சனி பெயர்ச்சி பலன்கள் 2020 - 2023 விருச்சிகம் ராசி 7 1/2 சனி முற்றிலும் முடிகிறது | Sani Peyarchi 2020 Vrischika Rasi

சனிபெயர்ச்சி விருச்சிகம் ராசி (7 1/2 சனி முற்றிலும் முடிகிறது) 2020 – 2023

சனி உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் ஆட்சி பெற்று 5, 9, 12 ஆகிய இடங்களை பார்வை மூலம் பார்த்து பலனை தருவார்.

சனி உங்கள் ராசிக்கு 3,4 க்கு உரிய அதிபதி,
3—உங்களை முயற்சி செய்ய வைக்கும் அதிபதி
4—சுகாதிபதி, (கல்வி, சொத்து, தாய்) இவர் இந்த முறை மூன்றில் ஆட்சி ஆகி

உங்கள் ராசிக்கு,
5ம் இடமான, அதிர்ஷ்டம் இடத்தையும்
9ம் இடமான, பாக்கிய ஸ்தானத்தையும்
12ம் இடமான, விரைய ஸ்தானத்தையும்

பார்த்து இனி வரும் காலங்களில் நிச்சயம் நல்ல பலனை தருவார்.

நீங்கள் பட்ட கஷ்டத்தை இங்கு நான் பட்டியல் இட போவது இல்லை, ஏனெனில் அவ்வளவு இருக்கிறது சொல்லி ஆகாது.

இனி என்ன நல்லது நடக்கும் என்று பார்ப்பது தான் சரியாக இருக்கும்.

உங்கள் ராசிக்கு உண்டான மிக பெரிய குறை என்ன வென்றால் #உடனடியாக எதையும் செய்ய வேண்டும், அதே போல் மற்றவர்களும், நீங்கள் செய்யும் முயற்சிக்கும் உடனடியாக பலன் கிடைக்க வேண்டும் என்று நினைப்பது.

அதேபோல், சுற்றி வளைத்து பேசுவது, செய்வதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.

ஏங்க? நீங்கள் கஷ்ட பட்டது 7 ஆண்டுகள் மேலாக, சனி விலகிய உடன் மறு நாளே எப்படிங்க எல்லாம் கிடைக்கும். (புரிந்து கொள்ளுங்கள்)

இனி அதாவது அடுத்த ஆண்டு முதல்.

முதலில் எந்த செயல் செய்யவும் அசட்டு தனமான #தைரியம் வரும்.

எந்த முயற்சி இது நாள் வரை பலிக்கவில்லையோ அது நடக்க ஆரம்பிக்கும், கண்கூடாக.

குடும்ப பிரச்சினை தீருகிறது
நீங்கள் இனி சரியாக பேச முடியும்
நீங்கள் பேசுவதை மற்றவர்கள் இது வரை மாற்றி புரிந்து இருப்பார்கள், அந்த பிரச்சினை விலகுகிறது.

exam results,
job order,
government work,
police job selection,
medical seat,
Driver work
Red color users
any exam preparation இது போன்ற விஷயங்களில் நல்லது நடக்கும்,,இதில் நீங்கள் தோற்க மாட்டீர்கள், இனி மேல்.

பணம் முக்கியமாக கையில் தங்கும்,வரும், சேமிக்க முடியும்.

மண அழுத்தம் நீங்குகிறது, புதிய சிந்தனை மேலோங்கி புதிய வாழ்க்கைக்கு நீங்கள் செல்ல போறீங்க.

பகையாளி யார், எது என்று தெரிய வந்து இருக்கும், அதனை உதறித்தள்ளி விட்டு வேறு பாதையை எடுக்க போறிங்க.

இனிமேல்இப்படி தான்என சொல்வீங்க அடுத்த ஆண்டு முதல் .

சுய தொழில் செய்ய நினைப்பவர்கள் #தாராளமாக செய்ய ஆரம்பிக்கலாம். தடை இல்லை.

அரசு வேலைக்கு தடை இல்லை (சிலருக்கு கிடைத்து உள்ளது, பலருக்கும் கிடைக்க போகிறது).

வேறு வேலை மாறுவதாக இருந்தால் மாறலாம், நல்ல வேலை, நல்ல சம்பளம் தான் கிடைக்கும்.

important. கடன் அடைபடும் முயற்சி நடக்கும் இனி, என்ன கொடுத்த பணத்தை வாங்க #சன்டை போட வேண்டியது வரும்.

இனி பலருக்கும் 50 km க்குள் பயணங்கள் நல்ல படியாக, நல்லது நடக்கும் நிகழ்வாக அமையும்.

வாழ்க்கை துணை விஷயத்தில் மாற்றம் வந்து சமாதானம் கிடைக்கும், அல்லது கடும் பிரச்சினையை சந்தித்து வழக்கு தொடர்ந்தவர்களுக்கு தீர்ப்பு இருவருக்கும் ஏற்றவாறு சாதகமாக வரும்.

அசிங்கம், அவமானம், தலை குனிவு, அடிபடுதல், இது எல்லாம் கிடையாதுங்க , ஆரோக்கிய குறையை நீங்களே உங்களுக்கு தெரிந்த #வைத்தியத்தின் மூலம் சரி செய்து விடுவீங்க.

பலருக்கும் பரிகாரம் செய்தும் திருமணம்,குழந்தை பாக்கியம் நடக்காதவர்களுக்கு இனி அதற்கு உண்டான நல்ல பலன்கள் கிடைக்கும், பாருங்கள்.

நீங்கள் இருந்த வீடு, இடம் விளங்கவே இல்லை இது வரை, அந்த நிலை மாறி உங்களால் புன்னியம் பிறக்கும்.

அடுத்து, 5ம் வீட்டை சனி 3ம் பார்வையால் பார்ப்பதால், நல்லது நடக்க நீங்கள் தான் உழைத்து, சொந்த முயற்சியால் நல்லது நடத்தி கொள்ள முடியும். அதிர்ஷ்ட நிகழ்வுகள் நடக்கும் என்று காலத்தை கடத்திக்கொண்டு இருக்க வேண்டாம்.

உங்கள் சுய சிந்தனை உங்களுக்கு ஏற்றவாறு ஒத்து வரும், #கிரிமினல் புத்தியும் அவ்வப்போது #உலகம் எப்படி எல்லாம் நம்மை ஏமாற்றியது, நாம ஏன் இப்போது இப்படி செய்ய கூடாது என தோன்றும்,

அடுத்து, 9ம் இடத்தை சனி நேர் பார்வையால் பார்க்க போவதால் தந்தை வழி உதவியை எதிர்பார்த்து இருக்க மாட்டீர்கள்.

அடிக்கு அடி, உதைக்கு உதை என்ற மாறுபட்ட சிந்தனையில் மனம் போகும்.

நீ நல்லது செய்யல எனக்கு நான் ஏன் செய்ய வேண்டும் ?
என்ற மனப்பக்குவம் வரும், இனி நீங்கள் #கெட்ட பெயரை பற்றி கவலைப்பட மாட்டீர்கள்.

அடுத்து. 12ம் இடத்தை சனி 10ம் பார்வையால் பார்ப்பது #வீண் விரையம் கிடையாதுங்க, வெளி நாட்டையே நம்பி காலத்தை கடத்தியவர்கள், இனி உள்ளூரிலே பிழைக்க முடியும்.

அலைச்சல் உண்டு ஆனால் அது #ஞாயமானதாக இருக்கும். குறுகிய தூர இட நகர்வு உண்டு.

வீட்டு வேலை நடக்க ஆரம்பிக்கும்
புதிய வீடு அல்லது வேறு வீடு மாற்றம் வரும்
வேலை பிரச்சினை தீர்ந்து வேலையில் இதுவரை #பல்லை கடித்து கொண்டு இருந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்
சம்பள உயர்வு உண்டு, தொழிலை சரிவர கவனிக்க இயலும்.
தொழிலை விரிவுபடுத்தி வியபாரத்தை பெருக்க முடியும்.

முக்கியமாக, உங்களுடன் #மிதுனம்கடகம் மகரம்கும்பம் துலாம் இந்த ராசிகள் இருக்குமேயானால் எல்லோருக்கும் நல்லது உடனடியாக நடக்கிறது #எனக்கு மட்டும் உடனே நடக்க மாட்டேன்குது என புலம்பி தீர்ப்பீர்கள்.

பரிகாரம்_கடந்த 7 1/2 ஆண்டுகளில் எந்த தெய்வம் உங்களுக்கு நல்லது செய்ததோ அதனை தொடர்ந்து வழிபாடு செய்யுங்கள்(சனியை தவிர).

விருச்சிகம்பழைய வேகம் எடுக்கும்.

Blog at WordPress.com.

%d bloggers like this: