சனி பெயர்ச்சி பலன்கள் 2020 - 2023 மிதுன ராசி by ஜோதிடர் விஸ்வநாதன் | Sani Peyarchi 2020 to 2023 Mithuna Rasi by Astro Viswanathan

மிதுனம் ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023

கால புருஷனின் மூன்றாவது ராசி, மிதுன ராசி… மிதுன ராசியில் பிறந்தவர்கள் அதிக புத்திசாலிகள்… கொஞ்சம் கபட எண்ணமுள்ள மிதுன ராசியினர் எப்படியும் பிழைத்துக் கொள்வார்கள்… குறுக்குவழி எத்தனை இருக்கிறதோ அத்தனையும் இந்த மிதுனராசிக்காரர்களுக்கு அத்துப்படி… நாய் விற்ற காசு குறைக்காது, பூ விற்ற காசு மணக்காது ..கருவாடு விற்ற காசு நாறாது என்பது இவர்களுடைய கொள்கை… வாய் திறமையுள்ள வாய்ஜாலம் உள்ள இவர்கள் எப்படியும் பிழைத்துக் கொள்வார்கள்… இவர்கள் மூளை பலம் உள்ளவர்கள் …மூளையை பயன்படுத்தி அறிவை பயன்படுத்தி தனது நுட்பமான அறிவை பயன்படுத்தி, வாழ்க்கையில் எப்படியும் முன்னேறி விடுவார்கள்…. புத்தி சாதுரியம் உள்ள மதிநுட்பம் உள்ள இவர்கள் எந்த ஒரு விஷயத்திலும்,ரொம்ப முன் எச்சரிக்கையுடன் செயல்படுவார்கள் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அந்த பிரச்சனையில் இருந்து சர்வசாதாரணமாக தன்னுடைய அறிவை, புத்தியைப் பயன்படுத்தி அந்த பிரச்சனையிலிருந்து மீண்டு வந்து விடுவார்கள்.

இதுவரை உங்களது ராசிக்கு ஏழாமிடத்தில் கண்டகச் சனியாக இருந்த வந்த சனி பகவான், உங்கள் ராசியை பார்த்து, உங்களுக்கு ஒரு தன்னம்பிக்கை குறைவை, ஒரு முன்னேற்றக் குறைவை , கணவன் மனைவி அன்னியோன்ய குறைவை, எல்லாவற்றிலும் ஒரு தடை தாமதம் ,முட்டுக்கட்டைகள் இவற்றையெல்லாம் சனீஸ்வர பகவான் 7-ல் இருந்து உங்களுக்கு தந்து கொண்டிருந்தார் …

போதாக்குறைக்கு ஒன்று ,ஏழில் ராகு மற்றும் கேதுக்களும் வீற்றிருந்து உங்களுக்கு எல்லாவற்றிலும் தடைகளை தந்து கொண்டிருந்தார்.. முக்கியமாக திருமணம், வேலை தொழில் போன்றவற்றில் நிறைய முட்டுக்கட்டைகள் இருந்து வந்தது..நிறைய பிரேக்.. சனி, ராகு-கேதுக்கள் ராசியோடு சம்பந்தப்பட்டு உங்கள் முன்னேற்றத்துக்கு, ஒரு கேட் போட்டு வைத்திருந்தார்கள்.. உங்கள் ராசியை ராகு எனும் இருட்டு கிரகம் முழுவதும் ஆக்கிரமித்து இருந்தது… போதாக்குறைக்கு சனியின் பார்வையும் உங்கள் ராசிக்கு இருந்தது…

ஆண் பெண் இருபாலருக்கும் திருமணம் தாமதமாகிக் கொண்டிருந்தது… மிதுன ராசியை சேர்ந்த கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் குறைவாக இருந்தது.. குடும்பத்தில் வம்பு ,வழக்கு ,பஞ்சாயத்து பிரச்சனை ,பிரிவு போன்ற பலன்களை ஏழில் இருந்த இருள் கிரகமான சனியும் , இன்னொருஇருள் கிரகமான ராகுவும் தந்தனர்.

இந்த நிலை எல்லாம் இன்னும் ஒரு வாரத்தில் நீங்க இருக்கிறது. 24 .1 . 2020 அன்று சனி உங்கள் ராசிக்கு ஏழில் இருந்து எட்டாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.. அதுமட்டுமல்லாமல் இந்த வருட இறுதியில் ராகு மற்றும் கேதுக் களும் பெயர்ச்சி அடைகிறார்கள்.. எனவே உங்களுக்கு இனி எல்லாமே வசந்த காலம் தான்..

உங்கள் ராசிக்கு நவம்பர் மாதத்தில் இருந்து குருவின் பொன்னொலி பார்வையும் உங்கள் ராசி மீது விழுந்து கொண்டிருக்கிறது.. எனவே உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள் சுறுசுறுப்பு அதிகரிக்கும்..சுறுசுறுப்புடன் எடுத்த காரியத்தை எளிதாக , ஈசியாக டக்,டக்னு முடித்து விடுவீர்கள்.

உங்கள் ராசியை குரு பகவான் ஆட்சி மூலத்திரிகோணத்துடன் மிக வலுவாக பார்த்துக்கொண்டிருக்கிறார்..குருபதி ஏழில் நிற்க ,புனிதன், கீர்த்தி என்று சொல்லு. குருவின் பார்வையால் திருமணம் ஆகாத ஆண் பெண் இருபாலருக்கும் திருமணம் நடந்துவிடும்.. புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைத்துவிடும் .. குருவின் பார்வையால் பணம் நன்றாக வரும்.. லட்சுமி கடாட்சம் உண்டாகும்.. பொருளாதார முன்னேற்றங்கள் அபிவிருத்தி அடையும்.. பெரிய மனிதர்கள் சப்போர்ட், பணம் படைத்தவர்கள் சப்போர்ட், வங்கி அதிகாரிகள் சப்போர்ட் மற்றும் உதவிகள் கிடைக்கும்.. அரசு உதவி கிடைக்கும்.

அடுத்த சனி எட்டில் வருவதால் அந்த சனியே மிதுனராசிக்காரர்களுக்கு பாக்கியாதிபதியாக இருப்பதால் சனி அஷ்டம ,பாக்கியாதிபதியாக இருப்பதால் அவர் எட்டாம் இடமான தூரதேசம் என்று சொல்லபடக்கூடிய, பரதேசவாதம் என்று சொல்லப்படக்கூடிய ,எட்டாம் இடத்தில் இருப்பதால் , அதுவும் சர ராசியான மகரமாக இருப்பதால், மிதுனராசிக்காரர்களுக்கு சுய ஜாதகம் கொஞ்சம் சப்போர்ட் பண்ணும் பட்சத்தில் மிதுன ராசியினர், வெளிநாடு சென்று லட்சக்கணக்கில் சம்பாதிக்க வைக்கும் இந்த அஷ்டமசனி.. இது ஒரு மிக மிக முக்கியமான பலன் ஆகும்.

ஏழரைச்சனி, அஷ்டமச் சனி நடக்கும் காலத்தில் வெளியூர், வெளிநாடு வெளிமாநிலம் சென்றால் சனி அங்கு அவர்களை ரொம்ப பாதுகாப்பாக வைத்திருக்கும் என்பது ஒரு பொது விதி.
வெளிநாட்டில் இருப்பவர்களை ஏழரைச்சனி, அஷ்டமச்சனி பெரிய அளவில் பாதிப்பதில்லை என்பது அனுபவ பூர்வமான உண்மையும் கூட.

அஷ்டமச் சனி காலத்தில்,, ஜென்ம சனி எத்தகைய பலன்களை வழங்குமோ அத்தகைய பலன்களைத் தான் அஷ்டமச்சனியும் செய்யும் என்பது இன்னும் ஒரு பொது விதி.. இந்தப் பொது விதியின்படி உங்களுக்கு கடுமையான மன குழப்பம் ,மன அழுத்தம் தர வேண்டுமென்று விதி இருப்பதால், உங்களுடைய சுற்றத்தார் அதாவது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், சகோதர சகோதரிகள் இவர்கள் மூலமாக பிரச்சனைகளை ஏற்படுத்தி ,தொல்லைகளை ஏற்படுத்தி, அதன் மூலமாக, அவர்கள் மூலமாக, உங்களுக்கு மன வருத்தத்தை இந்த அஷ்டமத்து சனி தருவார். இன்னும் புரியும்படி சொல்லப்போனால் பிரச்னைகளை தொல்லைகளை, உங்களுக்கு தர மாட்டார்.. நீங்கள் யாரை ரொம்ப நேசிக்கிறீர்களோ, யாரை உங்களுக்கு ரொம்ப பிடிக்குமோ அவர்களை சனி பாதித்து, அவர்கள் மூலமாக உங்களுக்கு பிரச்சனைகளை தருவார். ஏன்னா சனி உங்களுக்கு பாக்கியாதிபதி என்பதாலும் உங்கள் ராசிக்கு, உங்கள் ராசிநாதனான புதனுக்கு அவர் நண்பர் என்பதால் உங்களை நேரடியாக பாதிக்கமாட்டார்.

பெண்கள் என்றால், முக்கியமாக மிதுன ராசி பெண்கள் என்றால் அவர்களின் கணவர் ,மற்றும் குழந்தைகளை அஷ்டமச் சனி காலத்தில் பாதிக்கச் செய்து அதன் மூலமாக ,அவர்களை மனக்குழப்பத்தை ,தாங்க முடியாத மன அழுத்தத்தைஉண்டாக்குவார். படிக்கிற வயதில் உள்ள மிதுன ராசி குழந்தைகள் அனைவரும் நன்கு கவனமாகபடிக்க வேண்டும் ..படிக்கிற விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் ..

டீன் ஏஜ் வயது கல்லூரி பருவத்தில் இருக்கும் பருவ மங்கையர், நட்பு விஷயத்தில், குறிப்பாக ஆண் நண்பர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக பழக, பேச வேண்டும்.. சில மோசமான ஆண் நண்பர்களால் உங்களுக்கு எதிர்காலத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம் ..கவனம்.. இந்த மாதிரியான காலகட்டத்தில் காதல் மாதிரியான விஷயங்களில் ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.. இது இருபாலருக்கும் பொருந்தும்.

அரசியல்வாதிகள் இந்த அஷ்டம சனி காலத்தில் வெற்றி வாய்ப்பை இழப்பார்கள்.. அஷ்டம சனி காலத்தில் தங்களுடைய பெயர் புகழுக்கு பாதிப்பு ஏற்படும் ..எனவே அத்தனை தரப்பினரும் நேர்மையாக இருப்பது ரொம்ப ரொம்ப முக்கியம். சனி ஒரேசமயத்தில் தொழில் ஸ்தானத்தையும், தனம் ஸ்தானத்தையும் பார்ப்பதால், தொழில் இல்லாமல் ,வேலை இல்லாமல் கஷ்டப்பட வேண்டி வரும் என்பதால் நீங்கள் எக்காரணம் கொண்டும் வேலையை மட்டும் விட்டு விடக் கூடாது.

சனி எட்டில் இருந்து தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால், வேலை செய்யுமிடத்தில் மேலதிகாரியை அனுசரித்து செல்ல முடியாது.. விரும்பாத இடங்களுக்கு பணியிட மாற்றம், மேலதிகாரி டார்ச்சர், வேலைப்பளு ,அலைக்கழிப்பு, அலைச்சல் என அனைத்தும் இருக்கும்..

சனிபகவான் ஏழாம் பார்வையாக 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் ஒருசிலருக்கு குடும்பத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்.. ஆனால் சனி யோகாதிபதியாக இருப்பதால் சுப பிரிவாக இருக்கும்.. தொழிலுக்காக, வேலை விஷயமாக, படிப்பதற்காக குடும்பத்தை விட்டு பிரிய வைப்பார். சிலருக்குப் குடும்பத்தை நல்ல முறையில் அமைத்துக் கொடுத்து விட்டு பொருளாதார பிரச்சினைகளை கொடுப்பார்.. அதாவது குடும்பம் நன்றாக இருந்தால், பொருளாதார பிரச்சனைகள் இருக்கும் ..பொருளாதாரம் நன்றாக இருந்தால் குடும்பத்தில் பிரச்சனை இருக்கும். ஏதாவது ஒன்று கண்டிப்பாக இருக்கும்.

சனி ஐந்தாம் இடத்தை பார்ப்பதால் சிலருக்கு அவமானம், அசிங்கம், கேவலம் , அதாவது பூர்வத்தில் இருக்க முடியாதுங்கற மாதிரியான பிரச்சனைகள், பூர்வீக சொத்தில் பிரச்சனைகள், பூர்வீக சொத்தில் வில்லங்கம் மற்றும் தொல்லைகள், பங்காளி பிரச்சனைகள், அதன் மூலமாக வம்பு, வழக்கு இந்த பிரச்சனைகளை, சனி எட்டில் இருந்து பத்தாம் பார்வையாக ஐந்தாம் இடத்தை பார்த்து மேற்கண்ட பிரச்னைகளை தருவார்.

பரிகாரமாக திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கிவிட்டு சனியை பார்க்காமல் வந்துவிடுங்கள். அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் பெருமானுக்கு உங்கள் கைகளால் துளசி மாலை தொடுத்து, அவருக்கு அணிவித்து 2 நெய் விளக்கு ,தாமரை தண்டு திரியில் போட்டு வர பரிகாரம் ஆகும்.. பைரவருக்கு சனிக் கிழமை சனிக்கிழமை சிவப்பு கலரில் மாலை அணிவித்து ,சிவப்பு கலரில் பட்டு அணிவித்து, இரண்டு நெய் விளக்கு போட்டு வர பரிகாரமாகும். பட்டு ஒரு வாரம் ஒரு சனிக்கிழமை ஒரு நாள் போட்டால் போதும்.. நெய் விளக்கு 19 வாரம் ஆஞ்சநேயருக்கும்,பபைரவருக்கும் போட்டுவர அஷ்டம சனியை நீங்கள் சமாளிக்க முடியும். குரு பார்வையால் குரு பலத்தாலும் நீங்கள் அஷ்டமசனியை எளிதாக சமாளித்து விடுவீர்கள்..

Blog at WordPress.com.

%d