சனி பெயர்ச்சி பலன்கள் 2020 - 2023 கும்பம் ராசி 7 1/2யில் பாதசனி விரைய சனி | Sani Peyarchi 2020 Kumbha Rasi

சனிபெயர்ச்சி கும்பம் ராசி 2020 – 2023

சனி உங்கள் ராசிக்கு 12ம் இடத்தில் ஆட்சி பெற்று 2, 6, 9 ஆகிய இடங்களை பார்வை மூலம் பார்த்து பலனை தருவார்.

சனி தான் உங்கள் ராசிக்கு அதிபதி, இனி நீங்கள் அதிக தூரம் நடக்கவோ, அதிக நேரம் நிற்கவோ நேரிடும், கால் வலி கூடும் (பாத சனி). ஒரு வழியாக #லாப சனி முடிந்து தற்போது #விரைய(பாத)சனி என்ற காலத்தில் இருக்க போகிறீர்கள்.

சனி மேலும் உங்கள் ராசிக்கு #உங்கள் எதிர் தன்மையுள்ள சூரியனின் நட்சத்திரமான #உத்திராடத்தில் (22-01-2021) ஒரு ஆண்டு நகர்வு இருக்கும்.

கடந்த காலங்களில் லாப சனியாக இருந்தாலும் எதையும் பெரிதாக சேர்க்க இயலவில்லை.

தற்போது சனி விரையம் வருவதால் பலருக்கும் இட மாற்றம், வேலை மாற்றம், இருக்கும் இடத்தில் இருந்து தலைமறைவு வாழ்க்கை என காலம் நகரும்.

தற்போது சனி பெயர்ச்சி பிறகு #செலவு என்ற ஒன்று நடக்குமாயின் மற்றவர்கள் சொல்லி நடப்பதை விட நீங்களே உங்களுக்கு செலவுகளை ஏற்படுத்தி விடுவீர்கள்.

22-1-2021 வரை வாழ்க்கை துணை விஷயத்தில் ஏட்டிக்கு×போட்டியான நிலை வரும். எப்படி.

நீங்கள் தேவையற்ற செலவு செய்வதன் மூலம் பிரச்சினை உருவாகும். அடுத்து சிறு பிரச்சினைக்காக இருவரும் சன்டையிட்டு பெரியளவில் மாற்றுவீர்கள்.

அவர் சும்மா இருந்தால் நீங்கள் சும்மா இருக்க விடமாட்டீர்கள், நீங்கள் பொறுத்து போனால் அவர் ஏதாவது பேசி சன்டை வளர்க்க ஆரம்பித்து விடுவார்.

நன்பர்களை நம்ப வேண்டாம், பழகியவர் போக போக பகையாக தெரிவார்.

ஜாமின் யாருக்கும் கூடாது, வாக்குறுதி யாருக்கும் தர தேவையில்லை, நிறைவேற்ற இயலாது, அப்படியே நடந்தாலும் இழுபறியாகி உங்களுக்கு ஒன்றும் கிடைக்காது.

தற்போது இருப்பதை எதையும் மாற்ற கூடாது.

அப்படி மாற்றி தான் ஆக வேண்டும் எனில், நீங்களாக #விரைய சனி வந்து விட்டது செலவு உண்டு அது #சுப செலவாக இருக்கட்டுமே என்று நீங்களே முடிவு செய்து வாங்கவோ, மாற்ற கூடாது. எனவே,

நான் என்ன சொல்கிறேன். எப்படியும் விரைய செலவு உண்டு அது எப்படி இருக்கட்டும் என்றால்.

உங்கள் #சுய ஜாதகத்தில் தற்போது வாகனம் வாங்கும் யோகம் இருந்தால் அது two wheeler, four wheeler எது கிடைக்கும் என்று பார்த்து வாங்கி கொள்ளுங்கள். அல்லது

வீடு வாங்கும் யோகம் தற்போது இருக்கிறதா என்று பார்த்து #மாடி வீடா, பழைய வீடா, இல்லை லீசுக்கு வாங்கலாமா என்று ஜாதகத்தில் பார்த்து செலவு செய்யுங்கள். அல்லது சொத்து வாங்கும் நேரம் இது தானா என்று பார்த்து வாங்க வேண்டும், அதை விட்டு விட்டு சீப்பாக இடம் வருகிறது என்று வாங்கினால் பின்னாளில் வெயிட்டாக வில்லங்கம் வரும், அல்லது

திருமணம் செய்யும் காலம் இது தானா என்று பார்த்து செலவு செய்ய வேண்டும், அதைவிடுத்து சுப செலவு என்று இஷ்டத்துக்கு 10 பொருத்தம் மட்டும் பார்த்து அல்லது #குறி கேட்டு திருமணம் நடந்தால் வாழ்க்கை துனை #தற்குறியாக அமையும். அல்லது

தொழிலை விரிவுபடுத்தலாமா என ஜாதகம் பார்த்து முதலீடு போடுங்கள். நல்லது கிடைக்கும்.

நான் மேலே சொன்னது ஒரு உதாரணம் தான், அதனால் உங்கள் சுய ஜாதகத்தில் தற்போது என்ன செய்ய வேண்டும் என்று இருக்கும், அதற்கு தகுந்த படி செலவு செய்வதே #புத்திசாலி தனம்.

ஜாதகம் இல்லை என்றால் என்று கேட்டால் அவர்கள் நிலை வேறு.

அடுத்து. சனி 2ம் இடத்தை மூன்றாம் பார்வையால் பார்க்க போவது குடும்ப ஒற்றுமைக்கு உத்திரவாதம் கிடையாது, நீங்களே தேவையில்லாமல் #பேசி பிரச்சினைக்கு காரணமாக அமைவீர்கள். யோசித்து பேச வேண்டும்.

பணம் உங்கள் இஷ்ட படி சேர்க்க இயலாது, இருக்கும் பணத்தை கறைக்காமல் இருந்தால் சரி.

ஆரம்ப கல்வி பயிலுவோர் சற்று சிரமமான காலம் இது, படிப்பை விட ஜாலியாகவே இருக்க விரும்புவீர்கள்.

பேச்சால் பிழைக்கும் தொழில், வேலை செய்பவர்கள் வார்த்தையில் கவனம் தேவை, நீங்கள் பேசுவதை மற்றவர்கள் மாற்றி புரிந்து கொண்டு வேலைக்கு #உலை வைப்பார்கள்.

அடுத்து. சனி 6ம் வீட்டை நேர் பார்வையால் பார்க்க போவது #கடன் வாங்குவது இயலாது, கடனும் கிடைக்காது. மாறாக நீங்கள் கடன் கொடுக்க முடியும்.

போட்டி, பந்தயம், பரிட்சை இவற்றில் பாஸாவது குதிரை கொம்பாக இருக்கும். அதே சமயம் வம்பு வழக்கு என்று போனால் பணம் போகும், தீர்ப்பு சாதகமாக வராது. பாக பிரிவினை பகையை ஏற்படுத்தும்.

அப்படியே உங்கள் ஜாதகபடி கடன் ஆகும் சூழ்நிலை இருந்து கடன் வந்தால் அதை வைத்து தெரியாத ஒன்றை ஆரம்பித்தால் நஷ்டம் தான், மேலும் தற்போது #குரு மூலம் பணம் வந்து கொண்டு உள்ளது, அதனை வைத்து விரைய சனி ஆரம்பித்ததும் #கடனை அடைக்க முடியும்.

சுய தொழில் அல்லது கூட்டு தொழில் ஆரம்பிக்க கூடாது. அதே சமயம் நோயையும், எதிரியையும் ஒழித்து கட்ட இயலும். மன உறுதி கூடும்.

அடிமை வேலை செய்பவருக்கு நெருக்கடி கூடும், பகைத்து கொள்ள வேண்டாம் யாவரையும்.

அடுத்து. சனி 9ம் இடத்தை பத்தாம் பார்வையால் பார்ப்பது.

எவ்வளவு தான் உருன்டு புரண்டாலும் ஒட்டுவது தான் ஒட்டும் என்பதை அனுபவத்தில் உணருவீர்கள், அதை துவக்கி வைப்பது #சனிபகவான்.

என்ன தான் உன்மையாக உழைத்தாலும், இருந்தாலும், வாழ்ந்தாலும் #கெட்ட பெயர் எடுப்பீர்கள், கெட்ட பெயருக்கு நீங்கள் காரணமாக இருப்பீர்கள்.

மன திருப்தி, மன நிறைவு எதிலும் வராது, சொந்த தொழில் செய்பவர்கள் #நல்ல பெயர் எடுக்கவோ,அதிக லாபம் வரும் என்றோ முதலீடு போட வேண்டாம்.

அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களிடம் வந்து நீ இதை செய்தால் ஒகோ என வாழலாம் என்பதை நம்பி களத்தில் இறங்க கூடாது. அவர் பிறகு எஸ்கேப் ஆகி விடுவார்.

ஏஜெண்டுகளை நம்பி வெளி நாடு போக கூடாது.

தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வரும், அல்லது.

தந்தைக்கு உடல் ஆரோக்கிய பிரச்சினை, தந்தை சொத்து, தந்தை வழி உறவுகள், பூர்வீக சொத்து, தந்தை பண விஷயத்தில் பாதிப்புகள் வர ஆரம்பிக்கும்.

ஜோதிடத்தில் என்ன தான் ஜோதிடர்களாகிய நான் உள்பட பலரும் கணித்து #நெருப்பு சுடும் என்று பலன் சொன்னாலும் #சனிபகவான் நேரடியாக சுட வைத்து காட்டுவார், சந்தேகம் இருந்தால் #விருச்சிகம்,தனுசு,மகர ராசிக்காரர்களை கேட்டு பாருங்கள்.

important

மிதுனம்கடகம்துலாம்_மகரம் இந்த ராசிக்காரர்கள் தற்போது உங்களுடன் இருக்கும் நிலை இருந்தால் #நல்லது நடக்க கூடுதல் சிரமத்தை எதிர் கொள்ள நேரிடும்.

பரிகாரம்.

சனிக்கிழமை தோறும் #காலபைரவருக்கு வீட்டில் இருந்து
நல்லஎன்னை எடுத்து சென்று தீபம் ஏற்றுங்கள்.

எப்படியும் செலவு உண்டு, அதோடு கூலி தொழிலாளிக்கு சாப்பாடு வாங்கி கொடுங்கள்

அமாவாசை, முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி, தெவசம் இது போன்றவைகளை முறையாக கடை பிடியுங்கள்.

ஐயப்பன் விரதம் கண்கண்ட பரிகாரம்

வாயை கட்டுபடுத்தினாலே பாதி பரிகாரம், மாற்று திறனாளி,அநாதைகள் இவர்களுக்கு இயன்றதை அவர்கள் விருப்பம் எதுவோ அதனை கேட்டு வாங்கி கொடுங்கள்.

சனிபகவானை 7 1/2 யை முன்னிட்டு வழிபாடு எங்கேயும், எப்போதும் செய்ய கூடாது.

கும்பம் ஆரம்பம்.

Blog at WordPress.com.

%d