து விடுவதால் கணவன் மனைவி இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்துச் செல்ல கணவன் மனைவி உறவு பலப்படும்.

பொதுவாகச் சொல்லப் போனால் இன்னும் ஒரு 5 வருட காலங்களுக்கு மேஷ ராசியினருக்கு நல்ல காலம் என்றே சொல்லலாம்… தசாபுக்தி சரியில்லாத காலமாக இருந்தால் மேற்சொன்ன பலன்கள் குறையலாம்.. தசா புத்தியும், லக்னத்துக்கு ராசிக்கு யோகமான ,லக்னாதிபதிக்கு நண்பர்களின் தசை நடக்கும்போது மேற்சொன்ன பலன்கள் இன்னும் கூடுதலாக நடக்கும்.. தசை புத்தி சரியில்லாத போதும் நீங்கள் ரொம்ப கீழே வந்து வந்து விட மாட்டீர்கள்.கெட்டு போக மாட்டீர்கள்.. மேற்சொன்ன கோட்சார அமைப்பின் படியும் நீங்கள் நன்றாகவே இருப்பீர்கள்..

Blog at WordPress.com.

%d bloggers like this: